பக்கங்கள்

அடுத்த முள்ளிவாய்க்கால் அரங்கேறுகிறது - அதிர்ச்சியளிக்கும் காணொளிகள் வெளிவந்தது

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு
ஈராக்கில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள்
பண்டிகையையொட்டி ஷியா பிரிவினர் சிலர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட காணொளியை இணையதத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.

ஈராக்கை கைபற்றி தினந்தினம் அட்டூழியங்களை அரங்கேற்றி வரும் சன்னி பிரிவை சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்கள் இஸ்லாமிய மதத்தின் பண்டிகையான ரமலான் நாளிலிலும் வெறிச்செயலிற்கு விடுமுறை அளிக்கவில்லை.

உலகெங்கும் ரமலான் கொண்டாடப்பட்டது.ஆனால் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளோ தாங்கள் படுகொலை செய்த காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதில் கைதிகளாக பிடிக்கப்பட்ட 50 ஷியா இஸ்லாமியர்கள், லொறி ஒன்றில் ஏற்றப்படுகின்றனர்.






இதன்பின் அவர்கள் கைகள் பின்னால் கட்டப்பட்டு மண்டியிட்டு மரணத்தண்டனை நிறைவேற்றத்துக்காக காத்திருப்பதையும், அவர்களுக்கு கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு மரணதண்டனை நிறைவேற்றப்படும் காட்களும் இடம்பெற்றுள்ளன.

மேலும் தரையை நோக்கியிருக்க அமர்ந்திருந்த கைதிகளாய் பிடிக்கப்பட்டவர்களை சுற்றி நின்ற தீவிரவாதிகள், ஒருவர் பின் ஒருவரை சுட்டுக்கொன்றுள்ளனர். இறுதியில் அவர்களது சடலங்களை நீரில் விசீவிட்டு செல்கின்றனர்.

யாழ்ப்பாண ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு
இலங்கையின் வடக்கே ஊடகங்களும்,
ஊடகவியலாளர்களும் எதிர்கொள்ளும், அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறைகளை எதிர்த்தும், அவற்றுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் யாழ்ப்பாணத்தில் பேருந்து நிலையத்திற்கு எதிரில் வியாழனன்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றிருக்கின்றது.

நாட்டின் வடக்கிலும் தெற்கிலும் உள்ள ஊடக அமைப்புக்கள் இணைந்து இதற்கான அழைப்பை விடுத்திருந்தன.வடக்கில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களும், இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினரும்,

சுதந்திர ஊடக அமைப்பினரும், தெற்காசிய சுதந்திர ஊடக அமைப்பினரும், இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் மற்றும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். நிமலராஜன் தொடக்கம் யாழ்ப்பாணத்தில் பலர் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

பலர் கொலை முயற்சிகளில் இருந்து தப்பியிருக்கின்றார்கள். பலர் கடத்தப்பட்டிருக்கின்றார்கள். இதன் தொடர்ச்சியாக அண்மையில் தொழில் ரீதியான பயிற்சிக்காகச் சென்ற யாழ் ஊடகவியலாளர்கள் அந்தப் பயிற்சியில் கலந்துகொள்ள முடியாதவாறு இரண்டு தடவைகள் பொலன்னறுவையிலும். நீர்கொழும்பிலும் தடுக்கப்பட்டிருக்கின்றார்கள் என்று ஊடக அமைப்புகள் கூறின.

தொடர்ந்து கடந்த வாரம் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகப் பயிற்சியொன்றிற்காகச் சென்ற 7 ஊடகவியலாளர்கள் கஞ்சா கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டதுடன்.

தாமதமாக கொழும்பு சென்றடைந்த அவர்கள் அங்கு நடைபெறவிருந்த பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்ள முடியாதவாறு அதுவும் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் இலங்கை அரசு ஊடகங்களுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியிருக்கின்றதா என்ற கேள்வியை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்கள் எழுப்பியுள்ளனர்.

ஊடகங்களுக்கு எதிரான அடக்குமுறைகள் கைவிடப்பட்டு, ஊடக சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று இந்த ஆர்ப்பாட்டத்தின்போது குரல் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

இரும்புக் கடைக்கு போகவேண்டிய ஆயுதங்களை இந்திய அமைதிப் படையிடம் ஒப்படைத்த தலைவர்!

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் படி
ஓர் சம்பிரதாய பூர்வமான போர்நிறுத்தம் அமுல் படுத்தப் பட்டது..நான் முந்திய அத்தியாயம் ஒன்றில் சொன்னவாறு,இலங்கையின் அபயக் குரலுக்கு அடிபணிந்த இந்தியா,எதற்காக இலங்கை வந்தார்களோ,அந்த நோக்கம் நிறைவேற வேண்டுமாயின், புலிகளிடம் உள்ள ஆயுதங்களை களைய வேண்டும்.

அப்படிக் களைந்தால்தான் எதிர் காலத்தில் இலங்கைக்கு புலிகளால் எதுவித தாக்குதல் பாதிப்பும் ஏற்படாது..என்பதால், போர் நிறுத்த ஒப்பந்தப்படி புலிகளை ஆயுதங்களை ஒப்படைக்குமாறு இந்தியா நிர்பந்தித்தது.. அதற்கு தலைவர் பிரபாகரன் என்ன செய்தார் தெரியுமா? "சரி..ஒப்படைக்கிறோம் " என்று நேரடியாக இந்தியப் படைத் தளபதியிடம் சொன்னார்.

தலைவரின் அறிவிப்பை கேட்ட புலிகளின் உறுப்பினர்களுக்கு ஒரு கணம் மனம் உடைந்துவிட்டது என்பது உண்மைதான்..ஆயுதங்களா..அவை?அல்ல! ஒவ்வொரு போராளியும் தன் உயிரை விலையாக கொடுத்து எடுத்த பொக்கிஷங்கள் அவை! 1983 ஆனியில் ,சீலன் ஆனந்தன் போன்றவர்கள் தென்மராச்சிப் பகுதியில் நடைபெற்ற ஓர் சுற்றி வளைப்பின்போது உலகில் எந்த விடுதலைப் போராட்டங்களில் உள்ளவர்களும் செய்திராத மாபெரும் தியாகத்தைச் செய்து காப்பாற்றிய மிகச் சாதாரண தானியங்கிகள் அவை.

அதுபற்றி சுருக்கமாக இக் கட்டுரை தொடரை வாசிக்கும் அன்பர்கள் அறிந்து வைத்திருப்பது நல்லது!சாவகச்சேரிக்கு அண்மையில் 1983இல் புலிகளின் சிறிய முகாம் ஒன்று ஒரு வீட்டில் இருந்தது.அதில்,சாள்ஸ் அன்ரனி என்னும் போராளியும்,ஆனந்தன் என்னும் போராளியும்,பிற் காலத்தில் மட்டு-அம்பாறை தளபதியாக இருந்து,கடலில் ஓர் சண்டையின்போது தப்பி இராணுவத்திடம் பிடிபட்டு, கோட்டைச் சிறையில் இருந்து,

பின்னர் கைதிகள் பரி மாற்றத்தின்போது, தளபதி கிட்டுவால் விடுவிக்கப் பட்ட அருணாவும்,இன்னும் ஓரிருவரும் இருந்தனர்.. யாரோ ஓர் தமிழ்த் துரோகி கொடுத்த தகவலின்படி அந்த முகாம் இராணுவத்தால் சுற்றி வளைக்கப் பட்டது. அந்தச் சுற்றி வளைப்பிலிருந்து தப்ப, போராளிகள் பின்வாங்கி ஓடினர்.

அப்போது சீலனுக்கு வயிற்றில் காயம் ஏற்பட்டுவிட்டது.சீலனின் கையில் ஓர் சிறிய தானியங்கி இருந்தது. சீலன் விழுந்துவிட்டான்.இராணுவம் தூரத்தில் சுட்டுக் கொண்டே அவர்களை நெருங்கி வந்தது..அந்த புலிகளின் சிறு படையணிக்கு சீலன்தான் பொறுப்பாளர். அப்போது சீலனை தூக்கி கொண்டு ஓட அருணா முயன்றார்.அப்போது சீலன், "அருணா..என்னை தூக்கி கொண்டு ஓடினால் நீயும் சுபடுவாய். அப்போது எவ்வளவோ கஷ்டப் பட்டு எடுத்த இந்த தானியங்கியை சிங்கள இராணுவம் கைப் பற்றி விடும்..எனவே..என்னைச் ..சுட்டுவிட்டு..தானியங்கியைக் கொண்டுசென்று அண்ணியிடம் கொடு "-என்றார்.

அருணா தயங்கி நின்றார்.ஒன்றாக ,ஒரே தட்டில் உண்டு,ஒரே பாயில் படுத்து , போராட்டத்தில் இணைந்து போராடிய உயிர் நண்பனை எந்தக் கையால் சுடுவது?-என்று அருணா சிந்திக்கும்போது,சீலனின் குரல் கடுமையாக ஒலித்தது.."அருணா..நான் கட்டளை இடுகிறேன்..

என்னைச் சுடு ..ஆயுதத்தை அண்ணையிடம் கொடு"-ஒரு புலியின், மேலதிகாரியின் கட்டளைக்கு எந்த வேளையிலும்,அது எப்படி இருந்தபோதும் அடிபணிந்து பழக்கப் பட்ட, ஓர் ஒப்பற்ற புலிவீரனால் -தலைவனால், வளர்க்கப்பட்டவர்கள் அல்லவா? கட்டளைக்கு அடிபணிந்தான் அருணா.

சீலன் துவண்டு விழுந்து வீரச் சாவடைந்தான்.அதுபோல் ஆனந்தனுக்கும் ஓட முடியாத பெருங்காயம் ஏற்பட்டதால் ,.அவனும் தன்னை சுட்டுவிட்டு ஆயுதத்தை கொண்டு போகுமாறு வேண்டினான்.அருணாவுக்கு வேறு வழி தெரியவில்லை. இரு உயிர்களைப் பலிகொடுத்து,இரு ஆயுதங்கள் காப்பாற்றப் பட்டன.

போராட்ட வரலாற்றின் புதிய பரிமாணம் ஒன்று உருவாகிய மண் ஈழத் தமிழ் மண்! எந்த மண்ணிலும் கண்டிராத,கேட்டிராத,தியாக வரலாறு அது.தமிழனுக்கே உரிய தனிக்குணம் என்றுகூடச் சொல்லலாம்....அப்படிப்பட்ட ஆயுதங்களை இந்திய ராணுவத்திடம் எப்படிக் கொடுப்பது? சில கடுமையான விளைவுகளை தவிர்க்கவும்,எமது மக்களை ஓர் போர் அபாயத்தில் இருந்து காக்கவும், தலைவருக்கு வேறு வழி தெரியவில்லை.


அன்று புலிகளும்,எமது மக்களும் உறங்கவில்லை..விம்மி விம்மி வெடித்தன தமிழர்களின் இதயங்கள்! ஆனால்,பின்னர் போராளிகளுக்கான ஓர் ஒன்று கூடலின்போது,தலைவர் போராளிகளுக்கு சொன்ன ஓர் முக்கிய மகிழ்ச்சியான செய்தி என்ன தெரியுமா?.


