வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியை ஆளுநர் அலுவலகத்தில்
சந்தித்துக் கலந்துரையாயுள்ளார். அதனை தொடர்ந்து வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பினைத் தொடர்ந்து முதலமைச்சரிடம் கருத்துக் கேட்பதற்கு நின்ற ஊடகவியலாளர்களை அங்கிருந்த அடையாளப்படுத்தப்படாத ஒருவர் பலவந்தமாக வெளியே தள்ளி முதலமைச்சரினைச் சந்திக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
இதனால் அவருடன் ஊடகவியலாளர் முரண்பட்டுக் கொள்ளவே, அங்கு வந்த முதலமைச்சரின் பிரத்தியோக செயலாளர், முதலமைச்சர் வைத்தியசாலையிலிருந்து ‘இன்று தான் வீட்டிற்குத் வந்தார் என்றும், உடல்நலக் குறைவாக இருப்பதினால் அவரால் உங்களைச் சந்திக்க முடியாது’ எனவும் தெரிவித்தார். இந்திய வெளிவிவகார அமைச்சின் இலங்கை, இந்தியா ,மாலைதீவு இணைச் செயலாளரான திருமதி சுஜித்ரா துரை சுவாமிநாதன் யாழ்ப்பாணத்துக்கு இன்று வெள்ளிக்கிழமை விஜயம் செய்துள்ளார்.
திருமதி சுஜித்ரா துரை சுவாமிநாதன் தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாணத்தில் நாளை வரை தங்கியிருப்பர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. விசேட ஹெலிக்கொப்டரிலேயே அக்குழுவினர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம்செய்தனர்.; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும் சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் அவர்கள் சந்தித்துப் பேசுவர் எனத் தெரியவருகிறது. இந்த குழுவில் வெளிவிவகார அமைச்சின் பிரதிச் செயலாளர் விஸ்வேஷ் நேம்கியும் அடங்குகின்றார்.