பக்கங்கள்

கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? -பாகம்-2 (காணொளி)


விடுதலைப் புலிகள் அமைப்பில் ஏற்பட்ட பிளவு,
கருணாவின் துரோகம், இந்தச் சம்பவங்களின் பின்னணி – என்பன பற்றியும், கருணா விவகாரத்தில்; இதுவரை வெளிவராத இரகசியங்கள் பற்றியும் ஆராய்கின்றது இந்தத் தொடர். 

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணாவின் பிரிவு எப்பொழுது ஆரம்பமானது? – இதுபற்றி ஆராய்கின்றது இந்த வார உண்மைகள் நிகழ்ச்சி.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத் தளபதியாகவிருந்த கேணல் கருணாவின் பிரிவு பற்றியும், அந்தப்பிரிவினால் விடுதலைப் புலிகள் அமைப்பில் ஏற்பட்ட பிளவு பற்றியும், அந்தப் பிளவினால் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் சந்தித்த பின்னடைவுகள் பற்றியும் ஆராய்கின்ற ஒரு களம்தான்; உண்மைகள் என்ற இந்தப் பெட்டக நிகழ்ச்சி


மூத்த படைப்பாளியும் ஆய்வாளருமான நிராச் டேவிட் அவர்களால் ஆய்வு தொகுக்கப்பட்ட இத்ததொடரானது வரலாறுகள் அனைவராலும் அறியப்பட வேண்டும் என்ற நோக்கில் பதிவிடப்படுகிறது.



கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? (பாகம்-1)

கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? (பாகம்-2)

கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? (பாகம்-3)

கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? (பாகம்-4)

கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? (பாகம்-5)

தண்ணியைத் தேடிச் சென்றமாணவிகள் உயிரிழந்த பரிதாபம்


வடக்கில் தலைவிரித்தாடும் வரட்சியால் கிளிநொச்சியில் மாணவிகள்
மூவர் பலியான பரிதாபம் இன்று நிகழ்ந்தேறியிருக்கிறது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, கிளிசொச்சி, கிருஸ்ணபுரம் பகுதியைச் சேர்ந்த மாணவிகள் மூவர் குளத்தில் குளிக்கச் சென்ற நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இந்த துயரச் சம்பவம் இன்று சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குளத்தில் குளிப்பதற்காக நான்கு பெண்கள் சென்றதுடன் அதில் மூவர் உயிழந்துள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், ஒருவரை இதுவரை காணவில்லை எனவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு இந்த வருடம் எதிர்கொள்ளவுள்ள மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
கிருஷ்ணபுரத்தைச் சேர்ந்த ச.தாட்சாயினி (வயது 17) அவரது சகோதரியான ச.நவதாரணி (வயது 11), விநாயகபுரத்தைச் சேர்ந்த எஸ்.நிசாந்தினி (வயது 19) ஆகியோரே குளத்தில் உள்ள சேற்றில் சிக்கி உயிரிழந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
தற்போது நிலவி வரும் வரட்சியினால் குறித்த மாணவிகளின் வீட்டில் உள்ள கிணறுகள் வற்றிய நிலையிலேயே குறித்த நால்வரும் குளத்தில் குளிக்க சென்றதாக உறவினர்கள் தெரிவித்தனர்.


புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வவுனியாவில் பேரணி


காணாமல்  போனோரின் உறவுகளும் சமூக அமைப்புக்களும்
இணைந்து முன்னெடுத்த காணாமல் போனோரைக் கண்டறிதல் தொடர்பிலான மாநாட்டுக்கு நெருக்கடி ஏற்படுத்திய பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

சர்வதேச காணாமல் போதலுக்கு எதிரான தினமான இன்று வவுனியாவில் வட மாகாணத்தின் ஐந்து மாவட்ட பிரஜைகள் குழு மற்றும் காணாமல் போனோரின் உறவுகளின் இணையம் இணைந்து பேரணியும் அதன் தொடராக மனுக் கையளித்தலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று காலை காணாமல் போதலுக்கு எதிரான சர்வதேச நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதன் போது அரசியல் பிரமுகர்களின் உரைகள் உட்பட பல்வெறு நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்ன.
இதனையடுத்து ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் அனுப்பி வைப்பதற்காக வவுனியா அரசாங்க அதிபரிடம் மகஜரொன்று கையளிப்பதற்கான ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந் நிகழ்வில்  பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சிவசக்தி ஆனந்தன். வினோ நோகதாரலிங்கம், எம். சுமந்திரன், எஸ். சரவணபவன், வட மாகாணசபை அமைச்சர்களான ப. சத்தியலிங்கம், பா. டெனிஸ்வரன், வட மாகாண சபை உறுப்பினர்கள் இ. இந்திரராஜா, எம். தியாகராஜா, து. ரவிகரன், சி. சிவமோகன், அனந்தி சசிதரன், சிராய்வா, ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடக இணைப்பாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சி. பாஸ்கரா மனித உரிமை செயற்பாட்டாளர் நிமல்கா பெர்னாண்டோ உட்பட பலரும் கலந்து கொண்டடிருந்தனர்.

இதற்கான நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்கள் ஊர்வலமாக வவுனியா மாவட்ட செயலகம் வரை செல்வதற்கு தீர்மானித்து நகரசபை மண்டபத்திற்கு வெளியில் வந்ததும் பொலிஸார் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். சுமந்திரனிடம் ஊர்வலமாக செல்ல அனுமதி இன்மையால் அவ்வாறு செல்ல வேண்டாம் எனக் கூறினர்.
எனினும் பாராளுமன்ற உறுப்பினர் நாம் எவருக்கும் தொந்தரவின்றி வீதியோராமாக எமது காரியமொன்றிற்காக செல்லப்போகின்றோம் என தெரிவித்து நடந்து சென்றனர்.
இவருடன் அரசியல் பிரமுகர்கள் காணாமல் போனோரின் உறவுகள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பலரும் சென்ற சமயம் நகரசபை வாயிலுக்கு அருகாமையில் கலவரத்தடுப்பு பொலிஸாரினால் தடைகள் போடப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இதன்போது ஊhவலமாக சென்றவர்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கலவரத்தடுப்பு பொலிஸாரை தள்ளியவாறு சிலர் பொலிஸாரை கடந்து சென்றனர்.
எனினும் ஏனையோரை பொலிஸார் தடுத்து நிறுத்தியதுடன் ஒவ்வொருவராக செல்லுமாறு பணித்தனர். இதன் பின்னர் பகுதி பகுதியாக வந்தவர்கள் மீண்டும் ஏ9 வீதிக்கு அருகாமையில் வைத்து ஒன்று திரண்டு பதாதைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக செல்ல முற்பட்டனர்.
இதனையடுத்து மீண்டும் பொலிஸார் தடை விதித்ததுடன் எக் காரணம் கொண்டும் செல்ல அனுமதிக்க மாட்டோம் என தொவித்தனா. இதனால் மீண்டும் ஊர்வலமாக சென்றவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டது.
இந் நிலையில் ஊர்வலமாக சென்றவர்கள் வீதியின் குறுக்காக அமர்ந்து கொண்டதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் போக்குவரத்து தடைப்பட்டுக்கொண்டது.
இவ்வாறு வீதியில் அமர்ந்தவர்கள் ஜனாதிபதிக்கு எதிராகவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பொலிஸாருக்கு எதிராக கோசங்களை எழுப்பினர்.
இவ்வாறான நிலையில் பொலிஸாருடன் பேச்சுக்களை நடத்திய செபமாலை அடிகளார் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கருத்து ஒருமைப்பாட்டுக்கு வந்து வீதியில் இருந்தவர்களிடம் இங்கு பல்வேறானவர்கள் நுழைந்துள்ளனர். எவ்விதமான பாரதூரமான நிகழ்வுகள் ஏறபடுவதற்கான வாய்ப்புகள் வரலாம் என்பதனாலும் இன்று மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் உட்பட யாரும் அற்ற நிலை காணப்படுவதனாலும் நாம் சமர்ப்பிக்கவுள்ள மகஜரை பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் கையளிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனா.
எனினும் சிலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும் முன்னின்று நிகழ்வினை நடத்துவதற்கு செயற்பட்ட பலரும் சம்மதம் தெரிவித்ததையடுத்து ஏ9 வீதியில் நீதிமன்ற வளாகத்திற்கு அண்மையில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் மகஜர் கையளிக்கப்பட்டன் பின்னர் அனைவரும் கலைந்து செனறிருந்தனர்.














