பக்கங்கள்

'இலங்கை அரசு மக்களைத் தடுத்தாலும் ஐநா விசாரணை நடக்கும்'


இலங்கை மீதான சர்வதேச விசாரணையை நடத்தவுள்ள
ஐநா விசாரணைக் குழுவுடன் தொடர்பு கொள்ளும் மக்களை அரசாங்கம் தடுக்க முயன்றாலும் தமது விசாரணைகள் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும் என்று அந்த விசாரணைக் குழுவின் வல்லுநர்களில் ஒருவரான அஸ்மா ஜஹாங்கிர் தெரிவித்துள்ளார்.

மக்களை எதேச்சாதிகாரமாக தடுக்க முயல்வது அரசாங்கத்துக்கே பாதகமாக அமையும் என்றும் அஸ்மா ஜஹாங்கிர் பிபிசிக்கு அளித்துள்ள பிரத்தியேக செவ்வியில் தெரிவித்துள்ளார். ஐநா விசாரணைக் குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது என்று தீர்மானம் எடுத்துள்ள இலங்கை அரசாங்கம், அந்த விசாரணைக் குழுவுடன் தொடர்பு கொள்பவர்களுக்கு எதிராகவும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அண்மையில் அறிவித்திருந்தது. 

இந்த சூழ்நிலையில், இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தவுள்ள விசாரணைக் குழுவை ஐநா மனித உரிமைகள் பேரவை கடந்த வாரம் அறிவித்தது. பின்லாந்தின் முன்னாள் அதிபர் மார்ட்டி அத்திசாரி, நியூசிலாந்தின் முன்னாள் கவர்னர் ஜெனரல் சில்வியா கார்ட்ரைட் மற்றும் பாகிஸ்தான் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் அஸ்மா ஜஹாங்கிர் ஆகிய மூன்று துறைசார் வல்லுநர்கள் இந்த விசாரணையில் நியமிக்கப்பட்டுள்ளனர். 

மக்களைத் தொடர்புகொள்ள வழிகள் உண்டு 

எந்தவொரு அரசாங்கமும் விசாரணையாளர்களுடன் தொடர்பு கொள்வதை தடுப்பது என்பது மிகவும் சிரமமான விடயமாகத் தான் இருக்கும். அரசாங்கம் எதேச்சாதிகாரத்தை பிரயோகித்து மக்களைத் தடுக்க நினைத்தால், அரசாங்கத்துக்குத் தான் அது பாதகமாக வந்து முடியும் என்றார் அஸ்மா ஜஹாங்கிர்.

எல்லா தரப்பினரும் புரிந்துள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தமது விசாரணைக் குழு பக்கச்சார்பற்ற முறையிலும் சுயாதீனமாகவும் விசாரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். அரசாங்கம் தடுத்தாலும் மக்கள் தம்மோடு தொடர்பு கொள்வதற்கான வழிமுறைகளைக் கண்டு கொள்வார்கள் என்றும் பாகிஸ்தானிய வழக்கறிஞர் அஸ்மா ஜஹாங்கிர் கூறினார்.

அரசாங்கங்கள் ஒத்துழைப்பு வழங்காதிருந்த பல சர்வதேச விசாரணைகளை இதற்கு முன்னர் தாம் நடத்தியிருப்பதாகவும் விசாரணைக்குழு வல்லுநர் ஜஹாங்கிர் தெரிவித்தார். தமக்கு இரகசியமாக தகவல்களை அளிப்போரின் இரகசியத் தன்மை பாதுகாக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். தமது விசாரணைகள் வரும் ஆகஸ்ட் முதல்-இரண்டு வாரங்களில் தொடங்கும் வாய்ப்புள்ளதாகவும் அஸ்மா ஜஹாங்கிர் கூறினார்.

தமது பரிந்துரைகள் அடங்கிய விசாரணை அறிக்கை எதிர்வரும் மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், ஐநா மனித உரிமைகள் பேரவையே அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவெடுக்கும் என்றும் வழக்கறிஞர் ஜஹாங்கிர் தெரிவித்தார்.

தொடர்பு பட்ட செய்தி

ஐ நா விசாரணையை இனி பாகிஸ்தானும் ஏற்றுக்கொள்ளும்?