இந்திய இராணுவத்திடம் கையளிக்கப் பட்ட ஆயுதங்களில் பெரும்பாலானவை இரும்புக் கடைக்கு போகவேண்டிய,ஆயுதங்கள்..பிடி முறிந்த,குழல் உடைந்த ஆயுதங்களே! நல்ல ஆயுதங்கள் புலிகளின் மறைவிடத்தில் பத்திரமாக உள்ளன..அட! தலைவர் போரில் மட்டும் பெரு வீரனல்ல..போர்த் தந்திரோபாயங்களை வகுப்பதில் மட்டும் வீரனல்ல ..ராஜ தந்திரத்திலும் பெரு வீரன்!

ஏமாந்தவர்கள் இந்திய இராணுவத்தினர்தான்!. பெரும்பாலான ஆயுதங்களை இரும்புக் கடை முதலாளி வாங்கி கொண்டு,என்ன விலை கொடுத்திருப்பார்?பிளாஷ்டிக் வாளிகளா? அலுமினியச் சட்டிகளா? அல்ல!

வன்னிக் காடுகளில் பிற் காலத்தில் புலிகளுடன் ஏற்பட்ட சண்டையின்போது, இந்திய இராணுவம் அள்ளி அள்ளி புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கியது! நினைவில் இருந்து என்றும் அழியாத நினைவலைகளில் இதுவும் ஒன்று!

(தொடரும்)

-மு.வே.யோகேஸ்வரன் -

இன்றைய நாள் எப்படி 30.07.2014


எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு
இன்றைய நாள் எப்படி 30.07.2014

மேஷம் 

இன்றையதினம் மனநிறைவுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் அனுசரித்துப் போவீர்கள். பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள்.சகோதர, சகோதரிகளால் நன்மையுண்டு. உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள்.பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.வியாபாரத்தில் பாக்கிகளை அதிரடியாக செயல்பட்டு வசூலிப்பீர்கள்.தாயாரின் உடல்நிலை சீராக அமையும். அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்

ரிஷபம்

ஆடம்பரமான செலவுகளை குறைப்பீர்கள்.பிள்ளைகளால் மகிழ்ச்சியுண்டு.மறைமுகப் போட்டி களுக்கு பதிலடி தருவீர்கள்.ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.பயணங்களால் ஆதயம் உண்டு.விருந்தினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியுண்டு.பிரபங்களின் உதவி கிடைக்கும்.கண் எரிச்சல், தூக்கமின்மை நீங்கும்.அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்

மிதுனம் 

சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவதன் மூலம் காரியங்கள் வெற்றியடையும்.குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.பேச்சில் கம்பீரம் பிறக்கும்.சகோதவகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகளை வெல்வீர்கள்.வேலையாட்களின் ஆதரவு கிட்டும்.பிராத்தனைகளை நிறைவேற்றுகள். கன்னிப்பெண் களுக்கு உடல் ஆரோக்யம் திருப்திகரமாக இருக்கும். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்

கடகம் 

குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகள் ஒத்துழைப்பார்கள். நண்பர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். முகப் பொலிவு கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சகோதர வகையில் நன்மை கிட்டும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் புதிய சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை

சிம்மம்

ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். உங்களைப் பற்றி தவறாக சிலர் பேசினாலும் அதற்காக வருத்தப்படாதீர்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் போராட வேண்டி வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் மறைமுக நெருக்கடிகள் வந்துப் போகும். அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்

கன்னி 

குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. உறவினர், நண்பர்கள் சிலர் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். யாரையும் தூக்கி எறிந்து பேசுவார்கள். யாருக்காகவும் சாட்சி கையப்பமிட வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் மோதல்கள் வரக்கூடும். அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு

துலாம்

வெளிப்படையான பேச்சால் சில காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள்.உத்தியோகத்தில் மகிழ்ச்சி கிட்டும்.தாயாரின் உடல் நிலை சீராகும்.கணவன் -மனைவிக்குள் அன்யோயம் பிறக்கும்.வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர்செய்வீர்கள்.அரசாங்க காரியங்களில் அனுகூலமான நிலைக் காணப்படும்.உத்தியோகத்தில் மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்

விருச்சிகம் 

மனசாட்சிக்கு விரோதமின்றி செயல்பட வேண்டுமென நினைப்பீர்கள்.குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும்.பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பீர்கள்.உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள்.சக ஊழியர்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும்.பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா

தனுசு 

சகோதரரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள் கல்யாண முயற்சிகள் பலிதமாகும். உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்

மகரம் 

சந்திராஷ்டமம் நீடிப்பதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலை வந்து நீங்கும். உறவினர், நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். அடுத்தவர்கள் மனசு காயப்படும்படி பேசாதீர்கள். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்தியோகத்தில் மறைமுக அவமானம் வந்து நீங்கும். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே

கும்பம் 

கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும். உயரதிகாரி ஆதரிப்பார். நட்பு வட்டம் விரியும். தாழ்வு மனப்பான்மை நீங்கும். அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

மீனம் 

பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி யோசிப்பீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லைகள் விலகும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. வழக்குகள் சாதகமாகும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு

ஜோசியம் பார்க்கிறது மலேசிய எயாலைன்ஸ் -பெயர் மாற்ற முடிவு

விமானங்கள் அடுத்தடுத்து விபத்துகளில்
சிக்கி உயிரிழப்புகளை ஏற்படுத்திவரும் மலேசிய ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் தனது பெயரை மாற்ற முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் முதலீட்டாளர்கள் மற்றும் பயணிகளிடம் இழந்துள்ள நம்பிக்கையை மீண்டும் பெற அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங் நோக்கி பயணித்த மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தின் எம் எச் 370 விமானம் நடுவானில் மாயமானது. 

அதனை தொடந்து பல்வேறு சந்தர்ப்பங்களில் விமானங்களில் இயந்திர கோளாறு ஏற்ப்பட்டு பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டிருந்த நிலையில் இம்மாதம் ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்து கோலாலம்பூர் நோக்கி பயணித்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்எச் 17 உக்ரைன் வான் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது. 

 இந்த சம்பவத்தில் 298 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் இதையடுத்து மலேசியன் ஏர்லைன்ஸ் விமான சேவைக்கு உலக அளவில் மதிப்புக் குறைவடைந்துள்ளதுடன் மலேசியன் ஏர்லைன்ஸ் பெயரை கேட்டாலே பயணிகள் அலறியடித்து ஓடுகிற நிலைமை ஏற்பட்டுள்ளது. 

எனவே மலேசியன் ஏர்லைன்ஸ் தமது பெயரை மாற்றுவதன் மூலம் மீண்டும் வாடிக்கையாளர்களிடம் ஸ்திரத்தன்மையை பெற முடிவு செய்துள்ளது.

ஐ.நா. விசா­ரணையில் விக்கினேஸ்வரன் சாட்சியமளிக்க முடியாது?

ஐ.நா. சர்­வ­தேச விசா­ரணை ஆணைக்­கு­ழு­விற்கு சாட்­சி­ய­ம­ளிப்­பது
இலங்­கைக்கு எதி­ரான ஏகா­தி­ய­பத்­தி­ய­வா­தி­களின் சதித் திட்­டத்­துக்கு துணை­போகும் செய­லாகும். எனவே இதனை கடு­மை­யாக எதிர்க்­கின்றேன் எனத் தெரி­வித்த அமைச்சர் வாசு­தேவ நாண­யக்­கார பர­ண­கம ஆணைக்­கு­ழு­விற்கு வெளி­நாட்டு நிபு­ணர்­களின் ஆலோ­ச­னை­களை பெறு­வதில் எவ்­வி­த­மான தப்பும் இல்­லை­யென்றும் கூறினார்.

இது தொடர்­பாக, சமூக ஒரு­மைப்­பாடு மற்றும் தேசிய மொழிகள் தொடர்­பான அமைச்சர் வாசு­தேவ நாண­யக்­கார மேலும் தெரி­விக்­கையில்; இலங்கை மீது யுத்தக் குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்தி சர்­வ­தேச ரீதியில் எமது நாட்டை தனி­மைப்­ப­டுத்தி நெருக்­க­டியில் தள்­ளி­வி­டு­வதை இலக்­காக வைத்தே ஐ.நா. சர்­வ­தேச விசா­ரணைக் குழு நிய­மிக்­கப்­பட்­டது. 

இது இலங்­கைக்கு எதி­ரான சதித்­திட்டம். எனவே, அர­சாங்கம் அதனை நிரா­க­ரித்து விட்­டது. எனவே, இவ்­வா­றா­ன­தொரு குழு­விற்கு இலங்­கை­யர்கள் எவரும் சாட்­சியம் வழங்­கக்­கூ­டாது. அதற்கு வட­மா­காண முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் விதி­வி­லக்­கா­னவர் அல்ல. 

எவரும் இக் குழு­விற்கு சாட்­சியம் வழங்கக் கூடாது. அவ்­வாறு சாட்­சியம் வழங்­குவோர் இலங்­கைக்கு எதி­ரான ஏகா­தி­பத்­திய வாதி­களின் சதித் திட்­டத்­திற்கு துணை போகின்­ற­வர்கள் என்றே கரு­தப்­ப­டு­வார்கள். அப்­பட்­டி­ய­லி­லேயே அவர்கள் இணைத்­துக்­கொள்­ளப்­ப­டு­வார்கள். இதனை கடு­மை­யாக எதிர்க்­கின்றேன்.

பர­ண­கம குழு 

ஜனா­தி­ப­தியால் உள்­ளூரில் விசா­ர­ணை­க­ளுக்­காக நிய­மிக்­கப்­பட்ட மெக் ஷ் வெல் பர­ண­கம விசா­ர­ணைக்­கு­ழு­விடம் சொல்ஹெய்ம் அல்ல எவரும் சாட்­சி­யங்­களை வழங்­கலாம் இதனை எதிர்க்­க­வில்லை. ஏனென்றால் இக் குழு உண்­மை­களை கண்­ட­றி­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட நியா­ய­மான விசா­ர­ணை­களை நடத்தும் உள்ளூர்க் குழு­வாகும். 

இதற்கு ஆலோ­ச­னை­களை பெறு­வ­தற்கு வெளி­நாட்டு நிபு­ணர்கள் நிய­மிக்­கப்­பட்­ட­மையில் எவ்­வி­த­மான தப்பும் இல்லை. இதன் மூலம் உள்ளூர் விசா­ரணைக் குழு­விற்கு சர்­வ­தேச ரீதியான அங்கீகாரம் மேலும் வலுப்பெறும் இந்நிலை உரு வாகும் போது எம்மை நெருக்கடியில் தள்ளிவிடும் நோக்கில் நியமிக்கப்பட்டுள்ள சர்வதேச விசாரணைக் குழுவின் பலம் இழக்கப்படும் நிலைமை உருவாகும் என்றார்.

தொடர்புபட்ட செய்தி

இந்தியாவில் 41 ஆண்டுகளாக 5 காசுக்காக(சதம்) நடைபெற்றுவரும் வழக்கு


இந்த விநோத ம் இந்தியாவில்தான்!
தமிழ் திரைப்படம் ஒன்றில் வரும்

“5 காசு திருடினா தப்பா? 5 கோடி பேர் 5 காசு திருடினா தப்பா? 5 கோடி பேர் 5கோடி தடவை 5 காசு திருடினா தப்பா? என்ற வசனம் டெல்லி போக்கு வரத்து கழகத்தின் நடவடிக்கைக்கு சரியாக பொருந்தும்.