விடுதலைப்புலிகளின் பிரிவு ஒரு வரலாற்று சம்பவத் தொடர்-1(காணொளி)


விடுதலைப் புலிகள் அமைப்பில் ஏற்பட்ட பிளவு,
கருணாவின் துரோகம், இந்தச் சம்பவங்களின் பின்னணி – என்பன பற்றியும், கருணா விவகாரத்தில்; இதுவரை வெளிவராத இரகசியங்கள் பற்றியும் ஆராய்கின்றது இந்தத் தொடர். 

கருணா அணியினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற சண்டைகள், அதன் பின்னர் இந்த இரண்டு தரப்பினருக்கும் இடையே தொடர்ந்த நிழல் யுத்தம், 4ம் கட்ட ஈழ யுத்தத்தில் கருணாவின் பிரிவு ஏற்படுத்திய தாக்கம், 

கருணா-புலிகள் பிரிவின் பின்னணியில் இருந்த இந்திய மற்றும் சர்வதேச புலனாய்வுத்துறையினரின்; கரங்கள்.. இப்படி பல விடயங்களை ஆராய்கின்றது உண்மைகள் என்ற இந்தப் பெட்டக நிகழ்ச்சி.


மூத்த படைப்பாளியும் ஆய்வாளருமான நிராச் டேவிட் அவர்களால் ஆய்வு தொகுக்கப்பட்ட இத்ததொடரானது வரலாறுகள் அனைவராலும் அறியப்பட வேண்டும் என்ற நோக்கில் பதிவிடப்படுகிறது. 


கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? (பாகம்-2)

கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? (பாகம்-3)

கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? (பாகம்-4)

கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? (பாகம்-5)

“தமிழீழக் கோரிக்கையை கைவிடுங்கள்” தமிழகத்தில் மூக்குடைபட்டாரா ‘சம்பந்தன்’ ?