இன்றைய நாள் எப்படி 02.07.2014

இன்றைய நாள் எப்படி

இன்றையதினம் எதிர்பார்த்த உதவிகள் தக்கசமயத்தில் கிடைக்கும். கையில் காசுபணம் புரளும். பிரியமானவர்களுக் காக அதிகம் செலவு செய்வீர்கள். குடும்பவருமானத்தை உயர்த்துவீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். வீட்டில் சுபகாரியங்கள் ஏற்பாடாகும். வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் புது முயற்சிகளால் லாபத்தை பெறுக்குவீர்கள். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை
எண்ணம்போல் செயல்பட வேண்டும்மென எண்ணுவீர்கள். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். தாயாரின் உடல் நிலை சீராக இருக்கும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு சுமுகமான தேதீர்வு கிட்டும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் விலகும். வீட்டில் கலகலப்பான சூழல் ஏற்படும். வாகனத்தை மாற்றுவீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்
பேச்சில் கம்பீரம் பிறக்கும். தடைப்பட்ட காரியங்களை உடனே முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் பேச்சை ரசிப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் பணஉதவி கிடைக்கும். தந்தைவழி உறவினர்களால் மகிழ்ச்சி யுண்டு. ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லை விலகும். அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்
இன்றைய தினம் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். உங்களைச் சுற்றியிருப்பவர்களால் இருந்து வந்த தொந்தரவுகள் விலகும். குடும்பத்தினருடன் மனம் விட்டுப்பேசுவீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். உத்தியோகத்தில் சகஊழியர்களின் ஆதரவு கிட்டும். அரசு காரியங்ளில் ஆர்வம் காட்டுவீர்கள். வயிற்றுவலி, தலைசுற்றல் விலகும். வாகனத்தை சீர் செய்வீர்கள். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். நண்பர்கள், உறவினர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே
இன்றையதினம் எடுத்த வேலைகளை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகமாகும். பிள்ளைகளிடம் பரிவாகப் பேசுங்கள். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். அசைவ, கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்
இன்றைய தினம் சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படு வீர்கள். நீங்கள் பார்க்க நினைத்த நபரே உங்களை வந்து சந்தித்து மகிழ்ச்சியில் ஆழ்த்துவார். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணவரவு சீராக இருக்கும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். சகோதர வகையில் மகிழ்ச்சியுண்டு. வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா

 விருச்சிகம்
குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளின் வருங்காலத்திற்காக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். வீண் விவாதங்களை தவிர்ப்பீர்கள். வாகனத்தை சீர்செய்வீர்கள். உத்தியோகத்தில் வேலைசுமை குறையும். சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். வருந்தினர்கள், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியுண்டு. ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்
இன்றைய தினம் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. பிள்ளைகளின் கோபம், அலட்சியப் போக்கு மாறும். பழைய நினைவுகள் நெஞ்சில் நிழலாடும். உறவினர்கள், நண்பர்கள் மதிப்பார்கள். பணப்பற்றாக்குறை நீங்கும். வியாபரத்தில் லாபம் உண்டு. உத்தியோகத்தில் தடைபட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். வீண் அலைச்சல் நீங்கும். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்
சந்திராஷ்டமம் தொடர்வதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். குடும்பத்தினரைப் பற்றி யாரிடமும் குறைவாகப் பேச வேண்டாம். நன்றி மறந்த சிலரை நினைத்து வருத்தமடைவீர்கள். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு
எடுத்த வேலையை தடையின்றி முடிப்பீர்கள். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அனபுத்தொல்லைகள் விலகும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை
இன்றையதினம் சொன்ன சொல்லைக் காப்பாற்ற அதிரடியாக செயல்படுவீர்கள். பணவரவு திருப்தி தரும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உடல் நலம் சீராகும். தாய்வழி உறவினர்களால் நன்மையுண்டு. பிரியமானவர்களைச் சந்தித்து மகிழுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக நடந்துக் கொள்வார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா

யப்பானில் செய்திகளை தெளிவான உச்சரிப்புடன் வாசிக்கும் பெண் ரோபோ



உலகிலேயே முதன்முதலாக தெளிவான

உச்சரிப்புடன் செய்தி வாசிக்கும் பெண் ரோபோவை ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

