கல்வி கனெக்ஷன்ஸ் அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும்
நடத்தப்பட்டு வரும் Gala dinner 2014 நிகழ்வு நேற்று ஸ்காபுறோ chaandini Banquet ஹால் ல் நடைபெற்றது. தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவையாற்றுவதையே தனது கடமையாகக் கொண்டு உழைத்து வரும் வவுனியா மருத்துவமனை மருத்துவர் சத்தியமூர்த்தி அவர்கள் இம்முறையும் இந்நிகழ்வினில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கடந்த வருடம் போல் அல்லாது இம்முறை அதிகளவான இளம்வயதினரின் பங்களிப்பு கூடுதலான கவனத்தை ஈர்ந்திருந்த்தது குறிப்பிடக் கூடியது.

இதன் அமைப்பாளர்களான .சசி குணரட்ணம் , குணா நாகலிங்கம் அவர்களின் கடின உழைப்பால் இம்முறை அதிகளவிலான தொகையை அர்பணிப்பு உணர்வுடன் கூடிய சமுதாய மக்கள் மூலமாக பெருந்தொகையை திரட்ட உதவியாக இருந்தது குறிப்பிடக்கூடியது . சுனாமி மீட்பு நிதி சேர் நிகழ்வுக்கு பின் ஒரே நாளின் கனடிய தமிழர் வரலாற்றில் அதிகளவு தொகையான நிதி சேகரிப்பு நிகழ்வு இதுவாகும்
இந்த நிகழ்வில் கல்விக் கனக்சனால் (Kalvi Connections) சேகரிக்கப்பட்ட $ 100,000 நிதி தாயகத்தில் உள்ள கல்வி வளர்ச்சி அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டது, இந்த அறக்கட்டளையின் முக்கிய நோக்கம் தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மாவட்டப் பாடசாலைகளில் கல்விப் பொதுத்தராதரம் வரை கல்வி பயின்று முடித்தபின்னர் பல் கலைக் கழகங்களுக்கும் ஏனைய உயர் கல்வி வாய்ப்புள்ள நிறு வனங்களுக்கும் சென்று தமது உயர் கல்வியையும் தொழிற் கல்வியினையும் பெறுவதற்குப் போதிய கடனுதவியை வழங்குவதாகும்.
இந்த வாய்பினை ஏனைய வன்னி மாவட்டங்களுக்கும் விரிவாக்கும் அடிப்படை நோக்கம் கொண்டது இந்தத் திட்டம்.வங்கிகளின் கடனுதவிகளும் அரசாங்க நன்கொடைகளும் கிடைக்க வாய்ப்பின்றி எத்தனையோ மாணவர்கள் தமது படிப்பினைத் தொடரமுடியாதவர்களாக இருக்கின் றனர். பணத்தினைக் காரணம் காட்டி எத்தனையே பெற்றார்கள் திறமைமிக்க மாணவர்கள் பாடசாலைக்குச் செல்லுவதனை இடைநிறுத்தி விடுகின்றனர். இத்தகைய நிலை எந்தவொரு மாணவனுக்கும் நிகழாது தடுப்பதது என்தே இன்றைய வன்னியின் தேவையாகும்.
இலங்கையில் நடந்து முடிந்த போரினால் மக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டு வீடுகள் எரிக்கப்பட்டிருக்கலாம், நிறுவனங்கள், உடமைகள் தரைமட்டமாக்கப்பட்டிருக்கலாம், எல்லாவற்றையும் எங்களிடமிருந்து எடுத்துச் சென்றிருக்கலாம், அப்பாவி மக்கள் மீது வடுக்களையும் பெருங் காயங்களையும் உண்டாக்கியிருக்கலாம், ஆனால் எங்களது சொத்தான திறமையை , அறிவை எடுத்துச் செல்லமுடியாது, எங்கள் கல்விச் செல்வத்தை எங்களிலிருந்து பிரித்துச் செல்லமுடியாது என்று கல்வி கனெக்ஷன்ஸ் நிகழ்வு இம்முறை பெருமளவு வரவேற்புடன் நடந்து முடிந்தது