“பாரதப் பிரதமர் நரேந்திரமோடி எம்முடனான உரையாடலின்
போது தலைவர் சம்பந்தனை இலங்கையின் கௌரவமான ஒரு தலைவர் என பாராட்டியது எமக்கு மிகுந்த பெருமையாக இருந்தது” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா சில நாட்களின் முன்னர் நெகிழ்ந்து போய் ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணல்கள் செய்திகளாக பத்திரிகைகளை அலங்கரித்திருந்தன. உண்மையில் சம்பந்தன் கௌரவம் மிக்க தலைவராக தன்னை அடையாளப்படுத்துவதற்கு கடந்த சில நாட்களாக மேற்கொண்டுவரும் பகீரப்பிரயத்தன முயற்சிகள் பற்றி வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வதற்கு தமிழ்லீடர் விருப்பார்வம் கொண்டிருக்கிறது.
சுவாமி சொன்னது ஒன்று, நடந்தது ஒன்று; பின்னணி என்ன?
ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மோடி சந்திப்பதாக இருந்தால் மஹிந்த அனுமதி வழங்கவேண்டும் எனத் தெரிவித்த பரபரப்பான செய்தி வெளியாகி இரண்டொரு நாட்களில் கூட்டமைப்பு இந்தியா பறந்தது, மோடியை சந்தித்தது சுஸ்மாவைச் சந்தித்தது தமிழகம் சென்றது போன்ற செய்திகள் எல்லாம் வெளிவந்தன. இவை எல்லாவற்றையும் பார்க்கும் போது “ஆட்டுவித்தார் யாரொருவர் ஆடாதாரே கண்ணா..” என்ற தென்னித்திய திரையிசைப்பாடலை கேட்கும்போது எழும் உணர்வு வெளிவருவதை தவிர்க்க முடியாது.
sampanthan-newsஇந்தியா – இலங்கை அரசின் இறுக்கமான உறவு நிலையின் வெளிப்பாடான நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே சம்பந்தன் குழுவின் இந்தியப்பயணம் அமைந்திருப்பதாகவே தெரிகிறது. இந்தத் திட்டத்தின் பின்னணியில் கௌரவ தலைவராக மோடியால் விழிக்கப்பட்ட இரா.சம்பந்தன் இருந்திருக்கலாம் என்றே எண்ணத் தோன்றுகிறது.
இந்திய மத்திய அரசு மாறினால் கொள்கை மாறுமா?
ஐ.நாவில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னிலையில் முதல் முறையாகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் முழுமையான காத்திரத்தன்மையை இல்லாமல் செய்த இந்தியா போக்குக்காக அந்தத் தீர்மானத்தினை ஆதரித்து வாக்களித்திருந்ததை எவரும் மறந்திருக்கப்போவதில்லை. அதன் தொடராக இறுதியாக விசாரணைக்குழு தொடர்பிலான தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது இந்திய அரசு சிங்கள அரசினை காப்பாற்றும் தனது உண்மையான முகத்தினை நேரடியாகவே வெளிப்படுத்தி குறித்த தீர்மானத்தினை எதிர்த்திருந்தது. அதனுடன் நின்றுவிடாது விசாரணைக்குழு தொடர்பில் இன்றுவரையில் எதிர்க்கருத்துக்களையே வெளியிட்டுவருகிறது.
இலங்கை அரசு அனுமதி மறுத்திருந்தாலும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சர்வதேச விசாரணைக்குழு இலங்கைக்குள் செல்லாமலேயே தனது விசாரணைகளை முன்னெடுத்துவருகிறது. இந்த விசாரணை முடிவு எப்படியும் சிங்கள அரசுக்கு பலத்த நெருக்கடியை கொடுக்கத்தான் போகிறது என்பதை யார் தலையைக் கொடுத்தாலும் தடுத்துவிடமுடியாது என்பதே நிலைமை. சிங்கள அரசும் அதன் படைகளும் இறுதிப் போரின் போது இனப்படுகொலையை நிகழ்த்திக்கொண்டு தமிழர் தாயகத்தினை ஆக்கிரமிப்புச் செய்தவேளை மேற்குலகு விடுத்த அழுத்தங்கள், நெருக்கடிகளிலிருந்து சிங்கள அரசை காப்பாற்றியது இந்திய மத்திய அரசு தான். எனவே விசாரணையின் முடிவில் சொல்லப்படப்போகும் செய்தி இன அழிப்புக்கு ஒத்துழைத்த இந்தியாவை நோக்கியதாகவும் அமையத்தான் போகிறது. இந்தியாவின் மத்தியில் ஆட்சி மாறியிருந்தாலும் கொள்கை வகுப்பு சக்திகளாக இருக்கப்போகிறவர்கள் என்றுமே ஒரே வர்க்கம் தான். எனவே இந்தியாவின் ஆட்சி மாற்றம் என்பது ஈழத்தமிழர் விவகாரத்தில் ஒரே நிலைப்பாட்டில் தான் இருக்கப்போகிறது.
மோடி – கூட்டமைப்பு சந்திப்பு நாடகம்
இந்தச் சந்தர்ப்பத்தில் சிங்கள அரசு எதிர்கொள்ளும் உடனடியான நெருக்கடியைச் சமாளிப்பதற்கு கூட்டமைப்பு – மோடி சந்திப்பு நாடகம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. நெருக்கடியான சந்தர்ப்பங்களில் எல்லாம் சம்பந்தனை அழைத்து ஆதரவு தேடிக்கொள்ளும் மஹிந்த ஒரு படி மேலே நகர்ந்து இந்தியப் பிரதமர் ஊடாக தனது நாடகத்தினை முன்னெடுத்திருக்கிறார். ஏற்கனவே மஹிந்தவின் செல்லப்பிள்ளையாக விளங்கிவருகின்ற சம்பந்தன், சுமந்திரன் தரப்பு அதற்கு சிறப்பான ஒத்திகைகளையும் கொடுத்து நாடகத்தின் காத்திரத்தன்மையை வலுப்படுத்தியிருக்கிறது.
சம்பந்தனின் அதி உச்ச இராஜதந்திரச் சூழ்ச்சி
இந்த இடத்தில் ஒரே நேரத்தில் இரண்டு நாட்டுத் தலைவர்களையும் சமாளிக்கும் அதி உயர் இராஜதந்திரச் சூழ்ச்சியைக் கையாண்டிருக்கிறார் சம்பந்தன். அதாவது “ஒரு எறியில் இரண்டு மாங்காய்கள்” என்பதன் அடிப்படையில் சம்பந்தன், மோடியைச் சந்தித்த போது நீங்கள் எதிர்பார்க்கும் தீர்வு என்ன? என சம்பந்தன் குழுவைப் பார்த்த மோடி கேள்வி எழுப்பியிருக்கிறார். இதற்காகவே 60 ஆண்டுகளாக தவம் கிடந்த சம்பந்தன் “13” ஆவது திருத்தச் சட்டத்தினை முதலில் நடைமுறைப்படுத்தவேண்டும் என்பதுடன் பிரிக்கப்படாத இலங்கைக்குள் தான் தீர்வு வேண்டும் என்று கோரியிருக்கின்றார். தமிழ் மக்களின் பேராதரவைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்வாறான ஒரு கோரிக்கையினை முன்வைப்பதால் அதனைப் பெற்றுக்கொள்வதற்காக பாடுபடுவது மிக மிக இலகுவானது என்பதை உணர்ந்து கொண்ட மோடி இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக சம்பந்தன் குழுவிற்கு வாக்குறுதியும் அளித்துவிட்டார்.
இந்திய அரசு விரும்பவில்லை அதனால் பிரிவினையை கோர முடியாது
இதனை எதிர்பார்த்த சம்பந்தன் சந்திப்பு முடிந்ததும் முடியாததுமாக ஊடகவியலாளர்களிடம் மோடியுடனான சந்திப்புத் தொடர்பில் கதைகளை அவிழ்த்துவிட்டார்.. “இந்திய அரசு இலங்கையில் பிரிவினையை விரும்பவில்லை, எனவே அது தொடர்பில் நாங்கள் கோர முடியாது” இது சம்பந்தன் தெரிவித்த கருத்தின் பிரதான சாராம்சம். சம்பந்தனைப் பார்த்து ஒரு கேள்வியை முன்வைக்கலாம்.. இந்திய அரசு விரும்பினால்தான் நீங்கள் உங்கள் குடும்பத்தில் கூட உங்கள் அந்தரங்க நடவடிக்கைகளை முன்னெடுப்பீர்களா? என்று கேட்கக் தோன்றுகின்றது.
எங்கள் பிரச்சினை அறுபது ஆண்டுகளைக் கடந்தது. எமது விடுதலைக்காக பல இலட்சம் உயிர்கள் விலையாகியிருக்கின்றன. பல இலட்சம் உயிர்கள் அங்கங்களை இழந்திருக்கிறார்கள். பல்லாயிரம் விதவைகள், அனாதைகள் உருவாகியிருக்கிறார். இவையெல்லாம் சம்ந்தனின் அறளைக் கண்களுக்குத் தெரியவில்லையா? இந்திய அரசு தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்கத்தேவையில்லை என்று முடிவெடுத்தால்.. இந்தியா முடிவெடுத்துவிட்டது எனவே எங்களுக்கு தீர்வு தேவையில்லை என்று முடிவெடுக்கப்போகிறாரா சம்பந்தன்? சர்வதேச அரங்கில் சிங்கள அரசு செல்லும் போக்கு மிக மோசமான நிலையினை நோக்கியே செல்கிறது என்பதும் தவிர்க்கமுடியாத நிலையில் தமிழ் மக்களுக்கு காத்திரமான தீர்வு ஒன்றை வழங்குவதற்கான புறச்சூழலை சிங்கள அரசு எதிர்கொளும் என்பதும் இலங்கையின் மிக மூத்த அரசியல்வாதிகளில் ஒருவராக சிங்கள ஆட்சியாளர்களால் மதிக்கப்படுகிற சம்பந்தனால் ஏன் புரிந்துகொள்ள முடியவில்லை?
எதுவுமே இல்லாத 13ஆவது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்துமாறு சம்பந்தன் அவசர அவசரமாக இந்திய அரசின் ஊடாக இந்தச் சந்தர்ப்பத்தில் கோருவதை எந்த நோக்கில் பார்ப்பது?
டக்ளஸூம் மோடிக்கு நன்றி தெரிவிப்பு
இந்த இடத்தில் இன்னொரு விடயத்தினையும் இந்தச் சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டே ஆகவேண்டும், சிங்கள அரசின் அசைக்கமுடியாத நம்பிக்கை நட்சத்திரமாக காலாகாலமாக விளங்கி வருகின்ற ஈபிடிபியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் மோடி வழங்கிய வாக்குறுதிக்காக நன்றி தெரிவித்திருக்கின்றார். சிங்கள அரசின் அங்கத்துவ அமைச்சராக விளங்குகின்ற டக்ளஸ் தேவானந்தாவே அந்தத் தீர்வினை ஆதரிக்கும் நிலையில் அதன் காத்திரத்தன்மை தொடர்பில் நீண்ட விளக்கம் தேவையில்லை என்றே தோன்றுகிறது.
கூட்டமைப்பு மக்களிடம் கோரிய தீர்வுத்திட்ட ஆலோசனை எங்கே?
இதனிடையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் இறுதித் தீர்வு தொடர்பில் மக்களிடம் இருந்து கருத்துக்களைக் கோரியிருந்ததே? அந்தக் கருத்துக்கள் எந்த வகையில் வந்தன, அவற்றில் எவற்றையாவது பரிசீலித்தார்களா? போன்ற கேள்விகளை யாரிடம் கேட்பது? அல்லது இவையும் மக்களை ஏமாற்றும் ஒரு வகை உத்திதானா?
விக்கியை கழற்றிவிட்டுச் சென்றதா சம்பந்தன் குழு?
இதற்கு முன்பாக இன்னொரு தகவலும் வெளியாகியிருக்கிறது, சம்பந்தன் குழு இந்தியா செல்லும் போது வடக்கு மாகாணத்திற்கு தென்னிலங்கையிலிருந்து இறக்குமதியாகியிருந்த முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை கழற்றிவிட்டுச் சென்றது தான் அந்தச் செய்தி. விக்கினேஸ்வரன் தென்னிலங்கையிலிருந்து இறக்குமதியாகிருந்த போதிலும் வடக்கு மாகாணசபையில் ஆளுநருடனும் பிரதமன செயலாளருடனும் அன்றாடம் நடைபெறும் இழுபறிகளால் மிக நொந்து நூலாகியிருப்பதாக தெரிகிறது. 13ஆவது திருத்தச் சட்டத்தினால் எதனையும் செய்ய முடியாது என்று வெளியிலிருப்பவர்களை விடவும் கூடுதலாக தற்போது பட்டுணர்ந்து தெரிந்துவைத்திருக்கும் ஒரே நபராக விக்கினேஸ்வரனே விளங்குவது முக்கியவிடயமாகும். இதன் காரணமாக விக்னேஸ்வரனை அழைத்துச் சென்றால் விக்னேஸ்வரன் தயவு செய்து 13 வேண்டாம் என்று மோடியிடம் மன்றாடினாலும் மன்றாடுவதற்கான சாத்தியம் உள்ளதாக சம்பந்தன் தரப்பு கருதி முடிவெடுத்திருக்கிறது. இதனிடையே விக்கினேஸ்வரனை சம்பந்தன் தரப்பு இந்தியாவுக்கு அழைக்காமை தொடர்பில் இருவருக்கு இடையில் சிறிய அளவிலான முரண்பாடுகள் ஏற்பட்டிருப்பதாக சில அரசல் புரசலான தகவல்கள் யாழ்ப்பாணத்து ஊடகவியலாளர்கள் மட்டத்தில் அடிபடுகின்றன.
இதன் பின்னர் விக்கினேஸ்வரனைக் கழற்றிவிட்டு தனது நம்பிக்கை நட்சத்திரங்கள் புடை சூழ இந்தியத் தலைநகருக்கு எழுந்தருளிய சம்பந்தன் அங்கு 13ஆவது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்தினால் தனது இந்தப் பிறவிக்கான பலனை அடைந்துவிடுவேன் என்பது போன்று வழிந்து தள்ளியிருக்கிறார்.
“கரும்பு தின்னக்கூலி வேண்டுமா?” என்பது போல எதுவுமே அற்ற தீர்வினை நடைமுறைப்படுத்துமாறு மஹிந்தவைக் கோரலாம் என்பதில் மோடிக்கு எந்தத் தயக்கமும் இருக்கவில்லை எனவே அவரும் உடனேயே உடன்பட்டுவிட்டார். இதில் இன்னொரு விடயத்தினையும் நோக்கலாம், ஒரு தரப்பு ஒரு தீர்வினை சுட்டிக்காட்டுகின்ற போது எதிர்த் தரப்பு அந்தத் தீர்வில் சில விடயங்களை நீக்கவேண்டும் என்று வலியுறுத்தலாம்.. ஆகவே வடக்கு மாகாண சபைக்கு தற்போது உள்ள அதிகாரங்களுக்கும் குறைந்த எதுவும் அற்ற ஒரு தீர்வு தமிழ் மக்களின் தலையில் கட்டியடிக்கப்படலாம்.
தமிழகத் தலைவர்களின் தலையில் மிளகாய் அரைக்க முயன்றார் சம்பந்தன்
மேற்குறித்த விடயங்களை தொகுத்துப் பார்க்கின்ற போது சம்பந்தன் குழுவின் இந்தியப் பயணம் உணர்த்தும் செய்தியை வாசகர்கள் இலகுவில் புரிந்துகொள்ளமுடியும். இந்த இடத்தில் மஹிந்த விசுவாசத்தை வலுப்படுத்தும் நோக்கில் இரா.சம்பந்தன் ஒரு படி மேலே சென்று தமிழகத் தலைவர்களின் தலையில் மிளகாய் அரைப்பதற்கு முனைந்து மூக்குடைப்பட்டிருக்கிறார்.
இலங்கையில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நாங்களே தமிழீழம் தொடர்பிலோ, நாட்டைப் பிரிப்பது தொடர்பிலோ கோரவில்லை. தமிழ்நாட்டில் இருப்பவர்கள் தமிழீழக் கோரிக்கையினைக் கைவிடவேண்டும் என்பதை மோடி உடனான சந்திப்பின் பின்னர் சூசகமாக தெரிவித்த சம்பந்தன் அதனை நேரடியாக தமிழகத்தில் தெரிவிக்கவும் முனைந்திருக்கிறார். மோடியுடனான சந்திப்பின் பின்னர் கருத்துத் தெரிவித்த சம்பந்தன்,
இந்தியப் பிரதமரை சந்திக்கும் நீங்கள், தமிழகத்தின் அரசியல் தலைவர்களின் தலையீட்டை வேண்டாம் என்று மறுப்பது ஏன் என்று சம்பந்தனிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த சம்பந்தன், “நாங்கள் யாரையும் வெறுக்கவில்லை, தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் மற்றும் மக்களின் பங்களிப்பை முழுமையாக வரவேற்போம் என்றார்.
ஆனால், இதற்குத் தேவையான செயற்பாடுகள் அனைத்தும் ஒற்றுமையாகவும் ஒருமனதோடும் நடைபெற வேண்டும் என்று விரும்புவதாக அவர் பதிலளித்தார்” எனவே சம்பந்தனின் கருத்தின் அடிப்படையில் ஒரு மனதோடு எனக் குறிப்பிடுவதன் சாராம்சம் என்ன? சம்பந்தனும், மோடியும் தெரிவிக்கும் அதிகாரம் எதுவும் அற்ற 13ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலான தீர்வினை தமிழகமும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதா?  என்பதை சம்பந்தன் விபரிப்பாரா? ஆக சம்பந்தனின் கருத்தின் தொனி, தமிழ்நாட்டில் முன்னெடுக்கப்படும் தமிழீழக் கோரிக்கையினைக் கைவிடவேண்டும் என்பது தான் என்பதை இலகுவில் புரிந்துகொள்ளலாம்.
தமிழகத்தில் மூக்குடைபட்ட சம்பந்தன்
இதனுடன் நின்றுவிடாத சம்பந்தன், தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா கடும் நிலைப்பாட்டில் வைத்திருக்கின்ற தமிழீழக் கொள்கையைக் கைவிடுங்கள் எனக் கோருவதற்காக தமிழகம் சென்றிருக்கிறார்.
இறுதியில் அ.தி.மு.கவின் சாதாரண தலைவர்களைக் கூட சந்திக்க முடியாத நிலையில் வெறுங்கையுடன் திரும்பத் தயாராகியிருப்பதாகத் தெரிகிறது. புலத்தில் பதவிக்காக மோதிக்கொண்டு புலம்பெயர் மக்கள் மத்தியில் பிளவுகள் தோற்றுவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது உலகத் தமிழ் மக்களுக்கு இருக்கும் ஒரே அசைக்கமுடியாத நம்பிக்கை தமிழகம் என்பதை சம்பந்தன் புரிந்துகொள்ள வேண்டும்.
மோடியை சந்தித்த சம்பந்தனை தமிழக முதல்வர் சந்திக்காமை சம்பந்தனுக்கும் மஹிந்த தரப்புக்கும் பேரடியாகும். வரலாற்றில் தமிழ் மக்களுக்கு தமிழக முதல்வர் செய்த பேருதவிகளில் ஒன்றாக சம்பந்தனை சந்திக்காமல் தமிழக முதல்வர் தவிர்த்தமையை ஒரு முக்கியவிடயமாக பதிவு செய்வதில் தவறில்லை.
வரலாறு வரலாறுகளையே பதிவு செய்யும்!
-தமிழ்லீடர்-