ஜப்பானைச் சேர்ந்த இஷ்கியுரோ என்ற விஞ்ஞானி தனது குழுவினருடன் சேர்ந்து ரோபோ ஒன்றை உருவாக்கினார். தற்போது டோக்கியோ தேசிய அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த ரோபோ பெண் உருவத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ரோபோவை செய்தி வாசிக்க வைத்து விஞ்ஞானிகள் அசத்தினர். 
அழகான பெண் போன்ற தோற்றத்தில், தெளிவான உச்சரிப்பில் செய்தி வாசித்த அந்த ரோபோவை பார்த்த பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்தனர். தற்போது, கோடோமொராய்டு என்ற குழந்தை ரோபோ ஒன்றையும், ஓட்டோனாராய்டு என்ற வயது வந்தவரைப் போன்ற பெண் ரோபோ ஒன்றையும் உருவாக்கியுள்ளனர்.
குழந்தை ரோபோ மழலை மொழியில் செய்திகள் வாசிக்கிறது. இந்த ரோபோக்களில் செய்திகளின் டேட்டாக்களை பதிவு செய்து விட்டால், அந்த ரோபோக்கள் தெளிவான உச்சரிப்பில் செய்திகள் வாசிக்கும். வருங்காலத்தில் இன்னும் புத்திசாலித்தனமான முறையில் செய்தி வாசிக்கும் ரோபோக்களை உருவாக்க இருப்பதாக விஞ்ஞானி இஷ்கியுரோ கூறியுள்ளார்





மேலும் இது தொடர்பான காணொளி

தமிழர் தரப்பின் நிதானம் - திரு­மலை நவம்


தமி­ழர்கள் செய்த தவறை நாம் செய்ய முடி­யாது.
சிங்­க­ள­வரை அர­வ­ணைத்துச் செல்ல வேண்டும். உணர்ச்சி பூர்­வ­மான தலைமை முஸ்லிம் மக்­க­ளுக்கு தேவை­யில்லை என்ற கருத்தை வலுப்­ப­டுத்தி உற்­பத்தித் திறன் ஊக்­கு­விப்பு அமைச்­சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தவி­சா­ள­ரு­மான பஷீர் சேகு­தா வூத் அண்­மையில் தெரி­வித்­தி­ருந்தார். 

அவர் தனது கருத்தில் மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது; 

இன்று முஸ்லிம் மக்­க­ளுக்கு தேவைப்­ப­டு­வது உணர்ச்சி பூர்­வ­மாக தொழிற்­படும் தலை­மைத்­து­வ­மல்ல. சிந்­தனை பூர்­வ­மாக தொழிற்­படும் தலை­மைத்­து­வமே தேவை. கடந்த பல தசாப்த கால­மாக தமிழ் மக்கள் தமது உரி­மைக்­காகப் போரா­டினர். ஆனால் இது வரை அது வெற்றி பெற்­ற­தாக தெரி­ய ­வில்­லை­யென்ற கண்­டு­பி­டிக்­கப்­பட்ட உண்­மையின் அடிப்­ப­டை­யிலும் தனது அனுபவப் பூர்­வ­மான கருத்தைபட்­ட­வர்த்­த­ன­மாக சொல்­லி­யி­ருந்தார். 

அமைச்­சரின் இந்தக் கருத்து தமிழ் மக்கள் பற்­றிய பின்­வரும் கருத்­துக்­களை அழுத்­த­மாக பதிவு செய்­துள்­ளது. ஒன்று தமி­ழர்கள் தவறு செய்­வ­தையே பழக்­க­மா­கவும் வழக்­க­மா­கவும் கொண்­ட­வர்கள். இன்­னொன்று தமி­ர்­க­ளு­டைய தலை­மைத்­துவம் என்­றுமே உணர்ச்­சி­ம­யப்­ப­டுத்­தப்­பட்­டது. மற்­றொன்று இந்த இரண்டு விட­யங்­க­ளையும் முஸ்லிம் மக்­களோ அல்­லது அவர்­களின் அர­சியல் தலை­மைத்­து­வமோ என்­றுமே செய்யப் போவ­தில்­லை­யென்ற தெளி­வான கருத்தைப் பகிர்ந்து கொண்­டுள்ளார். 