1973ம் ஆண்டு பெண் பயணி ஒருவருக்கு 15 காசு பயணச்சீட்டுக்குப் பதிலாக 10 காசு பயணச் சீட்டு கொடுத்ததால், அரசுக்கு 5 காசுகள் நஷ்டம் ஏற்படுத்தியதாக ஒரு கண்டக்டர்மீது டெல்லி போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்தது.

பல்வேறு கட்டணங்களை தாண்டி 41 ஆண்டுகளுக்குப் பிறகும் அது விடாப்பி டியாக நீதிமன்றத்துக்கு சென்றுள்ளது. தவறு செய்பவர்களுக்கு இது பாடமாக இருக்க வேண்டும். கடமையில் இருந்து தவறியவர் களுக்கு சிறிதளவு கூட இரக்கம் காட்டக் கூடாது என்று தனது மனுவில் டெல்லி போக்குவரத்து கழகம் கூறியுள்ளது.

1973 -டெல்லி போக்குவரத்துக் கழக பேருந்தில் கண்டக்டராக பணி புரியும் ரன்வீர் சிங், பறக்கும் படை சோதனையில் சிக்கினார். அப்போது ஒரு பெண் பயணிக்கு 15 காசுகள் பயணச்சீட்டுக்கு பதிலாக 10 காசுகள் பயணச்சீட்டை அவர் கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தனது தவறை ரன்வீர் சிங் ஒப்புக் கொண்டார். ஆனால், பறக்கும் படையினர் அதை ஏற்கவில்லை. போக்குவரத்து கழகத்துக்கும், அரசுக்கும் 5 காசுகள் நஷ்டம் எற்படுத்திய அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்தனர்.

1976 – ரன்வீர் சிங்கால் 5 காசுகள் நஷ்டம் ஏற்பட்டது துறை ரீதியிலான விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. ஏற்கனவே இது போன்ற செயல்களில் அவர் ஈடுபட்டதால், அவரை பணி நீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டது.

1976 – போக்குவரத்துக் கழகத்தின் உத்தரவை எதிர்த்து தொழிலாளர் நீதிமன்றத்தில் ரன்வீர் வழக்கு தொடர்ந்தார். 1990 – ரன்வீருக்கு சாதகமாக நீதி மன்றம் தீர்ப்பு அளித்தது. உடனடியாக அவரை பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பணியில் இல்லாத காலத்துக்கும் சம்பளம் தரப்பட வேண்டும் என்று உத்தர விட்டது. 

1990 – இதை ஏற்காத போக்குவரத்துக் கழகம், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ரன்வீருக்கு அளிக்கப்பட்ட தண்டனை, தவறு செய்பவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். கடமையில் இருந்து தவறியவர்களுக்கு சிறிதளவு கூட இரக்கம் காட்டக் கூடாது என்று தனது மனுவில் போக்குவரத்து கழகம் கூறியது.

2008 – உயர்நீதிமன்றமும் ரன் வீருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. 2008 – தனக்கு ஓய்வூதியம், ஓய்வூதியப் பலன்கள் அளிக்க வேண்டும் என்று ரன்வீர் சிங் கோரினார்.

2014 – ஓய்வூதியம் அளிக்க தயாராக இல்லாத போக்குவரத்துக் கழகம், தற்போது உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது.

இந்த மனு வரும் ஆகஸ்ட் 12ம் தேதி விசாரணைக்கு வருகிறது. போக்குவர த்துக் கழகம் தொடர்ந்து 41 ஆண்டுகள் விடாப்பிடியாக வழக்கை நடத்தி வருகிறது. தற்போது 70 வயதாகும் ரன்வீர் சிங்கும் தொடர்ந்து போராடி வருகிறார்.

- சிவா

எந்த ஜென்மத்திலும் வைரமுத்துவுடன் சேர வாய்ப்பில்லை. இளையராஜா


28 வருடங்களுக்கு பிறகு இளையராஜாவும்,
வைரமுத்துவும் மீண்டும் இணையபோவதாக கோலிவுட்டில் செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. ஆனால் இந்த தகவல் பொய்யானது என்று இளையராஜா மறுத்துள்ளனர்.

கடந்த 1986ஆம் ஆண்டு வெளிவந்த 'கடலோர கவிதைகள்' திரைப்படத்தில் இடம்பெற்ற "அடி ஆத்தாடி" என்ற பாடல்தான் இளையராஜா இசையில் வைரமுத்து எழுதிய கடைசி பாடல். அதன்பின்னர் இருவரும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.

இந்நிலையில் இயக்குனர் சீனுராமசாமி இயக்கிவரும் இடம் பொருள் ஏவல் என்ற படத்தில் வைரமுத்து எழுதிய பாடல் ஒன்றை இளையராஜா பாடவிருப்பதாக செய்திகள் வெளிவந்தன. இதுகுறித்து இளையராஜா இன்று காலையில் நிருபர்களிடம் அளித்த விளக்கம் ஒன்றில், "சீனுராமசாமி யார் என்றே எனக்கு தெரியாது.

அவருடைய படத்தில் நான் வைரமுத்து எழுதிய பாடலை பாடவிருப்பதாக வந்த தகவல் முற்றிலும் பொய்யானது' என்று கூறினார். நானும் வைரமுத்தும் பிரிந்து 28 வருடங்கள் ஆகிவிட்டது. 28 ஜென்மங்கள் எடுத்தாலும் நாங்கள் மீண்டும் ஒன்றுசேர வாய்ப்பில்லை என்று கூறினார். 

தென்மேற்கு பருவக்காற்று என்ற தேசியவிருது பெற்ற திரைப்படத்தை இயக்கிய சீனுராமசாமியை யார் என்றே தெரியாது என இளையராஜா கூறியது கோலிவுட்டில் உள்ள அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளக்கியுள்ளது. அதே நேரத்தில் சீனுராமசாமிதான் இந்த வதந்தியை திட்டமிட்டு பரப்பியுள்ளதாகவும்,

அந்த ஆத்திரத்தில்தான் இளையராஜா அவ்வாறு கூறியதாகவும் கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. சீனுராமசாமி தற்போது விஜய் சேதுபதி, விஷால், நந்திதா, மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்து வரும் 'இடம் பொருள் ஏவல் என்ற படத்தை இயக்கிவருகிறார்.

இந்த படத்திற்கு இளையராஜாவின் மகன் யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கின்றார். வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் பிரபாகரன் சிறையில்இருந்த வரலாற்று சம்பவத் தொடர்


ஒரு விசர் நாயைக் கூட கொல்லும் உரிமை அற்ற
,அல்லது சட்டம்.. நிதி போன்ற அதிகாரங்கள் அற்ற, மாநில அரசை ஏற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்தி,இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுமாறு தலைவர் பிரபாகரனை டெல்லியில் சிறை வைத்த இந்திய உளவுத் துறை!

1987,ஜூலை5, கப்டன் மில்லரின்,நெல்லியடி இராணுவ முகாம் மீதான, மரண அடிக்குப் பின்னர் நூற்றுக் கணக்கான சிங்கள இராணுவத்தினர் மடிந்ததைக் கண்டு அதிர்ந்த இலங்கை அரசு,அதுபோல் ஏனைய முகாம்கள் மீது புலிகள் தாக்குதல் தொடுத்து அழிக்கும்போது, இலங்கை இராணுவத்தினரின் மனோ நிலை,பாரிய உளவியல் தாக்கங்களை எற்படுத்தி விடும் என்பதால்,அதைத் தடுக்கும் வகை அறியாது இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் காலடியில் விழுந்து 'புத்தம் சரணம் கச்சாமி' என்று அபயக் குரல் எழுப்பினார்.

இலங்கையைக் காக்க இந்தியா ஈழத் தமிழர்களை அழிக்கும் இலங்கை- இந்திய ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டு இலங்கைக்கு தன் ஒரு லெட்சம் படைகளை முதற் கட்டமாக அனுப்பி வைத்தது.ஒப்பந்தத்தை செய்ய கொழும்பு வந்த ராஜீவ் காந்தி கேவலம் ஒரு கடற்படைச் சிப்பாயால், துப்பாக்கிப் பிடியால் பிடரியில் தாக்கப் பட்டார் என்பது ஓர் ஈனத்தனமான வரலாறு.

இது தொடர்பான காணொளி பதிவு


அதே சிங்களச் சிப்பாயிடம் அன்று குண்டுகள் நிரப்ப பட்ட ஒரு துப்பாக்கி இருந்திருந்தால் ராஜிவை சுட்டுச் சல்லடை ஆக்கியிருக்க கூடும்.அத்தனை வெறியுடன் அவன் இந்தியப் பிரதமரை அன்று தாக்கினான். அடியையும் வாங்கிக் கொண்டு வந்து ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவுடன்,இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டவர் தான் ராஜீவ்..

உலகில் ஒரு மகா ரோசக்கார பிரதமர் அப்போது உண்டென்றால் அது ராஜீவ் ஆகத்தான் இருந்திருக்க வேண்டும். உலகில் ஒரு நாட்டின் பிரதமரை இன்னும் ஒரு குட்டி நாட்டில் உள்ள சிப்பாய் ஒருவன்..துப்பாக்கிப் பிடியால் தாக்கினான்,என்பதை நான் இதுவரை எங்கும் கேள்விப் பட்டதில்லை. 

யாரு அவர்..? நேருவின் பேரன்..பாரு?..சாரு' பைலடுக்கு படித்துவிட்டு அரசியல் சேற்றுக்குள் குதிக்க வந்தவர்..அதனால்தானோ, அதன் பின் அத்தனை கூத்துகளும்,அழிவுகளும், ஈழத்தில் நடந்தேறின?

ஈழத் தமிழர்களுக்கோ அல்லது அவர்களின் நலன்களுக்கோ எதுவித சம்பந்தமும் இல்லாத ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுமாறு அப்போது சென்னையில் இருந்த தலைவர் பிரபாகரனை வற்புறுத்தியது இந்திய உளவு அமைப்பான 'ரோ'.

ஒப்பந்தத்தின் பக்கங்களை புரட்டி புரட்டி படித்தார் தலைவர். அதில் ஒரு புண்ணாக்கும் ஈழத் தமிழர்களுக்கு ஏதுவாய் இருக்கவில்லை ..புண்ணாக்கு வேண்டாம் ஒரு பிடி வைக்கோல் இருந்திருந்தாலாவது பின்னர் பார்க்கலாம் என்று கையெழுத்துப் போட்டிருப்பார் தலைவர்.

அது கூட இல்லையே அதில்? ஆயினும், சென்னையில் இருந்த தலைவரை இரவோடு இரவாக டில்லிக்கு விமானம் மூலம் நகர்த்தியது ரோ'.அங்கே ஓர் நட்சத்திரக் கோட்டலில் அவரைத் தங்கவைத்தது.

வகை வகையாய்,வக்கணையாய் ,உணவு வகைகளை அள்ளி வழங்கியது. சீமை உணவுகளையும் பஞ்சணை மெத்தையையும் கண்டால் புலி புல்லைத் தின்னும் என்று எதிர் பார்த்தது இந்தியா.