இன்றையநாள் செய்தி தொகுப்பு

இன்றையநாள் செய்தி தொகுப்பு

1.இலங்கையின் விமர்சனங்களால் தான் பாதிப்படையவில்லை என்கிறார் நவநீதம் பிள்ளை
2.மனோ கணேசனுடனான செவ்வி



மனோ கணேசனுடனான செவ்வி

 

கூட்டமைப்பின் இந்திய சந்திப்பு -கூட்டமைப்புக்குள் குழப்பமா ?


எதுவுமே இல்லாத 13ஆவது திருத்தச் சட்டம் குறித்து
பேசுவதில் எவ்விதப் பயனும் இல்லை. அது மக்களுக்கு செய்யும் துரோகம்! அனந்தி

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்தியப் பயணத்தை தான் பத்திரிகை வாயிலாகவே அறிந்துகொண்டதாக வட மாகாண சபை தமிழ்க் கூட்டமைப்பு உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

எதுவுமே இல்லாத 13 ஆவது திருத்தச் சட்டம் குறித்து பேசுவதில் எவ்விதப் பயனும் இல்லை, அது மக்களுக்கு செய்யும் துரோகம் என்றும் அவர் கூறினார்.

இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தமிழகத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து இந்தியப் பயணம் குறித்து விளக்கமளித்தார். 

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு இந்திய அரசின் மூலம் நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்திய பயணம் பற்றியும், 13ஆவது திருத்தச் சட்டத்தை வலுப்படுத்த இந்தியா மேற்கொள்ளும் முயற்சி குறித்தும் எமது செய்தியாளர், அனந்தி சசிதரனைத் தொடர்புகொண்டு கேட்டார்.