இலங்­கையின் சுதந்­திரப் போராட்ட காலம் தொட்டு இன்று வரை­யுள்ள ஆறரை தசாப்த கால அர­சியல் போக்கு, பொரு­ளா தார போக்கு, சமூகப் போக்கு என்­ப­வற் றின் விப­ரங்­களும் விளக்­கங்­களும் தெரி­யா­ததொரு விட­யமல்ல. இலங்­கையின் அர­சியல் போராட்ட வர­லாற்றில் போராட்டம் என்ற பதம் 1956 ஆம் ஆண்டு வரை அல்­லது 1958ஆம் ஆண்டு இனக்­க­ல­வரம் என்ற பூதம் புறப்­ப ட்ட காலம் வரை எந்­த­வித கன­தியும் பெற்­றி­ருக்­க­வில்லை. 

தமிழ் மக்கள் எங்­கி­ருந்து அல்­லது எந்த இடத்­தி­லி­ருந்து அல்­லது எந்த சந்­தர்ப்­பத்­தி­லி­ருந்து தவறை இழைக்க முற்­பட்­டார்கள் என்­பதை கண்டு கொள்ள வேண்­டிய தேவை தமிழ் மக்­க­ளுக்கும் இன்­னு­மொரு புறம் சிறு­பான்மை சமூ­கத்­துக்கும் அவ­சி­ய­மான ஒரு விட­யந்தான். 1919 ஆம் ஆண்டு தமி­ழர்­களும் சிங்­கள மக்­களும் இணைந்து தேசிய காங்­கி­ரசை நிறு­வி­னார்கள். சேர் பொன்.அரு­ணா­சலம் பேரின சமூ­கத்தின் இணக்க உடன்­பாட்­டுடன் தேசிய அர­சி­யலே நடத்திச் செல்ல வேண்டும். 

அர­சியல் திட்­டத்தின் சம்­பள உரிமை நிலை­நி­றுத்த வேண்­டு­மென நிறு­வப்­பட்ட தேசிய காங்­கி­ர­சுக்கு பூரண ஆத­ரவு வழங்­கினார். நடந்­தது என்ன சேர் பொன் அரு­ணா­ச­லமும் அவ­ரது சகோ­தரர் சேர் பொன் இரா­ம­நா­தனும் இலங்கை தேசிய காங்­கி­ரஸில் இருந்து வெளி­யேற்­றப்­பட்­டார்கள். இவர்கள் இழைத்த தவறு பேரினச் சமூ­கத்தை அர­வ­ணைத்து செல்ல வேண்­டு­மென்ற உயர்ந்த தத்­துவ ஞானம் 1948 இல் பிர­ஜா­வு­ரிமைச் சட்டம் கொண்­டு­ வ­ரப்­பட்ட போது ஜி.ஜி. பொன்­னம்­பலம், ராம­லிங்கம் மற்றும் கன­க­ர த்­தினம் ஆகிய மூவரும் அப்­பி­ரே­ர­ணைக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­தார்கள். 

காரணம் டி.எஸ். சேன­நா­யக்­காவின் தலை­மை­யி­லான தேசிய சமூ­கத்­துக்கு ஆத­ரவு வழங்க வேண்­டு­மென்ற நோக்கம். அவர்கள் அன்று செய்த தவறின் கார­ண­மாக இன்று வரை மலை­யக சமூ­கத்தின் எதி­ரி­க­ளாகப் பேசப்­ப­டு­வது வழக்­க­மா­கி­விட்­டது. 1956 ஆம் ஆண்டு (15.6.1956) சிங்­களம் மட்டும் அர­ச­க­ரும மொழி என்னும் சட்­ட­மூலம் நிறை­வேற்­றப்­பட்­டது. இது கொண்டு வந்த பாரிய நன்மை 1958 ஆம் ஆண்டு இனக்­க­ல­வ­ர­மென்னும் திரு­வி­ழாவைக் கொண்டு வந்­தது. இதை தமி­ழர்கள் யாரும் கைநீட்டி வர­வேற்­க­வில்லை. இந்­நாட்டின் இனக் குரோ­தத்தின் முத­லா­வது கோரத் தாண்டம் முதல் முறை ஆடப்­பட்­டது. 

