மரணத்திற்கு 10 மணிநேரத்திற்கு முன்பு நடந்த
ஒரு நெகிழ்ச்சியான திருமணம் ஒன்று நடந்துள்ளது. காண்போரை கண்ணீர் வரவழைக்கும் இந்த திருமணத்தின் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. பிலிப்பைன்ஸ் நாட்டில் Rowden Go Pangcoga என்ற 29 வயது நபர் Leizl என்ற 23 வயது பெண்ணை உயிருக்கு உயிராக காதலித்து வந்தார்.
வரும் ஜூலை மாதம் இவர்களுக்கு திருமணம் நடப்பதாக இருந்தது. இந்நிலையில் Rowden Go Pangcoga என்பவருக்கு கடந்த மே மாதம் கல்லீரலில் புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அவர் மணிலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
மருத்துவமனையிலேயே ஒரு அறையில் அலங்காரம் செய்யப்பட்டு படுத்த படுக்கையாக இருந்த Rowden Go Pangcoga என்பவருக்கு திருமண ஆடை அணிவித்து, மருத்துவர்கள் மற்றும் நர்சுகள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் கண்ணீருடன் இந்த திருமணத்தை நடத்தி வைத்தனர்.
திருமணம் முடிந்து மிகச்சரியாக 10 மணி நேரத்தில் Rowden Go Pangcoga மரணம் அடைந்தார். இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது உலகம் முழுவதும் இணையதளங்களில் பதிவாகி ஒருவருக்கொருவர் பகிர்ந்து வருகின்றனர். மூன்று நிமிடங்கள் மட்டுமே ஓடும் இந்த வீடியோவை காண்போர்கள் கண்டிப்பாக கண் கலங்குவார்கள்.

இந்நிலையில் அவருடைய புற்றுநோய் நாளுக்கு நாள் முற்றி தனது இறுதிக்கட்டத்தை நெருங்கினார். அவருடைய கல்லீரல் முழுவதும் செயலிழந்துவிட்டதால் அவர் 12 மணிநேரத்திற்குள் இறந்துவிடுவார் என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த Leizl , தனது காதலர் மரணம் அடைவதற்கு முன்னர் அவருடன் தன்னுடைய திருமணம் நடக்கவேண்டும் என பிடிவாதமாக இருந்ததால் வேறு வழியின்று அவர்கள் இருவருக்கும் திருமண ஏற்பாடு செய்யப்பட்டது.