அனந்தி சசிதரனுடனான முழுமையான பேட்டி

 

நல்லூரில் காவடி ஆடிய 51 ஆவது படையணி -காணொளி இணைப்பு


முள்ளிவாய்க்கால் இனவழிப்பு

ஜெனிவா நெருக்குவாரங்களின் மத்தியில் வாத்திய மேளதாளங்களுடன் முத்திரை சந்தியினில் இறக்கப்பட்ட படைத்தரப்பு பக்தர்கள் ஊர்வலமாக நல்லூரிற்கு படையெடுத்திருந்தனர்.

பலரது கைகளினில் அர்ச்சனை தட்டுகள் கூட இருந்திருந்தன. பௌத்தர்களது அனுட்டானத்திற்கான ஆடையான வெள்ளை சாரங்களுடன் சிப்பாய்களும் வெள்ளை சேலைகளுடன் பெண் சிப்பாய்களும் ஆலயத்தை ஆக்கிரமித்துக்கொண்டனர்.

யாழ்.பருத்தித்துறை வீதியினூடாக அவர்களது காவடி ஊர்வலங்கள் நகர்ந்திருந்தன.நீண்ட நேரம் பயணித்த ஊர்வலத்திற்காக போக்குவரத்தை சீர் செய்வதில் இராணுவ காவல்துறையுடன் இணைந்து உள்ளுர் காவல்துறையினரும் பணியாற்றியிருந்தனர்.

வாகன போக்குவரத்துக்கள் தடுக்கப்பட்டுமிருந்தது வலிகாமத்தினில் நிலைகொண்டுள்ள 51 வது படைப்பிரிவை சேர்ந்த படையினரது இன்றைய நல்லூரிற்கான படையெடுப்பினால் உள்ளுர் பக்தர்களது வழிபாடு இன்று மணித்தியாலக்கணக்கினில் தடைப்பட்டு போயிருந்தமை தனியானதொரு கதையாகும்.









இன்றையநாள் செய்தி தொகுப்பு


இன்றையநாள் செய்தி தொகுப்பு

1.இலங்கையின் விமர்சனங்களால் தான் பாதிப்படையவில்லை என்கிறார் நவநீதம் பிள்ளை
2.மனோ கணேசனுடனான செவ்வி



மனோ கணேசனுடனான செவ்வி

 

அரசை சினங் கொள்ள வைத்த கூட்டமைப்பின் புதுடில்லி பயணம்


தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் இந்­திய விஜ­ய­மா­னது,
மூன்று விடயங்­களைத் தெளி­வு­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. முத­லா­வது விடயம், இந்­தி­யாவின் புதிய அர­சாங்கம், இந்­தி­யா­வினால் 27 வரு­டங்­க­ளுக்கு முன்னர் முன்வைத்த, இலங்­கையின் 13 ஆவது அர­சியல் திருத்தச் சட்­டத்தின் கீழ் அதி­கா­ரங்­களைப் பர­வ­லாக்கி, சிறு­பான்மை இன மக்­க­ளுக்கு ஓர் அர­சியல் தீர்வை ஏற்­ப­டுத்த வேண்டும் என்­பதில் அக்­க­றையும் ஆர்­வமும் கொண்­டி­ருக்­கின்­றது. 

இரண்­டா­வது விடயம், இலங்கை இந்­திய ஒப்­பந்­தத்தின் கீழ் கொண்டு வரப்­பட்ட 13 ஆவது அர­சியல் திருத்தச் சட்­ட­மா­னது, தமிழ் பேசும் மக்­களின் அர­சியல் பிரச்­சி­னைக்கு முழு­மை­யான தீர்வைத் தரப்­போ­வ­தில்லை என்ற திருப்தி இல்­லாத போதிலும், யுத்­தத்­திற்குப் பின்னர் நாளுக்கு நாள் நெருக்­க­டிகள் அதி­க­ரித்து, மோச­மாகிச் செல்­கின்ற நிலை­மையைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக 13 ஆவது திருத்­தத்தின் அடிப்­ப­டையில், சற்று அதற்கு அப்பால் செல்­லத்­தக்க ஒரு தீர்வை ஏற்­றுக்­கொள்­வ­தற்கு தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு தயா­ராக இருக்­கின்­றது. 

மூன்­றா­வது விடயம், நீண்­ட­கா­ல­மாக, புரை­யோ­டிப்­போ­யுள்ள இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந் த­ர­மாக இல்­லா­விட்­டாலும், தற்­கா­லி­க­மா­க­வா­வது ஓர் அர­சியல் தீர்வைக் காண்­ப­தற்­கு­ரிய சந்­தர்ப்­பமும் வாய்ப்பும் ஏற்­பட்­டி­ருக்­கின்ற போதிலும், அத்­த­கைய தீர்வை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு இலங்கை அர­சாங்கம் தயா­ராக இல்லை. 

பலராலும் வலி­யு­றுத்­தப்­ப­டு­வதைப் போன்ற அதி­காரப் பர­வ­லாக்­க­லுடன் கூடிய அர­சியல் தீர்­வொன்றை சிறு­பான்­மை­யி­ன­ருக்கு இந்த நாட்டில் வழங்கப் போவ­தில்லை. இன, சமூக அடை­யா­ள­மற்­ற­வர்­க­ளாக பௌத்த இலங்­கை­யர்கள் என்ற ஒற்றை அடை­யா­ளத்தின் கீழ் சிறு­பான்­மை­யினர் வர­வேண்டும் என்ற மறை­மு­க­மான நிகழ்ச்சி நிர­லையே இலங்கை அர­சாங்கம் தொடர்ந்து முன்­னெ­டுக்கப் போகின்­றது என்ற மூன்று விட­யங்கள் தெளி­வா­கி­யி­ருக்­கின்­றன. 

இந்­திய சந்­திப்பும் இலங்கை அர­சாங்­கத்தின் ஏமாற்­றமும் 

இந்­தி­யாவின் அண்­மைய பொதுத் தேர்­தலில் அந்த நாட்டின் பாரம்­ப­ரிய அர­சியல் செல்­வாக்கு மிக்க காங்­கிரஸ் கட்சி படு­தோல்­வி­ய­டைந்­தது. இந்தத் தேர்­தலில் அங்கு ஓர் ஆட்சி மாற்றம் ஏற்­படும் என்ற உறு­தி­யான எதிர்­பா­ர்ப்பு நில­வி­யது. 

அதற்­கான அர­சியல் சூழ்­நி­லைகள் கனிந்­தி­ருந்­தமை தெளி­வாகத் தெரிந்­தி­ருந்­தது. ஆயினும் பார­தத் தின் பழம்­பெரும் கட்­சியும், வர­லாற்றுப் புகழ் மிக்க பல அர­சியல் தலை­வர்­களைக் கொண்­டி­ருந்­த­து­மான காங்­கிரஸ் கட்சி பல இடங்­களில் கட்டுப் பணத்தை இழக்கும் அள­வுக்கு இந்தத் தேர்தல் தோல்வி மோச­மா­கி­யி­ருந்­தது. 

அத்­த­கைய ஆட்சி மாற்­றத்தின் பின்னர் அதி­கா­ரத்தைக் கைப்­பற்­றி­யுள்ள பா.ஜ.க. அர­ சாங்­கத்தின் அழைப்­பை­யேற்று, தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பினர் புது­டில்லி சென்­றி­ருந்­தனர். மேலோட்­ட­மான பார்­வையில் இலங்­கைக் கும் இந்­தி­யா­வுக்கும் இடையில் நீண்ட கால­மாக நிலவி வரு­கின்ற ஓர் அர­சியல் உறவின் பின்­ன­ணியில் – போரினால் பாதிக்­கப்­பட்டு போர் முடி­வுக்கு வந்த பின்பும், மீட்­சி­யின்றி தவித்துக் கொண்­டி­ருக்­கின்ற சிறு­பான்மை இன மக்­களின் அர­சியல் தலை­வர்­க­ளு­ட­னான ஓர் அறி­முக சந்­திப்­புக்­கான அழைப்­பாக புதிய இந்­திய அரசின் இந்த அழைப்பை நோக்­கலாம். 