ஆனால்,தமிழ் ஈழப் புலி அதை தொடக்கூட மறுத்து. சோறையும் கறியையுமே உண்டது..சாதாரண கட்டிலில் படுத்து உறங்கியது..ஆயினும், ஆசை வார்த்தைகளை அள்ளி அள்ளி கொட்டியது உளவு நிறுவனம்.

நீங்கள் முதல் அமைச்சர் ஆகலாம்,விரும்பியதை அதன் பின் செய்யலாம்.. சுருக்கமாக சொல்வதென்றால் உங்களை ஒரு ராஜாபோல் நாங்கள் வைத்திருப்போம்.." என்றெல்லாம் ஆசை வார்த்தைகளை நெய்த் தோசைகளில் பூசிக் கொடுத்தது.

ஆனால் ,அசைந்து கொடுக்கவில்லை பெரும்புலி! தலைப் புலி திட்ட வட்டமாக ஒப்பந்தத்தில் கையெழுத்து இட மறுத்தது. "ஆடுற மாட்டை ஆடிக் கறக்கலாம்,பாடுற மாட்டை பாடிக் கறக்கலாம்,தண்டிக்கிற மாட்டை தண்டித்துக் கறக்கலாம்" என்பதுபோல்,தலைவர் பிரபாகரனிடம் அவர்களின் பயறு அவியவில்லை என்பதால் பயமுறுத்தி,வற்புறுத்தி,இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் சம்மதக் கையெழுத்துப் பெற முயன்றது சகுனிக் கோஷ்டி..

தலைவர் இந்தியாவில் ஒரு விடுதியில் இந்திய அரசின் தடுப்புக் காவலில் வைக்கப் பட்டு உள்ளார் என்னும் செய்தி ஈழத் தமிழர்களுக்கு எட்டியது...கொதித்தது தமிழர் அலை! பொங்கியது. தமிழ் ஈழம்!..

அதன் விளைவாக, இந்திய இராணுவ முகாம்கள் முன் மக்கள் மறியல் செய்து,தலைவர் பிரபாகரனை உடன் விடுவித்து ஈழம் அனுப்புமாறு வற்புறுத்தினர்.

தமிழர் படையின் எழுச்சி கண்டு இந்தியா அதிர்ந்தது..இலங்கையில் உள்ள இந்தியப் படைக்கு ஏதும் தீங்கு வருமோ? எனப் பயந்த ராஜிவ்காந்தி.தலைவரை உடன் விடுவித்து ஈழத்துக்கு அனுப்புமாறு கட்டளை இட்டார்.

உடனடியாக ஓர் விஷேட விமானம் தலைவரையும் அவர் மனைவியையும்வேறு சிலரையும் சுமந்து கொண்டு ஈழம் நோக்கிப் பறந்தது. பனியின் குளிரில் மூடிக் கிடந்த ரோஜா மலர்களின் இதழ்கள் சூரியனைக் கண்டதும் மலரத் தொடங்கின.

விமானம் பறந்து கொண்டிருந்தபோது தலைவர் தமிழ் ஈழத்தின் கடல் அழகையும்,நில அழகையும் கண்டு இரசித்தார்..அந்த ஒப்பற்ற தமிழனை,பெருவீரனை தலைவனை,தமிழின் நாயகனை,கரிகாலனை வரவேற்க, தமிழ் ஈழ மக்கள் அலைகடல் என ஆர்ப்பரித்து எழுந்தனர்.

தலைவர் டெல்லியால் விடுவிக்கப் பட்டு விமானத்தில் வந்து கொண்டிருக்கிறார் என்னும் செய்தியை திலீபன் மக்களிடம் கொண்டு சேர்த்தான்.

திலீபனுடன் சேர்ந்து நாமும் அதற்கு தயாராகிக் கொண்டிருந்தோம்..நீண்ட நாட்களுக்குப் பின்னர் தலைவரைப் பார்க்கப் போகிறோம் என்னும் மகிழ்வில் உள்ளம் துள்ளிக் குதித்தது.

(அடுத்த அத்தியாயத்தில் தலைவரின் ஈழ வருகை பற்றியும், திலீபன் அதற்காகச் செய்திருந்த மாபெரும் ஏற்பாடுகள் பற்றியும் எழுதுகிறேன்) (தொடரும்)

-மு.வே.யோகேஸ்வரன் -

ஓமந்தையில் நடந்தது என்ன?-விபரிக்கிறார் கைதான ஊடகவியலாளர்


கொழும்பில் நடைபெறவிருந்த ஊடகப்
பயிற்சி நெறி ஒன்றில் பங்குகொள்வதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற ஊடகர்கள் குழு ஓமந்தை சோதனைச் சாவடியில் பொய்க்குற்றம் சாட்டப்பட்டு பல மணி நேரம் தடுத்துவைக்கப்பட்டு இம்சைக்கு உட்படுத்தப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பில் அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த ஊடகவியலாளர் மயூரப்பிரியனின் பகிர்வு

கடந்த வெள்ளிக்கிழமை, ஊடக பயிற்சி நெறிக்கு ஒன்றுக்காக கொழும்பு செல்லவேண்டும் மாலை 5.30 மணிக்கு யாழ்.ஊடக அமையத்தில் இருந்து வாகனம் வெளிக்கிடும் 5.30 மணிக்கு எல்லோரும் ஊடக அமையத்தில் நிற்குமாறு அறிவித்தல் தரப்பட்டது.

அதன் படி நானும் அங்கே நின்றேன். ஒவ்வொருவராக வந்து சேர்ந்ததும் மாலை 6.30 மணியளவில் எமது நண்பர் குழாம் 6 பேர் ஒரு வாகனத்திலும் ஏனையவர்கள் 6 பேர் மற்றுமொரு வாகனத்திலுமாக அங்கிருந்து கிளம்பினோம்.

எம் வாகனம் மற்றைய வாகனம் கிளம்பி 10 நிமிடங்களுக்கு பிறகே அங்கிருந்து கிளம்பியது. நாம் கச்சேரியடியில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எமது வாகனத்தை இருவர் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்ததை அவதானித்தோம்.

அவர்கள் எதேச்சையாக எம் பின்னால் வருகின்றார்கள் என்று கருதி அதனை நாம் பெரிது படுத்தவில்லை. வந்தவர்களையும் கைதடி சந்திக்கு அங்கால நாம் காணவில்லை. நாம் எமது பயணத்தை தொடர்ந்தோம். இரவு 8 மணியளவில் எமக்கு முன்னால் வாகனத்தில் சென்றவர்கள் தாம் முறிகண்டியில் நிற்பதாகவும் எம்மை விரைந்து வருமாறு தொலைபேசியில் கூறினார்.

நாம் முறிகண்டியை 8.15 மணியளவில் சென்றடைந்தோம். எமக்கு முன்னால் சென்றவர்கள் வன்னியை சேர்ந்த 3 ஊடவியலாலர்களை தம்முடன் அழைத்து சென்று எமக்காக காத்திருந்தார்கள். முறிகண்டி பிள்ளையாரை தரிசித்து விட்டும் தேநீர் அருந்தி விட்டும் எமது பயணத்தை தொடரும் போது எமது வாகனத்தில் எமது நண்பர்களில் ஒருவரான வன்னியை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரையும் இணைத்து கொண்டு எமது பயணத்தை தொடர்ந்தோம்.

முறிகண்டியில் இருந்து கிளம்பும் போதும் மற்றைய வாகனத்தை முன்னால் செல்ல விட்டே நாம் அவர்கள் பின்னால் சென்றோம். அப்போதும் எமது வாகனத்தின் பின்னால் மோட்டார் சைக்கிள் ஒருவர் வந்தார். அவர் மாங்குள சந்திக்கு அருகில் வந்ததும் எம்மை முந்தி சென்று மாங்குள சந்தியில் உள்ள இராணுவ பொலிஸ் சோதனை சாவடிக்கு முன்னால் போய் நின்றார். 

அதனை தொடர்ந்து மாங்குள சந்தியில் உள்ள இராணுவ பொலிஸ் சோதனை சாவடியில் நாம் இரவு 9.20 மணியளவில் இராணுவ பொலிசாரினால் மறிக்கப்பட்டோம். எம்மை மறித்த இராணுவ பொலிசார் எமது சாரதியிடம் ஆனையிறவில் உள்ள இராணுவ சோதனை சாவடியில் உங்களை இராணுவத்தினர் மறித்த போது ஏன் வாகனத்தை நிறுத்த வில்லை என கேட்டார் அதற்கு எமது சாரதி வாகனத்தை யாருமே மறிக்கவில்லை என கூறினார்.

அவ்வேளை எமது வாகனத்தை சிவில் உடையில் இருந்தவர்கள் சுற்றி வளைத்து நின்றனர் அதில் ஒருவர் யாருடனோ தொலைபேசியில் உரையாடிக்கொண்டு இருந்தார், பின்னர் அவரும் எமது வாகன சாரதியிடம் ஏன் ஆனையிறவில் மறிக்கும் போது வாகனத்தை நிறுத்த வில்லை என கேட்டார் அவருக்கும் சாரதி வாகனத்தை யாரும் மறிக்கவில்லை என கூறினார்.

அதன் பின்னர் குறித்த நபர் வாகனத்தினுள் இருந்த எம்மை யார் என சாரதியிடம் கேட்டார்கள் அதற்கு சாரதி இவர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் கொழும்பு செல்கின்றனர் நான் ஹயருக்கு வந்ததாக கூறினார். அதனை அடுத்து அவர்கள் முன் இருக்கையில் இருந்த என்னிடம் கேட்டார்கள் எங்கே போகின்றீர்கள் என அதற்கு நான் சொன்னேன் கொழும்புக்கு ஒரு friend வீட்டை போறாம் ஏன் கேட்கின்றீர்கள் என கேட்டதும், உங்களை ஆனையிறவில் மறித்த போது நிற்காமல் வந்ததாக எமக்கு தகவல் கிடைச்சது அதனால தான் கேட்டோம் என்றார்கள்.

சிவில் உடையில் நின்றவர்கள் எம்மிடம் விசாரணை நடத்தும் போது இராணுவ பொலிசார் எதுவுமே கதைக்கவில்லை அத்துடன் எம்மிடம் விசாரணை மேற்கொண்டவர்கள் தமிழிலேயே விசாரணை மேற்கொண்டார்கள் பின்னர் எம்மிடம் விசாரணை மேற்கொண்ட சிவில் உடையில் நின்றவர் தொலைபேசியில் யாருடனோ தொடர்பு கொண்டு கதைத்த பின்னர் யாராவது ஒருவர் IC யை பதிந்து விட்டு செல்லுங்கள் என கூறினார்.

அதனை அடுத்து நான் இறங்கி சென்று எனது IC பதிவினை சோதனை சாவடியில் மேற்கொண்டு இருந்த போது (எனது IC பதிவை சிவில் உடையில் இருந்தவரே மேற்கொண்டார். அப்போதும் எனது உள் மனசு சொன்னது ஆணையிறவில் வாகனத்தை மறித்த போது நிறுத்தாது வந்திருந்தால் அது சாரதியின் தவறு எதற்காக எமது பதிவினை மேற்கொள்ள வேண்டும் என கேள் என்று பிறகு யோசித்தேன்.

