இணையத்தின் முதுகெலும்பு என அழைக்கப்படும்
‘Backbone’ தகவல் பறிமாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இப்போது உள்ள காலகட்டங்கள் அனைத்தும் இணையத்தை மையமாக கொண்டு கடந்து வருகின்றன. இதில் பயன்படுத்தப்படும் தகவல் பறிமாற்றத்தை பற்றி எப்போதாவது நினைத்து பார்த்திருக்கிறீர்களா? மில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்திய வாக்காளர் தொகை, அமெரிக்காவின் மக்கள் தொகையை விட மூன்று மடங்கு பெரியது.இந்த வியக்கும் எண்ணை மிஞ்சும் வித்தை தான் ஒரு நொடிக்கு உலகம் முழுவதும் பறிமாற்றப்படும் தகவல்கள். நம்ப முடியாவிட்டாலும் இது தான் உண்மை. அதாவது 5 ஆண்டுகளுக்கு முன் நொடிக்கு 30 டெரா பைட்டுகள் என்ற இந்த அளவு கடந்த மாதம் 300 டெரா பைட்டுகளாக அதிகரித்துள்ளது. புரியும் படி சொன்னால் ஒரு டெரா பைட் என்பது கிட்டத்தட்ட 100 திரைப்படங்களுக்கு நிகரான அளவு இதன் படி பார்த்தால் 30,000 திரைப்படங்கள் பார்ப்பதற்கான தகவல் பறிமாற்றம் ஒவ்வொரு நொடியும் நடந்தபடி உள்ளது.
இந்த தகவல் பறிமாற்றம் ‘backbone’ எனப்படும் இணையத்தின் உள்கட்டமைப்பில் உள்ளது. இந்த இணையத்தின் பின்னெலும்பு பல கடல்களையும், மலைகளையும் தாண்டி, பல நாடுகளில் உள்ள இணைய சேவை நிறுவனங்களை இணைக்கிறது. இந்த நிறுவனங்கள் ‘router’ மூலமும், பல்வேறு இணைப்பு சாதனங்கள் வழியாகவும் சேவையை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சேர்க்கிறது.
இந்த வலுவான பின்னெலும்பை உருவாக்கி வாடிக்கையாளர்களை கவர ஃபைபர் ஆப்டிக் கேபிள் மூலம் ஃபேஸ்புக் நிறுவனம் ஐரேப்பாவிலும், கடல் வழியாக இந்தியா உட்பட ஆசிய நாடுகளிலும் தனது நெட்வொர்கை கட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
அதே போல் இந்த நிறுவனங்களில் குவிந்து கிடக்கும் பிரைவசி மற்றும் தனிப்பட்ட தகவல்கள் பற்றிய விழிப்புணர்வு மட்டுமல்லாமல், பாதுகாப்பாக இத்தகைய தகவல்களை மற்றவர்களிடம் பறிமாறும் பல தொழில்நுட்பம் வந்து விட்டன.
இருப்பினும் இவை இணையத்தில் இயங்க உள்கட்டமைப்பும் பின்னெலும்பும் தேவைப்படுகின்றன. இதற்காக புதுமையான மற்றும் புரட்சிகரமான முயற்சி ஒன்று எடுக்கப்பட்டு வருகிறது. அதன் பெயர் (mesh) வலைப்பின்னல் நெட்வொர்க். Nixi (national internet exchange of india)- இந்த அமைப்பானது இந்தியாவின் இணைய வசதிக்கு முதுகெலும்பாய் உள்ளது. நமக்கு தேவைப்படும் இணையம் மற்றும் இணையம் சார்ந்த வசதிகளை ISP (Internet service provider) மூலமாக இந்த அமைப்பு நம்மிடம் கொண்டு சேர்க்கிறது.