எனினும், யுத்த காலத்­தி­லும்­சரி, அதற்கு முன்­ன­ரான காலப்­ப­கு­தி­யி­லும்­சரி, யுத்தம் முடி­வ­டைந்த பின்­ன­ரும்­சரி, இலங்­கையின் இனப்­பி­ரச்­சினை விவ­கா­ரத்தில் - ஓர் இரண்­டறக் கலந்த நிலை­மை­யி­லான கொள்­கையைக் கொண்­டுள்ள இந்­தி­யாவின் புதிய அர­சாங்­கத்­தி­ன­ருக்கு, தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பைச் சந்­திக்க வேண்­டிய ஓர் அர­சியல் தேவை இருக்­கின்­றது. 

அதற்­கா­கவே கூட்­ட­மைப்பைச் சந்­திப்­ப­தற்கு புது­டில்லி அழைப்பு விடுத்­தி­ருந்­தது என்று கரு­து­வ­திலும் தவ­றி­ருக்க முடி­யாது. இலங்­கையின் இனப்­பி­ரச்­சி­னையில் இந்­தியா நீண்­ட­கா­ல­மா­கவே ஈடு­பாடு காட்டி வந்­துள்­ளது. பல சந்­தர்ப்­பங்­களில் அது நேர­டி­யா­கவும், மறை­மு­க­மா­கவும் இனப்­பி­ரச்­சினை விவ­கா­ரத்தில் தலை­யிட்டுச் செயற்­பட்­டி­ருக்­கின்­றது. 

குறிப்­பாகச் சொல்­லப்­போனால், கறுப்பு ஜுலை கல­வரம் என்­ற­ழைக்­கப்­ப­டு­கின்ற 1983 ஆம் ஆண்டு இனக்­க­ல­வ­ரத்தின் போது இந்­தியா நேர­டி­யாகத் தலை­யிட்டு, பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­களை, இலங்­கையின் பாரம்­ப­ரிய தமிழ்ப்­பி­ர­தே­ச­மா­கிய யாழ்ப்­பா­ணத்­திற்கும், தனது மாநி­லங்­களில் ஒன்­றா­கிய தமிழ்­நாட்­டுக்கும், அப­ய­ம­ளிப்­ப­தற்­காகக் கப்­பல்கள் மூல­மாக அழைத்துச் செல்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்­தது. 

இலங்கை அர­சாங்­கத்தின் வேண்­டு­கோ­ளை­யேற்று இந்­தியா அப்­போது இந்த நட­வ­டிக்­கையை மேற்­கொள்­ள­வில்லை. கறுப்பு ஜுலை கல­வ­ரத்தின் மோச­மான (மிரு­கத்­த­ன­மா­னது என்று கூட வர்­ணிக்­கப்­ப­டு­கின்­றது) நிலை­மையை உணர்ந்தும், பாதிக்­கப்­பட்ட மக்கள் தரப்­பி­லான வேண்­டு­கோளை ஏற்றும் அப்­போ­தைய இந்­திய அரசு தானா­கவே பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­க­ளுக்கு உதவ முன்­வந்­தி­ருந்­தது. 

அதனைத் தொடர்ந்து இலங்கைக் குடி­மக்­களின் ஒரு­சா­ரா­ரா­கிய தமிழ் மக்­களின் சார்பில் இலங்கை அர­சாங்­கத்­துடன், இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காணும் நோக்கில் ஓர் ஒப்­பந்­தத்­தையே செய்­தி­ருந்­தது. இலங்கை இந்­திய ஒப்­பந்தம் என்று வர­லாற்றில் கொட்டை எழுத்­துக்­களில் பதி­வா­கி­யுள்ள அந்த ஒப்­பந்­தத்தின் விளை­வா­கவே, இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்பில் 13 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் என்ற மிகவும் முக்­கி­ய­மான ஒரு திருத்தச் சட்­டமே கொண்டு வரப்­பட்­டது. 

கடந்த 1987 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இலங்கை – இந்­திய ஒப்­பந்­தத்­தை­யடுத்து, ஏற்­ப­டுத்­தப்­பட்ட அந்த 13 ஆவது அர­சி ய­லமைப்புத் திருத்தச் சட்டம் பற்றி, ஒரு கால் நூற்­றாண்­டுக்கும் மேற்­பட்ட கால­மா­கிய இப்­போதும் கார­சா­ர­மாக விவா­திக்­கப்­ப­டு­கின்­றது. இலங்கை அர­சி­யலமைப்பை பொறுத்­த­மட்டில் தொண்­டையில் சிக்­கிய ஒரு முள்­ளா­கவே பேரி­ன­வா­தி­க­ளுக்கு இந்த 13 ஆவது அர­சி­ய­ல­மைப்புத் திருத்தச் சட்டம் இப்­போதும் அமைந்­தி­ருக்­கின்­றது. 

எனவே, இத்­த­கைய ஒரு பல­மான அர­சியல் பின்­ன­ணியில், இந்­தி­யாவில் புதி­தாக ஆட்சி அதி­கா­ரத்தைக் கைப்­பற்­றி­யுள்ள பா.ஜ.க. அர­சாங்கம் தமிழ்த்தேசிய கூட்­ட­மைப்­ பி­னரை அழைத்து பேச்­சுக்­களை நடத்­தி­யி­ருப்­பதில் வியப்­ப­தற்கோ, கோப­தா­பப்­ப­டு­வ­தற்கோ ஒன்­று­மில்லை என்­றுதான் கூற வேண்டும். 

ஆனால், தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பி­ன­ருக்கு விடுக்­கப்­பட்ட இந்­தியாவின் இந்த அழைப்பு இலங்கை அர­சாங்­க த்தைச் சீற்­ற­ம­டையச் செய்­தி­ருக்கின்­றது. குறிப்­பாக இலங்கைஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ச மிகவும் அப்செட் ஆகி­யுள்ளார் என்று தக­வல்கள் வெளியா­கி­யி­ருக்­கின்­றன. இந்­திய அரசுக்கும் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பி­ன­ருக்கும் இடையில் இடம்­பெற்ற இந்தச் சந்­திப்பு -பேச்­சு­வார்த்­தைகள் குறித்து தானா­கவே கருத்து வெளி­யிட்­டுள்ளார். 

சலிப்பும் சீற்­றமும்

'சம்­பந்­தனும், அவ­ரு­டைய கட்­சி­யி­னரும் எங்கு சென்­றாலும் இறு­தியில் என்­னி­டம் வர­வேண்டும். என்­னிடம் வரா­விட்டால் அவர்­களால் தீர்­வுகள் குறித்து பேச முடி­யாது' என்று அவர் கூறி­யுள்ளார். இந்தக் கருத்தை அவர் நேர­டி­யாகக் கூறாமல், தனது தூதுவர் ஒரு­வரின் ஊடா­கவே தெரி­வித்­தி­ருக்­கின்றார் என்று தெரி­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. 

இந்­தி­யா­வுக்குச் சென்று பேச்­சுக்கள் நடத்­து­வ­தனால் பய­னில்லை. என்­னி­டம்தான் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு பற்றி பேச­வேண்டும். பிரச்­சி­னைக்குத் தீர்வு காண வேண்­டு­மானால், என்­னி­டமே வர­வேண்டும். நான் கூறு­கின்­ற­படி செய்ய வேண்டும். நடந்து கொள்ள வேண்டும் என்ற அதி­காரத் தோரணை அவ­ரு­டைய கருத்தில் தொக்கி நிற்­கின்­றது. 

அவ­ரு­டைய இந்தக் கூற்று ஒரு வகையில் - நிறை­வேற்று அதி­கா­ரத்­தையும். பாரா­ளு­மன்­றத்தில் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை பலத்­தையும் கொண்­டி­ருப்­ப­துடன் மட்­டு­மல்­லாமல், உல­கத்­திற்கே முன்­னோ­டி­யாக விடு­த­லைப்­பு­லி­களின் பயங்­க­ர­வா­தத்தைத் தோற்­க­டித்து வெல்ல முடி­யாத ஒரு யுத்­தத்தில் வெற்றி வாகை சூடி, அசைக்க முடி­யாத ஓர் இரா­ணுவ பலத் தைக் கொண்­டுள்ள தன்­னையும் மீறி, வெளிச் சக்தி ஒன்­றிடம் கூட்­ட­மைப்­பினர் துணிந்து சென்­றி­ருக்­கின்­றார்­களே என்ற ஆற்­றா­மையை வெளிப்­ப­டுத்­து­வ­தாக அமைந்­தி­ருப்­பதைக் காண முடி­கின்­றது. 