இதில் நின்று இவர்களுடன் எதற்காக முரண்படுவான் என விட்டு விட்டேன் எனது பதிவினை மேற்கொண்டு இருந்தவரிடம் தொலைபேசியில் வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்த சிவில் உடைதாரி வந்து கூறினார் வானில் இருக்கும் மிகுதி 6 பேரின் IC யையும் வாங்கி பதியுமாறு கூறிவிட்டு அவர் என்னிடம் கூறினார்

வானில் இருந்து மற்றவர்கள் இறங்க தேவையில்லை அவர்களில் IC யை மட்டும் வாங்கி வருமாறு நான் அதனை வாகனத்தில் இருந்தவர்களிடம் கூறிய போது முன்னுக்கு இருந்தவர்கள் தாம் இறங்கி வந்ததுடன் பின்னுக்கு இருந்தவர்கள் தமது ic தந்து விட்டு வாகனத்தினுள் இருந்தார்கள் எங்கள் 7 பேரின் ic யையும் சிவில் உடையில் இருந்த ஒருவர் பதிவினை மேற்கொண்டு கொண்டிருந்த போது மற்றைய சிவில் உடைதாரி வேறு யாருடனையோ தொலைபேசி தொடர்பிலையே இருந்தார்.

அப்போதும் நாங்கள் கேட்டோம் எதற்காக இந்த பதிவும் என அதற்கு அவர் ஆணையிறவில் இந்த வாகனத்தை மறித்த போது நிறுத்தாமல் வந்தற்காகவே என கூறினார் அப்போது நாம் கேட்டோம் வேறு ஏதாவது பிரச்சனை இல்லை தானே என அதற்கு அவர் இல்லை என்றே கூறினார் ஆனாலும் எமது ic பதிவினை மேற்கொண்ட போது வழமைக்கு மாறாக பிறந்த திகதி எல்லாம் பதிந்தார் (வழமையாக ic பதியும் போது பெயர் , ic இலக்கமும், விலாசம் என்பவற்றையே பதிவர்கள்) எமது பதிவுகளை முடித்த பின்னர் எங்களை அங்கிருந்து செல்ல அனுமதித்தார்கள்.

அங்கிருந்து எமது பயணத்தை தொடர்ந்தோம் ஓமந்தை இராணுவ சாவடியை இரவு 9.50 மணியளவில் சென்றடைந்தோம். அங்கு எமது வாகனத்திற்கு மட்டும் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டு ஒரு 2ம் லெப்டினன் தர அதிகாரியின் தலைமையில் 5 இராணுவத்தினர். எமது வாகனத்தை சுற்றி வளைத்து எம்மை வாகனத்தை விட்டு கிழே இறங்க பணித்தனர்.

(மற்றைய வாகனத்தில் சாரதி மட்டும் இறங்கி சென்று பதிவினை மேற்கொண்டு விட்டு வாகனத்தை எடுத்து செல்கின்றனர்) கீழே இறங்கிய எங்கள் 7 பேரின் அடையாள அட்டைகள் பரிசோதிக்கப்பட்டது அத்துடன் 3 இராணுவத்தினர் எமது வாகனத்தில் ஏறி சோதனை (ஒரு ஹயஸ் ரக வாகனத்தினுள் 3 பேர் ஏறி என்னத்த தேடினாங்களோ)

அதன் பின்னர் வாகனத்தில் தேடுதல் நடத்தியவர்கள் வாகனத்தின் பின்னால் உள்ள எமது bag க சோதனை செய்ய வேண்டும் அதனை திறந்து காட்டும் மாறு எமக்கு கூறினார்கள் அதன் போது நானும் இன்னும் மூவருமாக சென்று எமது Bag கை திறந்து காட்டிக்கொண்டு இருந்த போது எம்முடன் வந்த இருவர் வாகனத்தினுள் ஏறி பின் இருக்கையில் அமர்ந்து இருந்துள்ளார்கள். மற்றும் ஒருவர் எமது வாகனத்திற்கு முன்னால் நின்று எமது வாகனத்தை பார்த்து கொண்டு நின்றார்.

அவ்வேளை ஒருவிதமான தாடி கட்டுடன் இராணுவ சீருடையில் (இராணுவ சீருடை அணிபவர்கள் வித்தியாசமான தாடி கட் விட முடியாது என நினைக்கிறேன் ) வந்த ஒருவர் சாரதியின் இருக்கை பக்கம் உள்ள வாகன யன்னல் வழியாக ஏதோ ஒன்றை போட்டு விட்டு எமது வாகனத்தை கடந்து சென்றார் அதனை வாகன பின் இருக்கையில் இருந்த இருவரும் வாகனத்தின் முன்னால் நின்ற ஒருவரும் கண்டுள்ளனர். குறித்த இராணுவ சிப்பாய் என்னத்த யன்னல் வழியாக உள்ளே போட்டார் என்பதை எடுத்து பார்க்க முதல் எங்கிருந்தோ வந்த இரு பொலிசார் அந்த பொருளை (சிகரெட் பொட்டி) தூக்கினார்கள். (அதெப்படி சரியா வந்தவுடன் அந்த போட்டியை சரியா அடையாளம் கண்டு உடனே தூக்கினாங்களோ ) 

பொலிசார் தாம் அங்கிருந்து எடுத்த சிகரெட் போட்டியினை எடுத்து கொண்டு வந்து வாகனத்தின் முன்னால் நின்றவரிடம் நீயா இந்த வாகனத்தில் வந்தனீ என கேட்டார் அதற்கு அவரும் ஓம் என்றார் இதற்குள் (சிகரெட் பொட்டி) என்ன இருக்கின்றது என தெரியுமா ? என அடுத்த கேள்வியை கேட்டார் அதற்கு அவர் போட்டவரை தான் கேட்கணும் என கூறி எமது வாகனத்தினுள் அந்த பொட்டியை போட்டவரை அடையாளம் காட்டினார்.

அவ்வேளை எங்கிருந்தோ வந்த சிவில் உடையில் (கட்டை கற்சட்டையுடனும் SLRC நுவரெலியா என பதிவிட்ட t சேட்டுடனும்) எம்மை நோக்கி தகாதவார்த்தையால் பேசியபடி வந்தவர் எம்முடன் நின்ற ஒருவரின் கையை பிடித்து இழுத்து தகாதவார்த்தையால் பேசிய படி வா என்றார்.

(சந்தேக நபரை தகாதவார்த்தையால் பேசலாம் என ஏதாவது இலங்கை சட்டம் சொல்கின்றதா ?) அப்போது அருகில் நின்ற நாம் கேட்டோம் எதற்காக அவரை இழுத்து செல்ல முற்படுகின்றீர்கள் ? நீங்கள் யார் என கேட்டோம் அதற்கு அவர் நான் தான் ஓமந்தை பொலிஸ் si என்று பெயர் சொன்னார் (அது தற்போது ஞாபகம் இல்லை) கஞ்சா கொண்டு சென்றதற்காக கைது செய்கின்றேன் என்றார்.

அப்போ நாங்கள் சொன்னோம் இந்த வாகனத்தில் இந்த 7 பேரும் தான் வந்தோம் அப்படியாயின் எங்கள் 7 பேரையும் கைது செய்யுங்கள் என்று அதற்கு அவர் அப்ப 7 பேரும் நடவுங்க என கூறிய போது எம்முடன் இருந்த ஒருவர் தனது தொலைபேசியில் முன்னால் சென்ற வாகனத்தில் இருந்தவர்களுக்கு அறிவிக்கும் நோக்குடன் தொலைபேசியை எடுத்து காதில் வைத்தும் பொலிஸ் si ஒரு கையினால் அவரின் முகத்தை தள்ளி மறுகையால் அவருடைய தொலைபேசியை பறித்து எடுத்துக் கொண்டு பொலிஸ் நிலையத்திற்கு நடவுங்கள் என தகாதவார்த்தையால் பேசினார். ( ஒருவரை கைது செய்தால் அவர் தனது கைது தொடர்பாக பிறிதொருவருக்கு அறிவிக்கும் உரிமை உண்டு தானே? )

 நாங்கள் வாறோம் என்று சொல்லி சம்பவத்தை எமது சாரதியிடம் சொல்ல போனால் சாரதி அதுவரை பதிவை மேற்கொள்ளவில்லை (ஓமந்தை சோதனை சாவடியில் இவ்வளவு பிரச்சனையும் 20 நிமிடங்களுக்கு மேல் நடக்கும் வரை எமது வாகனத்தை சோதனை சாவடியில் இருந்த இராணுவ சிப்பாய் பதிவினை மேற்கொள்ளாமல் திட்டமிட்டு புறக்கணித்துள்ளார்.) 

வாகனம் வரும் நீங்க நடவுங்கள் என தகாதவார்த்தையால் எம்மை பொலிஸ் si பேசினார் அதனை அடுத்து நான் ஓமந்தையில் உள்ள பொலிஸ் சோதனை சாவடியை நோக்கி (200 மீற்றர்) நடந்து கொண்டிருந்த போது எம்முடன் வந்த மற்றுமொருவர் தொலைபேசியில் முன்னுக்கு வாகனத்தில் சென்றவர்களுக்கு அறிவிக்க முற்பட்ட போது குறித்த si அவருடைய கழுத்தில பிடித்து அவரின் தொலைபேசியையும் பறித்தெடுத்தார்.

அதன் பின்னர் கடைசியாக சென்ற இருவரில் ஒருவர் முன்னால் சென்ற பொலிசாருக்கு தெரியாமல் தொலைபேசியில் முன்னுக்கு வாகனத்தில் சென்றவர்களுக்கு அறிவிக்க நான் பொலிசாருக்கு தெரியாமல் எனது தொலைபேசியில் இருந்து tweet பண்ணினேன். அதோடு எம்மை ஓமந்தை சோதனை சாவடியில் உள்ள பொலிஸ் நிலையத்தில் மறித்து வைத்து அங்கிருந்த புத்தகம் ஒன்றில் சிவப்பு பேனாவால் ஏதோ சிங்களத்தில் எழுதி கொண்டு இருக்க எனது tweet பார்த்த ஒருத்தன் எனது தொலைபேசிக்கு உடனே போன் பண்ணினான். 

அதோட எனது தொலைபேசியும் பறிமுதல் செய்யப்பட்டதுடன் ஏனைய அனைவரினது தொலைபேசி மற்றும் அடையாள அட்டைகள் என்பன பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. (முறைப்பாட்டை பதிவு செய்ய முன்னர் சந்தேக நபர்களின் தொலைபேசி மற்றும் அடையாள அட்டைகளை பறிக்கும் உரிமை பொலிசாருக்கு உண்டா ?) அதன் பின்னர் எங்கே சிவப்பு பேனையால் ஏதோ சிங்களத்தில் பதிவினை மேற்கொண்டு விட்டு சிவில் உடையில் இருந்த si பொலிஸ் சீருடைக்கு மாறி எம்மை மீண்டும் தூசணத்தால் பேசி நடவுங்கள் என்றார்.

