சிங்கள வரலாற்றை கூறும் மஹாவம்சம் நூலில் ஜனாதிபதி
மகிந்த ராஜபக்ஷ இலங்கையின் மன்னராகவும், கோத்தபாய ராஜபக்ஷ தளபதியாகவும் வர்ணிக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் தொடர்பான அத்தியாயங்கள் தற்போது எழுதப்பட்டு வருவதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இறுதி யுத்தத்தின் போது பொது மக்களின் ஒருவரேனும் உயிரிழக்காமல் போரை வெற்றி கொண்ட மன்னராக மகிந்த ராஜபக்ஷ சித்தரிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை இந்த யுத்தத்துடன் தொடர்புடைய சரத் பொன்சேகா, லக்ஸ்மன் ஹுலுகல்ல போன்ற அரசாங்கத்துக்கு எதிரானவர்கள் பெயர்கள் எவையும் அதில் உள்ளடக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் யாரும் இராணுவத்திடம் சரணடையவில்லை என்றும் அனைவரையும் இராணுவமே போராடி கைது செய்ததாகவும் எழுதப்படுகிறது.