அது மட்­டு­மல்­லாமல், தன்னைக் கேளா மல், தன்­னு­டைய அனு­ம­தியைப் பெறாமல் அல்­லது இந்த நாட்டின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் என்ற கார­ணத்­தினால், பாராளு­மன்­றத்தின் அங்­கீ­கா­ரத்தைப் பெறாமல் விட்­டேற்­றி­யாகச் சென்று இந்­திய அர­சுடன் பேச்­சுக்கள் நடத்­தி­யி­ருக்­கின்­றார்­களே என்ற அர­சியல் ரீதி­யான எரிச்­சலும், சலிப்பும் அவ­ரு­டைய கூற்றில் வெளிப்­பட்­டி­ருப்­ப­தையும் உணர முடி­கின்­றது. 

இந்த உணர்வு வெளிப்­பா­டா­னது, ஒரு வகையில் அர­சியல் கோமா­ளித்­த­ன­மா­கவே அர­சியல் விமர்­ச­கர்­க­ளினால் நோக்­கப்­ப­டு­கின்­றது. நிறை­வேற்று அதி­காரம் உட்­பட ஜன­நா­யக ரீதி­யான பெரும்­பான்மை பலம் உட்­பட வலு­வான அர­சியல் அதி­கா­ரங்­களைக் கொண்­டுள்ள ஒரு நிலையில் இனப்­பி­ ரச்­சி­னைக்குத் தீர்வு காண்­ப­தற்கு, ஆக்­க­ பூர்­வ­மான எந்­த­வொரு நட­வ­டிக்­கை­யையும் எடுக்­காமல், அதனைப் பின்­போட்டு, தட்­டிக்­க­ழிப்­ப­தற்கே ஜனா­தி­ப­தியும், அவ­ரு­டைய தலை­மை­யி­லான இலங்கை அர­ சாங்­கமும் முயன்று வரு­கின்­றன. 

அது மட்­டு­மல்­லாமல், பூனைக்கு விளை­யாட்டு, எலிக்கு சீவன் போகின்­றது என்­ற­து­போல, யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட பிர­தே­சத்­தையும், அங்­குள்ள மக்­களின் வாழ்க்­கை­ யையும் மறு­சீ­ர­மைப்­ப­தற்கு நேர்­மை­யா­கவும், இத­ய­சுத்­தி­யு­டனும் நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தற்குப் பதி­லாக, இந்த அர­சாங்கம் அந்தப் பிர­தே­சத்தை முழு­மை­யாக இரா­ணுவ மய­மாக்கி, ஓர் இரும்புப் பிடிக்குள் மக்­களை ஆழ்த்தி வைத்­தி­ருக்­கின்றது. 

சுதந்­தி­ர­மான சிவில் நட­வ­டிக்­கை­க­ளுக்கும் சிவில் நிர்­வா­கத்­திற்கும் இட­ம­ளிக்­காமல், இரா­ணுவ மேலா­திக்க நிர்­வாகக் கட்­ட­மைப்பின் கீழ் அங்கு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்­றது. யுத்­தத்­திற்குப் பின்­ன­ரான கடந்த ஐந்து வரு­டங்­களும் அர­சாங்­கத்தின் இந்த முயற்­சி­யையும், செயற்­பா­டு­க­ளையும் மிகத் தெளி­வாக வெளிச்சம் போட்டு காட்­டி­யி­ருக்­கின்­றன. 

இந்த நிலை­மையில் புரை­யோடிப் போயுள்ள இனப்­பி­ரச்­சி­னை­யினால் பாதிக்­கப்­பட்டு, பின்னர் மோச­மான ஒரு யுத்­தப்­பா­திப்­புக்கு ஆளாகி, வாழ்க்­கையின் விளிம்பில் வந்து நிற்­கின்ற ஒரு சமூ­கமும், அதன் தலை­வர்­களும், பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்கு சொந்த நாட்டில் நம்­பிக்கை மிகுந்த வழியைக் காணா­விட்டால், சந்­தர்ப்பம் கிடைக்­கின்ற இடங்­களை நோக்கி, வாய்ப்­புக்­களை நோக்கிச் செல்­லாமல் வேறு என்ன செய்­வார்கள்? 

கோமா­ளித்­தன அர­சி­யலின் கீழ்............

இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காண்­ப­தற்­காக அமைக்­கப்­பட்­டுள்­ள­தாகக் கூறப்­ப­டு­கின்ற பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழு­வுக்கு வர­வேண்டும். அங்கு வரா­விட்டால் பிரச்­சி­னைக்கு ஒரு­போதும் தீர்வு காண முடியாது என்று அரசு பிடி­வா­த­மாக இருக்­கின்­றது. இந்தத் தெரி­வுக்­கு­ழுவின் மூலம் பிரச்­சி­னைக்குத் தீர்வு காண முடியும் என்ற நம்­பி க்­கையைத் தமிழர் தரப்­பி­ன­ருக்கு அர­சாங்­கத்­தினால் ஏற்­ப­டுத்த முடி­ய­வில்லை. 

அந்தத் தெரி­வுக்­கு­ழுவின் செயற்­பா­டுகள் குறித்து அர­சாங்­கமும், அதன் அமைச்­சர்­களும், அர சின் பங்­காளிக் கட்­சி­களும் தொடர்ச்­சி­யாகக் கூறி வரு­கின்ற கருத்­துக்கள் தமிழர் தரப்பைப் பொறுத்­த­மட்டில், தமிழ் மக்­க­ளையும் அவர்­களின் அர­சியல் தலை­வர்­க­ளையும், அர­சியல் தீர்வுக்கு­ரிய இணக்­கப்­பாட்­டிற்­கான ஒரு கள­மாக அல்­லாமல், ஓர் அர­சியல் பொறி­யா­கவே நோக்கச் செய்­தி­ருக்­கின்­றது. 

இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­த­ர­மான ஓர் அர­சியல் தீர்வைக் காண்­கின்ற வல்­ல­மையையும் வாய்ப்­பையும் இலங்கை அர­சாங்­கமே கொண்­ டி­ருக்­கின்­றது. இதில் மாற்று கருத்­துக்கு இட­மில்லை. ஆனால், அந்த அர­சியல் வல்­ல­மை­யையும் வாய்ப்­பையும் சரி­யான முறையில் பயன்­ப­டுத்தி நாட்டில் நிரந்­தர அமை­தி­யையும் சுபிட்­சத்­தையும் ஏற்­ப­டுத்­து­வ­தற்கு முயற்­சிக்­காமல், சிறு­பான்மை இன மக்­கள் பால், அரசு முரட்டுத் தன­மான அர­சியல் நடத்­து­வ­தா­கவே விமர்­ச­கர்­களும், வெளி­யாரும் நோக்­கு­கின்­றார்கள். இதனை அவர்கள் கோமா­ளித்­த­ன­மான அர­சி­ய­லாகப் பார்க்­கின்­றார்கள். 

ஆனால், பேரி­ன­வாத சிந்­த­னையில் மூழ்­கி­யுள்ள இலங்கை அர­சாங்கம் ஒரே நாடு, ஒரே மக்கள் என்ற தாரக மந்­தி­ரத்தின் கீழ், ஒற்­றை­ யாட்சி கொண்ட, ஓரின மக்கள் வாழ்கின்ற நாடாக இந்த நாட்டை மாற்றி அமைப்­ப­தற்­கான முயற்­சி­க­ளையே மேற்­கொண்டு வரு­கின்­றது. 