எம்மை எமது வாகனத்தில் ஏற்றி தானும் ஓமந்தையில் எங்கள் வாகனத்தில் இருந்து கஞ்சா சிகரெட் போட்டியை மீட்ட இரு பொலிசாரையும் அழைத்து கொண்டு எம்மை எங்கோ அழைத்து சென்றார் அதன் போது நாம் எங்களை எங்கே அழைத்து செல்கின்றீர்கள் என்ற கேட்ட போது அது போனதுக்கு அப்புறம் தெரியும் வாயை மூடுங்கள் என்று தூசணத்தால் பேசினார். 

(பொலிசார் எம்மை கைது செய்து கொண்டு செல்லும் போது எங்கே கொண்டு செல்கின்றோம் என்பதை எம்மிடம் கூற தானே வேண்டும் ? ) நேராக எம்மை ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று எம்மை அங்கே உட்காரும் படி பணித்ததுடன் எம்மை நாளை நீதிபதி முன்னால் முற்படுத்தியே விடுதலை செய்வோம் என கூறினார் அப்போது நாம் இன்னும் இரவு சாப்பாடு சாப்பிட வில்லை எமக்கு பசிக்குது சாப்பாட்டுக்கு ஒழுங்கு செய்யும் படி பொலிசாரிடம் கேட்டோம்.

அவர்கள் அதற்கு பதிலே சொல்லவில்லை பச்சை தண்ணியே தந்தார்கள். (பொலிசார் சந்தேக நபர்களை தடுத்து வைத்திருக்கும் போது அவர்களுக்கு சாப்பாடு கொடுக்க தானே வேண்டும்) அவ்வேளை எமக்கு முன்னால் வாகனத்தில் சென்றவர்கள் திரும்பி ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு வந்து விட்டார்கள்.

அவர்கள் வந்து சிறிது நேரத்தில் வவுனியா ஊடகவியலாளர்கள் ஓமந்தை பொலிஸ் நிலையத்தை வந்தடைந்தார்கள். அதனை அடுத்து ஓமந்தை பொலிஸ் நிலையம் பரபரப்பு அடைந்தது. அதை அடுத்து எம்மிடம் இருந்து பறிக்கப்பட்ட எமது கைத்தொலைபேசிகள் , அடையாள அட்டைகள் என்பன எம்மிடம் திருப்பி தரப்பட்டு ஓமந்தை பொலிஸ் பொறுப்பதிகாரி எம்முடன் சமர பேச்சுக்களை நடாத்த தொடங்கினார்.

எமது உடமையில் இருந்து கஞ்சா பொட்டி கைப்பற்றபடாததால் எங்கள் 7 பேரையும் விடுதலை செய்வதாகவும் வாகன சாரதியினையும் வாகனத்தையும் நீதவான் முன் முற்படுத்தி விடுவிப்பதாகவும் கூறினார் அத்துடன் மீட்கபட்ட கஞ்சா சிறிய அளவு என்பதனால் உடனேயே பிணையில் எடுக்கலாம் எனவே நீங்கள் இவை பற்றி கவலை படாமல் செல்லுங்கள் நான் வேணும் என்றால் நீங்கள் செல்ல வேறு வாகன வசதி செய்து தருவதாகவும் கூறினார். 

அதன் பின்னரே சாரதி இலக்கானார் (சுமார் ஒரு மணி நேரம் நாங்கள் 7 பேருமே பொலிசாரின் இலக்காக இருந்தோம் அந்த ஒரு மணி நேரம் வரை சாரிதியின் தொலைபேசியோ அடையாள அட்டையோ பறிமுதல் செய்யப்படவும் இல்லை அவரிடம் எந்த விதமான விசாரணைகளையும் மேற்கொள்ளவில்லை ஏன் அவ்வளவு தகாதவார்த்தையால் எங்களை பேசிய பொலிஸ் si கூட சாரதியை ஒரு வார்த்தை கூட பேசவில்லை) அவரின் இந்த சமரச முயற்சிக்கு நாம் உடன் பட மறுத்தோம்.

ஏனெனில் இராணுவத்தினர் போட்ட கஞ்சா பொட்டியினை தான் பொலிசார் மீட்டனர் வாகன சாரதியை விடுவிக்கா விட்டால். நாம் முறைப்பாடும் செய்வோம் இராணுவத்தினர் போட்ட கஞ்சாவை தான் பொலிசார் மீட்டதாக எனவே எமது முறைப்பாட்டை நீங்கள் பதிவு செய்ய வேண்டும் என கோரினோம் அதற்கு அவர் உங்கள் முறைப்பாட்டை பதிய வேண்டும் ஆயின் ஓமந்தை இராணுவ சாவடியில் உள்ள இராணுவத்தினரின் வாக்கு மூலம் பெற வேண்டும் என கோரி ஒரு பொலிஸ் குழுவை அங்கு அனுப்பி வைத்தார்.

(சிவில் பொலிசார் இராணுவத்தினரை விசாரித்து வாக்கு மூலம் பெறலாமா ?) ஓமந்தை சோதனை சாவடிக்கு இராணுவத்தினரின் வாக்கு மூலம் பெற்று வருவதாக கூறி சென்ற பொலிஸ் குழுவினர் சுமார் 3 மணிநேரம் ஆகியும் வராததால் நாம் பொறுமை இழந்தோம். ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் A 9 வீதியை இரவு 2 மணியளவில் மறித்து எமது முறைப்பாட்டை பொலிசார் ஏற்க வேண்டும் என போராட்டம் நடாத்தினோம்.

எமது போராட்டத்தை அடுத்து இரவு 2.30 மணியளவில் எமது முறைப்பாட்டை ஓமந்தை பொலிஸ் பொறுப்பதிகாரி ஏற்றுக்கொள்வதாக தெரிவித்ததை அடுத்து நாம் எமது போராட்டத்தை கைவிட்டோம். பின்னர் இரவு 3 மணியளவில் எமது முறைப்பாட்டை பொலிசார் ஏற்றுக்கொண்டார்கள் அந்த முறைப்பாட்டில் இராணுவத்தினர் வைத்த கஞ்சா பொட்டியினை தான் பொலிசார் மீட்டார்கள் என குறிப்பிட்டதுடன் பொலிசார் எம்மை தாக்கமுற்பட்டமை தொடர்பிலும் தாகத வார்த்தைகளால் எம்மை பேசியமை மற்றும் எம்முடன் அநாகரிகமாக நடந்து கொண்டமை தொடர்பில் முறைப்பாட்டை பதிவு செய்தோம்.

அதனை தொடர்ந்து எம்மை 4.30 மணியளவில் செல்ல பொலிசார் அனுமதித்தார்கள். ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் சுமார் 6 மணி நேரத்திற்கு மேலாக எம்மை தடுத்து வைத்திருந்த போது எமக்கு பல உதவிகளையும் எமக்கு ஆதரவாகவும் வவுனியாவை சேர்ந்த 3 ஊடகவியலாளர்கள் செயற்பட்டனர்.

6 மணிநேரமாக எம்முடன் நின்ற அவர்களுக்கு எமது நன்றிகள் … அத்துடன் நேரில் வந்து எமக்கு ஆதரவாக நின்ற வடமாகாண சபை உறுப்பினர் Dr. சிவமோகன் அவர்களுக்கும் எம்முடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டவர்களுக்கும், எம்மை தடுத்து வைத்தமை தொடர்பாக செய்திகளை வெளியிட்டவர்களும் எமது நன்றிகள் … என தெரிவித்த மயூரன்.

பொலிசார் எம்மை விடுவித்த பின்னர் அதிகாலை 5 மணியளவில் பிறிதொரு வாகனத்தை வவுனியாவை சேர்ந்த ஊடகவியலாளர்கள் ஒழுங்கமைத்து தர நாம் அதில் கொழும்பு நோக்கி பயணித்தோம் கொழும்பு இதழியல் கல்லூரியை சனிக்கிழமை காலை 10 மணியளவில் சென்றடைந்து அங்கு தேநீர் அருந்தி விட்டு நாம் எமது தங்குமிடம் நோக்கி சென்று 30 நிமிடங்களில் இதழியல் கல்லூரிக்கு முன்னால் சிங்கள அமைப்பு ஒன்று பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்காதே என போராட்டம் நடாத்தியது. 

அதனை அடுத்து எமது பயிற்சி திட்டங்கள் அனைத்தும் கைவிடப்பட்டு எமது தங்குமிடத்திலேயே தங்க வைக்கப்பட்டோம் அதனை அடுத்து மறுநாள் காலை (நேற்று ஞாயிற்று கிழமை) கொழும்பில் இருந்து யாழ்.நோக்கி பயணித்து மாலை 6 மணியளவில் யாழை வந்தடைந்தோம். இது தான் சம்பவம் தொடர்பான எனது வாக்கு மூலம் உகத் தெரிவித்துள்ளார்.

முக்கிய குறிப்பு :- அதேவேளை ஓமந்தை பொலிசாரினால் இன்று மதியம் (28) தமக்கு தொலைபேசி அழைப்பின் ஊடக நாளை செவ்வாய் கிழமை மதியம் 11மணிக்கு ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு எமது முறைப்பாடு தொடர்பான விசாரணைக்காக வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய நாள் எப்படி 28.07.2014

இன்றைய நாள் எப்படி

இன்றைய தினம் மன உறுதியுடன் செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உறவினர்கள், நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சியுண்டு. குழந்தைகளின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். தந்தையின் உடல் நிலை சீராகும். வியாபாத்தில் பாக்கிகள் வசூலாகும். வேலையாட்களின் ஆதரவு கிட்டும். மாணவர்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே
புது முயற்சிகள் வெற்றி தரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணவரவு உண்டு. கணவன் -மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். முன்கோபம் விலகும். பிரியமானவர்களைச் சந்தித்து பொழுதைக் கழிப்பீர்கள். அலுவலகப் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்
உங்களின் வெளிப்படையான பேச்சை அனைவரும் ரசிப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கணவன் -மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவீர்கள். பிள்ளைகளின் விருப்பங்களை பூர்த்தி செய்வீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீகள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு கிட்டும். கன்னிப்பெண்களின் உடல்நிலை சீராகும். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
இன்றும் ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். உறவினர், நண்பர்களால் அன்புத்தொல்லைகள் அதிகரிக்கும். அடுத்தவர்களை குறைக் கூறுவதை நிறுத்துங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்
இன்றையதினம் எதையும் திட்டமிட்டு செய்வது நல்லது. கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வாகனம் தொந்தரவு தரும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்
இன்றையதினம் புதுப்பொலிவுடன் காணப்படுவீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோயம் பிறக்கும். கடன் பிரச்சனை களுக்கு தீர்வு காண்பீர்கள். தாய்வழி உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். முன்கோபம் விலகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை விரைந்து வசூலிப்பீர்கள். அரசுக் காரியங்களில் அனுகூலம் உண்டு. வீடு, வாகனச் செலவுகள் குறையும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெறுகும். அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு
செயலில் வேகத்தைக் காட்டுவீர்கள். வியாபார ரீதியாக சில பிரபலங்களைச் சந்திப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். மாணவர்களின் நினைவாற்றல் கூடும். கன்னிப்பெண்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை

 விருச்சிகம்
முகமலர்ச்சியுடன் காணப்படுவீர்கள். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணப்பற்றாக்குறை நீங்கும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வாகனத்தை சீர்செய்வீர்கள். கன்னிப்பெண்களுக்கு பெற்றொரின் ஆதரவு கிட்டும். மாணவர்கள் உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள். வாகனவசதி பெருகும். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா
இன்றும் சந்திராஷ்டமம் இருப்பதால் பழைய கசப்பான சம்பங்கள் நினைவுக்கு வரும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். சகோதர வகையில் அலைச்சல் இருக்கும். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்
தன்னம்பிக்கை துளிர்விடும். தைரியமான முடிவுகளை எடுப்பீர்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சியுண்டு. வருங்காலத் திட்டங்களைப் பற்றி நண்பர்களிடம் விவாதிப்பீர்கள். தாயாரின் உடல்நிலை சீராக இருக்கும். கண் எரிச்சல், தூக்கமின்மை விலகும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்
இன்றையதினம் திறம்பட செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். ஆன்மிகவாதிகளின் சந்திப்பு நிகழும். வியாபாத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். அரசு விஷயங்களில் அனுகூலமான நிலைக் காணப்படும். வெளிவட்டாரத்தொடர்பு அதிகரிக்கும். முன்கோபம், வீண் டென்ஷன் விலகும். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்
இன்றையதினம் நம்பிக்கைக்குறையவர்களின் சந்திப்பு நிகழும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். கையில் காசுபணம் தேவையான அளவு இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி, சகஊழியர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் மகிழ்ச்சியுண்டு. மாணவர்களின் எண்ணங்கள் பூர்த்தியாகும். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே

வெளி அழுத்தங்கள் வெற்றியை தருமா -அரசியல் தீப்பொறி


தமிழ் மக்களின் அரசியல் நிலைமைகள் மிகவும்
மோசமடைந்திருக்கின்றன. நாளாந்த வாழ்க்கையில் மக்கள் எதிர்நோக்கியுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கோ அல்லது புரையோடியுள்ள இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வைக் காண்பதற்கோ உரிய சாதகமான நிலைமைகளைக் காணமுடியவில்லை.

பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குரிய திசையை நோக்கிய அரசியல் முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதற்குரிய அறிகுறிகளும் தென்படவில்லை. தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் நேரடி பேச்சுக்களை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராக இல்லை என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தி கூறிக்கொண்டிருக்கின்றது.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் மட்டுமே தீர்வுக்கான பேச்சுக்கள் நடத்தப்படும். நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வெளியில் எந்தப் பேச்சுவார்த்தைகளும் கிடையாது என்று திட்டவட்டமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஆனால், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் நடைபெறும் பேச்சுவார்த்தைகள், தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில், ஓர் அரசியல் பொறியாகவே இருக்கும் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கூறுகின்றது. அரசாங்கம் கூட்டமைப்புடன் பிரச்சினைகள் குறித்து நேரடியாக முதலில் பேச வேண்டும். அந்தப் பேச்சுக்களில் என்னென்ன பிரச்சினைகளுக்கு எந்தெந்த வகையில் தீர்வு காணலாம் என்று இரு தரப்பினரும் ஓர் உடன்பாட்டுக்கு வரவேண்டும்.

அந்த உடன்பாட்டின் அடிப்படையில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பேச்சுக்கள் நடத்தி ஓர் இறுதி முடிவுக்கு வரலாம் என்பது தமிழ்த்தேசிய கூட்டமைப்பி;ன் நிலைப்பாடாகும். ஆனால், கூட்டமைப்பு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வந்தே ஆக வேண்டும் என்று அரசாங்கம் அழுங்குப் பிடியாக நிற்கின்றது.

பிரச்சினைகளுக்கு என்ன தீர்வு காண்பது என்பது தொடர்பில் முன்கூட்டிய ஒரு தீர்மானம் இல்லாமல் – ஓர் உடன்பாடு இல்லாமல் தெரிவுக்குழுவில் பேச்சுக்கள் நடத்துவதென்பது காலத்தைக் கடத்துகின்ற ஒரு செயலாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அதேநேரம் தெரிவுக்குழுவில் அங்கத்துவம் பெற்றிருக்கின்ற அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்ற விடயத்தில் உண்மையான அக்கறை கொண்டிருப்பவர்களாகத் தெரியவில்லை. அவர்களிடையே உள்ள தீவிர போக்குடைய பேரினவாதிகள் இனப்பிரச்சினையென்ற ஒன்று நாட்டில் இல்லையென்று சாதிக்கின்ற போக்குடையவர்களாகவே இருக்கின்றார்கள்.

அத்தகைய அரசியல் மனப்பாங்கு கொண்டிருப்பவர்கள் அங்கம் வகிக்கின்ற ஒரு குழுவில் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஓர் அரசியல் தீர்வு குறித்து பேச்சுக்கள் நடத்துவதென்பது நடவாத காரியமாகவே இருக்கும்.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். பெரும்பான்மை இன மக்கள் அனுபவிக்கின்ற அதே உரிமைகள், சிறுபான்மையினராகிய தமிழ் மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் திறந்த மனதுடன் பேச்சுக்களில் ஈடுபடத்தக்க பிரதிநிதிகள் அரசாங்கம் அமைத்துள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இருப்பதாகத் தெரியவில்லை.

தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கின்ற பிரதிநிதிகள் திறந்த மனதுடனும், தாராள சிந்தையுடனும் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளைப் பேச்சுவார்த்தைகளின்போது அணுகுவார்களா என்ற கேள்வி ஒரு புறமிருக்க, அதிகார பலம் கொண்டுள்ள அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண வேண்டும் என்று உளப்பூர்வமாக, நேர்மையாக சிந்திக்கின்றதா என்பதே கேள்விக்குறியாக இருக்கின்றது.

இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு அவசியமி;ல்லை என்ற போக்கிலேயே அரசாங்கத்தின் அரசியல் சிந்தனையோட்டம் காணப்படுகின்றது. தமிழ் மக்களை இந்த நாட்டுப் பிரஜைகளாகக் கணித்து, அவர்களுக்கு சம உரிமை கொடுக்க வேண்டும் என்ற தாராள சிந்தனையை அரசாங்கத்திடம் காண முடியவில்லை.

சரியோ, பிழையோ தமிழ் மக்கள் ஓர் ஆயுதப் போராட்டத்தி;ல் ஈடுபட்டிருந்தார்கள், அந்தப் போராட்டத்தை ஏதோ ஒரு வகையில் வெற்றிகரமாக முடித்துவிட்டோம். பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கப்பட்ட – அதேநேரம் வெல்ல முடியாதவர்கள் என நம்பப்பட்ட விடுதலைப்புலிகளை அழித்தாகிவிட்டது.

விடுதலைப்புலிகளை அழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையில் ஏதோ காரணங்களுக்காக, தமிழ் மக்களும் மோசமாகப் பாதிக்கப்பட்டு விட்டார்கள். விடுதலைப்புலிகளுக்கு ஆதரவளித்தமைக்கான தண்டனையாக இந்த அழிவுகள் இருக்கட்டும்.

அதேநேரம் அதிகார பலம் கொண்ட பேரினவாத கொள்கையுடைய எங்களுடன் மோதுவதற்கு முயற்சிக்கக் கூடாது. அதற்கு இதுவே அவர்களுக்கு ஒரு சிறந்த பாடமாக அமையட்டும் என்ற வகையில் சிந்தித்து, தமிழ் மக்களுடன் ஓர் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி, அரசியல் தீர்வு ஒன்றின் மூலமாக பிரச்சினைகளுக்கு முடிவுகட்டுவோம் என்று அரசாங்கம் ஒரு நல்ல தீர்மானத்திற்கு வருவதற்கும் தயாராக இல்லை.

இந்த நிலையில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாக இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண முடியும் என்பது பகல் கனவாகவே தெரிகின்றது. எனவே, தனது எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படும் வரையில் முன்கூட்டியே ஒரு நம்பிக்கையை உருவாக்க முடியாமல் போயுள்ள நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பங்கு பற்றும் என்று கூறுவதற்கில்லை.

முட்டுக்கட்டை நிலைமைகள் 

 எனவே, தெரிவுக்குழுவுக்கு வரத்தான் வேண்டும் என்கிறது அரசாங்கம். வரவே மாட்டேன் என்கிறது கூட்டமைப்பு. இந்த நிலையில் பேச்சுவார்த்தைகளுக்கான முயற்சி என்பது மோசமான ஒரு முட்டுக்கட்டை நிலைமையில் இப்போது வந்து நிற்கின்றது.

இத்தகையதோர் இடர்ப்பாடான நிலையில், அரசுக்கும் கூட்டமைப்புக்கும் இடையில் ஓர் அரசியல் உறவென்பதையே காண முடியவில்லை. அரசியல் விடயங்களில் முரண்பாடுகள் இருக்கலாம். ஆயினும், அரசியல் நிறுவன ரீதியான உறவு நிலைமையும் இரு தரப்பினரிடையேயும் அற்றுப் போயிருக்கின்றது.

யுத்த மோதல்கள் இடம்பெற்ற வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்காகவே உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்களையும், மாகாண சபை தேர்தல்களையும் நடத்தியதாக அரசாங்கம் பெருமைபட்டுக் கொள்கின்றது.

ஆனால், ஜனநாயக வழிமுறையில் தெரிவு செய்யப்பட்ட அந்த சபைகளை – குறிப்பாக மாகாண சபைகளை சீராகச் செயற்படுவதற்குரிய வழிவகைகளைச் செய்து கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராக இல்லை.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்கின்ற வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் நிர்வாகத்திற்குப் பொறுப்பாக உள்ள மாகாகண சபைகள் அந்த மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும், அழிந்து போயுள்ள அவர்களின் வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதிலும், சட்ட வரையறைக்கு உட்பட்ட வகையில் சுயமாக இயங்கட்டும் என்று விட்டுக் கொடுப்பதற்கு அரசாங்கம் இன்னும் முன்வரவில்லை.

அரசியலமைப்பு ரீதியாக மாகாண சபைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை அந்த சபையினர் பயன்படுத்துவதை அரசாங்கம் விரும்பாத ஒரு போக்கையே கொண்டிருக்கின்றது. அத்துடன் மாகாண சபைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை எப்படியாவது மத்திய அரசாங்கத்தின் கையில் திரும்பவும் பெற்றுவிட வேண்டும் என்பதிலேயே அரசாங்கம் குறியாக இருக்கின்றது. 

இதனால், அரசாங்கம் கூறுவதைப்போன்று, ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்காக நடத்தப்பட்ட தேர்தல்களில் சட்ட ரீதியாக வெற்றிபெற்று ஆட்சியமைத்திருப்பவர்களும், அந்த சபைகளுக்கு மக்களால் தெரிவ செய்யப்பட்டவர்களும் தமது ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்த முடியாதவர்களாகவே இருக்கின்றார்கள்.