பல்­லின மக்­க­ளையும் பல சமூ­கங்­க­ளையும் இந்த நாடு கொண்­டி­ருக்­கின்ற போதி லும், பேரின மக்­க­ளா­கிய பௌத்­தத்தைப் பின்­பற்­று­கின்ற சிங்­கள மக்­க­ளுக்கே அனைத்­திலும் முன்­னு­ரிமை, ஏனை­யோ­ரையும் பௌத்­தர்­க­ளாக்கி, இந்த நாட்டை ஓரினம் ஒரு சமூகம் கொண்ட நாடாக உரு­வாக்­கி­விட வேண்டும் என்ற நிகழ்ச்சி நிரலின் கீழ் காரி­யங்­க­ளையே முன்­னெ­டுத்து வரு­கின்­றது. 

யுத்­தத்தின் பின்னர், யுத்­தத்­தினால் பாதிக்­ கப்­பட்ட பிர­தே­சங்­களில் மீள்­கு­டி­யேற்றம் மற்றும் புனர்­நிர்­மாணம், புனர்­வாழ்வு, மீள்­கட்­ட­மைப்பு போன்ற நட­வ­டிக்­கை­களின் கீழ், தேசிய பாது­காப்பு என்ற போர்­வையில், சிங்­கள மக்­க­ளையும் சிங்­க­ள­வர்­களைப் பெரும் பான்­மை­யாகக் கொண்ட இரா­ணு­வத்­தி­ன­ரையும் அந்தப் பகு­தி­களில் வலிந்து நிரந்­த­ர­மாகக் குடி­யேற்­று­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. 

சிங்­கள, தமிழ், முஸ்லிம் என்று மூவின மக்­களும் நாடு முழு­வதும் பரந்து கலந்து வாழ வேண்டும் என்­பதில் அரசு தீவி­ர­மாக இருக்­கின்­றது. இதன் மூலம் இனம் மற்றும் சமூக ரீதி­யான பாரம்­ப­ரிய பிர­தேசம், பாரம்­ப­ரிய தாயகப் பிர­தேசம் என்ற – தமிழ் மற்றும் முஸ்லிம் மக்­களின் தாயகப் பிர­தே­சங்­களை அடி­யோடு இல்­லாமல் செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் முடுக்­கி­வி­டப்­பட்­டி­ருக்­கின்­றன. 

யுத்தம் நடை­பெற்ற வடக்கு கிழக்குப் பிர­தே­சங்­க­ளிலும், இனக்­கு­ழு­மங்கள் அல்­லது சமூ­க­மாக தமிழ் மற்றும் முஸ்லிம் சிறு­ பான்மை இன மக்கள் செறிந்து வாழ்­கின்ற பிர­தே­சங்­களில், இடங்­களில் பெரும்­பான்மை இன மக்­களைக் குடி­யேற்­று­வ­தையும், அந்தப் பகு­தி­களில் சிங்­கள மக்­களைத் தொழில் செய்வ­தற்கு ஊக்­கு­விப்­ப­தையும் தெளி­வாகக் காணலாம். 

அதே­நே­ரத்தில் அந்தப் பகு­தி­க ளில் பௌத்த மதத்தை நிலை ­நி­றுத்­து­வ­த ற்­காக, பௌத்­தர்கள் இருந்­தாலும், இல்­லா­விட்­டாலும் அந்தப் பகு­தி­களில் ஏனைய மதம் சார்ந்த வணக்­கத்­த­லங்கள் இருக்­கின்ற இடங்­க­ளிலும், வச­தி­யான ஏனைய இடங்­க­ளிலும் பௌத்த விகா­ரைகள் அமைக்­க­ப்பட்­டி­ருப்­ப­தையும், அமைக்­கப்­ப­டு­வ­தையும் புத்தர் சிலைகள் நிறு­வப்­பட்­டி­ருப்­ப­தையும், நிறு­வப்­ப­டு­வ­தையும் தாரா­ள­மாகக் காணலாம். 

இந்தப் பின்­ன­ணி­யி­லேயே, இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, புதிய அரசாங்கம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரை அழைத்துப் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருக்கின்றது. இந்தப் பேச்சுவார்த்தைகளின்போது, இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் மூலம் ஏற்படு த்தப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தை அடித்தளமாகக் கொண்டு, அதிகாரங்க ளைப் பரவலாக்கி, அரசியல் தீர்வொன்றைக் காணவேண்டும் என்று இந்திய அரசு தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கின்றது. 

தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரும், மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று வடமா காண சபையின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள போதிலும் போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நல்வாழ்வுக்கான நட வடிக்கைகளை அதிகாரபூர்வமாக மேற்கொள்ள முடியாமல் அதிகாரமற்ற சபையாக அதனைத் தொடர்ந்து கொண்டு நடத்த முடியாது. 

ஆகவே, 13 ஆம் திருத்தச் சட்டத்திற்க மைவாக அதற்கு அப்பால் சென்று ஒரு தீர்வைக் காண்பதற்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும், உதவ வேண்டும் என கோரியிருக்கின்றனர். இதன் மூலம் சமத்துவம் மிக்க அதிகாரப் பரவலாக்கலுடன் கூடிய தமிழர் தாயகப் பிரதேசங்களை நிர்வகிக்கத்தக்க, நிரந்தர மான ஓர் அரசியல் தீர்வை அடைவதற்கு ஓர் ஆரம்ப நடவடிக்கையாக அல்லது ஓர் இடைக்கால தீர்வாக 13 ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் ஒரு தீர்வைக் காண்பதற்கு அவர்கள் முயற்சித்திருக்கின்றார்கள். 

விடாக்கண்டன் கொடாக்கண்டன் என்ற ஓர் அரசியல் நிலைப்பாடு நிலவுகின்ற இலங்கையில், இந்தியாவின் புதிய அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு எந்த வகையில் தீர்வைக் காணப் போகின்றது என்பதையும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரிடம் புதுடில்லி வெளிப்படுத்தியுள்ள இலங்கை தொடர்பான அரசியல் நிலைப்பாட்டை எவ்வாறு முன்னெடுத்துச் செல்லப் போகின்றது என்பதை யும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஒரே மரத்தில் 40 வகையான பழங்கள்-காணொளி,புகைப்படங்கள்


ஒரே மரத்தில் 40 வகையான பழங்களை உருவாக்கி

அமெரிக்க விஞ்ஞானி சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவில் உள்ள சைரகஸ் பல்கலைக்கழகத்தில் சாம் வான் அகேன் தாவரவியல் பேராசிரியராக உள்ளார்.

விஞ்ஞானியான சாம் வான் அகேன் மரத்தில் பல்வேறு வகையான பழங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இந்த முயற்சி எப்படி என்றால் “ஒட்டு மாங்கனி’ என்ற முறையை பயன்படுத்தப்படுத்தி புளிப்பான மரத்தின் தண்டில், இனிப்பான மாம்பழத்தின் தண்டை ஒட்ட வைத்து சிறிது நாளில் புளிப்பான மாம்பழத்தை இனிப்பாக மாற்றுவர் அதேபோல்தான் இவரும் ஒரே மரத்தில் பல்வேறு மரங்களின் தண்டுகளை படிப்படியாக இணைத்தும், சில மாற்றங்களை செய்தும் வளர்த்தார்.



தற்போது அந்த மரத்தில் 40 வகையான பழங்கள் காய்த்து தொங்குன்றன. இந்த காட்சி அங்குள்ள மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அழகான அந்த மரம் அனைவரையும் அருகில் ஈர்க்கும் வண்ணம் காட்சியளிக்கிறது. இதுகுறித்து சாம் வான் அகேன் கூறுகையில்,என்னுடைய ஆராய்ச்சியின் பயனாக,

அம்மரத்தை குளிர்காலத்தில் பார்ப்பவர்களுக்கு செம்பழுப்பு, ஊதா மற்றும் வெள்ளை என வானவில்லை போல் காட்சியளிக்கும் என்றும், கோடை காலத்தில் அம்மரம் பல்சுவை கொண்ட பழங்களை வழங்குவதாகவும், இதுபோன்ற தாவர ஆராய்ச்சியை தான் இனி அதிகமாக மேற்கொள்ளவுள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.