பெயரளவில் பதவிகளில் இருந்து கொண்டு நாளாந்த வாழ்க்கையில் பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டிருக்கின்ற பொது மக்களுக்கு சேவை செய்ய முடியாதிருக்கின்றதே என்று அவர்கள் அங்கலாய்த்துக் கொண்டிருக்கின்றார்கள். அதேநேரம் தேர்தல்களில் நம்பிக்கையோடு வாக்களித்துள்ள மக்கள்,

தங்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள், மாகாணசபை முறைமையின் கீழ் அதிகாரங்களைப் பெற்றிருந்தும்கூட, தங்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்கின்றார்களில்லையே, என்று சலித்துப் போயிருக்கின்றார்கள். இந்த இரு தரப்பினருடைய அங்கலாய்ப்பும், சலிப்பும் இணைந்து, அரசு மீது நம்பிக்கையற்ற நிலைமையொன்றையே ஏற்படுத்தியிருக்கின்றது.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுடைய தேவைகள் அதிகம். அவற்றைப் பூர்த்தி செய்ய வேண்டியது அந்த யுத்தத்தில் அமோக வெற்றியீட்டி பெருமையடைந்துள்ள அரசாங்கத்தின் கடமை என்பது மக்களுடைய எதிர்பார்ப்பாகும்.

ஆனால் வெறுமனே உட்கட்டமைப்பு வசதிகளை மாத்திரம், அதிலும் குறிப்பாக பார்வையைப் பற்றி, கவர்ந்து இழுக்கத்தக்க வகையில் வீதிகளையும் அரச கட்டடங்களையும் மொழுமொழுவென அரசாங்கம் அழகாகக் கட்டி முடித்திருக்கின்றது.

நிலையான, நிம்மதியான வாழ்க்கைக்குரிய சொந்தக் காணிகளில் நிரந்தரமாகக் குடியிருக்கவும், நிரந்தரமான வருமானத்தைக் கொண்ட வாழ்வாதார வசதிகளையும், அரசாங்கம் இன்னும் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்பது மீள்குடியேற்றப் பிரதேசங்களில் வசிக்கின்ற மக்களின் ஏக்கமாக இருக்கின்றது.

யுத்தத்தினால் சீரழிந்து போயுள்ள தமது வாழ்க்கையை மீளவும் கட்டியெழுப்புவதற்குப் பதிலாகக் கண்துடைப்பு நடவடிக்கைகளையே அரசாங்கம் மேற்கொண்டிருக்கின்றது, அதேநேரம் தேவையற்ற தொல்லைகளுக்குத் தங்களை உள்ளாக்கி, கஸ்டப்படுத்துகின்றது என்றே அந்த மக்கள் கூறுகின்றார்கள்.

இதனால், யுத்த மோதல்கள் இடம்பெற்ற பிரதேசங்களில் ஜனநாயத்தை நிலைநாட்டியுள்ளோம் என்ற அரசாங்கத்தின் கூற்றும், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைப் பெருமளவு நிதி முதலீட்டின் மூலம் கட்டியெழுப்பியுள்ளோம் என்ற அரசாங்கத்தி;ன் பிரசாரமும் பொய்த்துப் போயிருக்கின்றன.

இந்த வகையில் மாகாண சபைகளின் ஊடாக, அரசியலமைப்பு ரீதியாக, யுத்த மோதல்கள் இடம்பெற்ற பிரதேசத்தைச் சேர்ந்த மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகள் மறுக்கப்பட்டிருப்பதனால், அங்கு பல்வேறு பிரச்சினைகள் தலையெடுத்திருக்கின்றன.

யுத்தம் முடிவுக்கு வந்து ஐந்து வருடங்களாகின்ற நிலையில், யுத்தம் நடைடைபெற்ற பிரதேசங்களில் இருந்து இராணுவத்தை விலக்காமல் வைத்திருப்பதுவும், சிவில் நடவடிக்கைகளிலும் சிவில் நிர்வாகச் செயற்பாடுகளிலும் மட்டுமல்லாமல் அரச சார்பான அரசியல் நடவடிக்கைகளிலும் அவர்களை ஈடுபடுத்தி வருவதுவும், அங்கு இன்னும் பிரச்சினைகளை அதிகரிப்பதற்கே வழிவகுத்திருக்கின்றன.

இதனால் மோசமான யுத்தம் ஒன்று முடிவுக்கு வந்து காலம் கடந்துள்ள போதிலும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், சீரான ஒரு வாழ்க்கைக்குத் திரும்புவதில் பல்வேறு முட்டுக்கட்டைகள் ஏற்பட்டிருக்கின்றன. ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

வெளி அழுத்தங்களும் இல்லை 

அரசியல் தீர்விலும்சரி, யுத்தத்திற்குப் பின்னர் எழுந்துள்ள அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளிலும்சரி, உள்ளுரில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குரிய அரசியல் சூழ்நிலைகள் காணப்படவில்லை.

அத்துடன் அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கத்தில், அரசியல் முன்னெடுப்புக்களோ அல்லது தொடர்ச்சியாக வலுவான அழுத்தம் கொடுக்கத்தக்க வகையிலான மக்கள் போராட்டங்களோ அல்லது உசிதமான அரசியல் செயற்பாடுகளோ முன்னெடுக்கப்பட்டிருப்பதாகக் கூற முடியாதிருக்கின்றது.

அதேநேரம், கூட்டமைப்பின் மீது அரசாங்கம் பாராமுகமாக இருப்பதனால், தொட்டதற்கெல்லாம், ஐநா மன்றத்தையும், அயல் நாடாகிய இந்தியாவையும், சர்வதேச நாடுகளையும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் தமிழ் மக்களும் நம்பியிருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

அதனால் அவர்கள் தமது பிரச்சினைகளைப்பற்றி பேசுவதிலும், அவற்றுக்குத் தீர்வு காண்பதிலும் வெளியாரைச் சார்ந்திருக்க வேண்டிய அவல நிலைமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றார்கள்.

யுத்தம் முடிவுக்கு வந்து ஐந்து வருடங்களாகின்றது. எனினும், அரசியல், சமூக, பொருளாதார, நிலைமைகளிலும், யுத்தத்திற்குப் பின்னர் ஏற்பட்டிருக்க வேண்டிய சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கம், புனர்வாழ்வு மற்றும் வாழ்க்கை மறுசீரமைப்பு போன்ற செயற்பாடுகளில் ஏற்பட்டிருக்க வேண்டிய முன்னேற்றமும் இன்னும் ஏற்படவில்லை என்றே கூற வேண்டியிருக்கின்றது.

முப்பது வருடங்களாகத் தொடர்ந்த யுத்தம், அதன் இறுதிக்கட்டமாகிய முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற ஊழிக்கால அழிவு, இழப்பு, உளரீதியான பாதிப்பு என்பவற்றில் ஒப்பீட்டளவில் ஏற்பட்டிருக்க வேண்டிய மாற்றங்கள் அல்லது முன்னேற்றங்கள் போதாது என்பதே நிபுணர்களின் கருத்தாகும்.

இந்த நிலையில் உள்ளுர் அரசியல் நிலைமைகளைச் சீர் செய்வதற்கு, பாதிக்கப்பட்ட மக்கள் நம்பியிருக்கின்ற – அல்லது எதிர்பார்த்திருக்கின்ற ஐநா மன்றம், இந்தியா மற்றும் சர்வதேச தரப்புக்களின் அழுத்தங்களும் சரியான முறையில் அரசு மீது பிரயோகிக்கப்படுவதாகத் தெரியவில்லை.

ஐநா மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா, இலங்கை அரசுக்கு எதிராக, மூன்று பிரேரணைகளைக் கொண்டுவந்து வெற்றிகரமாக நிறைவேற்றியதன் விளைவாக ஐநா மனித உரிமைப் பேரவை முன்னெடுத்துள்ள சர்வதேச விசாரணையொன்றுக்கு அரசு முகம் கொடுத்திருக்கின்றது.

இந்த சர்வதேச அழுத்தமானது தமிழ் மக்களின் அரசியலில் பெரியதொரு விடயமாக நோக்கப்படுகின்றது. பேசப்படுகின்றது. அந்த வகையில் இந்த நடவடிக்கை தொடர்பில் பெரும் எதிர்பார்ப்பையே பலரும் கொண்டிருக்கின்றார்கள்.

இறுதி நேர யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் என்பவை தொடர்பிலேயே இந்த சர்வதேச விசாரணையின் கவனம் குவி மையம் கொண்டிருக்கின்றது.

இந்த விசாரணையின் மூலம், உரிமை மீறல் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இந்த விசாணையின் ஊடாகக் கிடைக்கும் என்றால் அது வரவேற்கத்தக்கதே. அதேநேரம், யத்தத்தின் பின்னர் ஏற்பட்டிருக்க வேண்டிய அரசியல் தீர்வுக்கும், அன்றாடப் பிரச்சினையில் மக்கள் மோசமான அரச அடக்குமுறை நடவடிக்கைகளின் மூலம் முகம் கொடுத்து வருகின்ற பிரச்சினைகளுக்கான தீர்வுக்கும் இந்த சர்வதேச விசாரணை வழி வகுக்குமா என்பது தெரியவில்லை.

அது மட்டுமல்லாமல் நாளுக்கு நாள் நாட்டில் சிறுபான்மையினராகிய தமிழ் மக்களினதும். முஸ்லிம் மக்களினதும் நிலைமைகள் மோசமடைந்து கொண்டிருக்கின்றன. அவர்களின் அடிப்படை உரிமைகள்கூட அப்பட்டமாக மீறப்படுகின்றது. அரச நிழல் சார்ந்த வன்முறைகள் பகிரங்கமாக மேடையேற்றப்படுகின்றன.

இத்தகைய நிலைமைகளின் உண்மைத் தன்மைகள் வெளியில் தெரியவராத வகையில் இறுக்கமான, மறைமுக மற்றும் நேரடி நடவடிக்கைகள் அதிகாரக் கட்டமைப்புக்களின் ஊடாகத் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்தகைய ஒரு சூழலில் தமிழ் மக்களும், தமிழ்த்தலைவர்களும் எதிர்பார்த்திருக்கின்ற வெளி அழுத்தங்கள்.

அரசாங்கத்தின் மீது செல்வாக்கைப் பிரயோகிப்பதாகத் தெரியவில்லை. தமிழர் தரப்பு எதிர்பார்த்திருக்கின்ற அல்லது நம்பியிருக்கின்ற வெளி அழுத்தங்களைக் கொண்டு வருவதற்குரிய முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றதா என்றால், அதுவும் இல்லையென்றே கூறவேண்டியிருக்கின்றது.

மொத்தத்தில் தமிழ் தரப்பின் போராட்டமும் சரி, நியாயமான உரிமைகளைப் பெறுவதற்குரிய முன்னெடுப்பு நடவடிக்கைகளும் சரி மந்த நிலையிலேயே காணப்படுகின்றன.

இதனால், இப்போது - 

இந்த மந்த நிலையைப் போக்குவதற்குத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமையில் மக்கள் என்ன செய்யப் போகின்றார்கள்? கூட்டமைப்பு என்ன செய்யப் போகின்றது? தமிழர் தரப்பின் நலன்களுக்காகச் செயற்பட்டு வருகின்ற புலம்பெயர் தமிழ்ச் சமூகம் என்ன செய்யப் போகின்றது? –

என்ற கேள்விகள் விசுவரூபமெடுக்கத் தொடங்கியிருக்கின்றன. இவற்றுக்குப் பதில் சொல்லப் போவது யார்? இந்த மந்த நிலையை மாற்றி நிலைமைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தப் போவது யார்?

-செல்வரட்ணம் சிறிதரன்-