இதற்கு முன் 1915 ஆம் ஆண்டு பிரித்­தா­னிய சாம்­­ராஜ்­சியம் இலங்­கையைக் கட்­டி­யாண்ட காலத்தை முஸ்லிம் மக்­க­ளுக்­கெ­தி­ராக மூண்­ட­இனக் கல­வ­ரத்தின் மூலச் சம்­பவம் பௌத்த மத ஊர்­வ­லமும் கொண்டு வந்­ததன் விளைவை கம்­பளை மக்கள் மறந்து விட முடி­யாது. இதன் பின்னே அடுக்­க­டுக்­காக நடந்த எல்லாச் சம்­ப­வங்­களும் அர­சியல் மாற்­றங்­க ளும் அறி­யப்­பட்­ட­வொன்றே. பண்டா -–செல்வா ஒப்­பந்தம் டட்லி –- செல்வா ஒப்­பந் தம், 1973 ஆம் ஆண்டு கொண்­டு­வ­ரப்­பட்ட பல்­க­லைக்­க­ழக தரப்­ப­டுத்தல், 1977 ஆம் ஆண்டு ஆவணிக் கல­வரம் என்ற இன்­னோரன்ன இனக்­கு­றுகல் நிகழ்­வுகள் தமிழ் மக்­களை மாத்­திரம் பாதித்த சம்­ப­வங்­க­ளாக இருக்­கலாம். 

இவை­யெல்லாம் தமிழ் மக்கள் செய்த தவ­று­களின் பாடங்கள் என்று சொல்­வது எந்­த­ளவு கோல்­கொண்டு அளக்­கப்­ப­டு­கி­றது என்று தெரி­ய­வில்லை. 1983 ஆம் ஆண்­டுக்கு பின் உரு­வாகிக் கொண்ட ஆயுதப் போராட்ட முனைப்­புக்கள் பல்­வேறு பரி­மா­ணங்­களைக் கொண்­ட­தாக ஆகிக் கொண்­டதன் விளைவு சிறு­பான்மை சமூ­கங்கள் மீது மேலா­திக்க சமூ­கமும் அர­சி யல் தலை­மைத்­து­வமும் செலுத்­திய சுட்­டூ­ழி­யங்­க­ளையும் அநீ­தி­க­ளையும் சர்­வ­தேச மயப்­ப­டுத்த கார­ண­மா­கி­யது என்­ப­தாகும். 

1983 ஆம் ஆண்டு வரை உள்­நாட்­டுக்குள் மாத்­திரம் வட்டம் போட்டுச் சுழன்று கொண்­டிருந்த சிறு­பான்மை சமூ­கத்­துக்­கெ­தி­ரான அடக்கு முறை­களும் ஒடுக்­கு­வா­தங்­களும் ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை வரை பதி­யப்­பட்­டி­ருப்­ப­தற்­கு­ரிய பரி­ணா­மத்தை தந்­தி­ருக்­கி­றது என்­பது மாத்­தி­ர­மல்ல அண்­மையில் நடந்த அட்­டூ­ழி­யங்­களை குறிப்­பாக முஸ்லிம் மக்­க­ளுக்­கெ­தி­ராக கொழுந்து விட்­டெ­றிய ஆரம்­பித்­தி­ருக்கும் இன­வாத தீயை முஸ்லிம் தலை­மைத்­து­வங்கள் சர்­வ­தேச சமூ­கத்­துக்கு எடுத்து இயம்ப வழி­வ­குத்­தி­ருக்­கி­றது. 

திம்பு பேச்­சு­வார்த்­தையில் எங்­க­ளையும் அழைத்­தி­ருக்க வேண்­டு­மென கோரிக்கை விடப்­பட்ட காலத்­தி­லி­ருந்து கிழக்­குக்கு ஒரு அலகு வேண்­டு­மென்று தீட்­சண்­யத்­துடன் போராடி இன்று கிழக்கு குறித்த ஒரு சமூ­கத்­துக்கே உரி­யது என பேச­வைத்­தி­ருக்கும் நிலையை உரு­வாக்­கிய பின்­ன­ணிகள் என்ன என்­பதை தீர்க்க முனைப்­புடன் ஆராய்ந்து பார்க்க வேண்டும். கிழக்கு மாகாண சபையில் தமிழ் மக்­களின் பிர­தி­நி­திகள் செல்லாக்காசு எனப் பேசப்­படும் நிலைக்கு தள்­ளப்­பட்­டி­ருப்­ப­தற்கு தமிழ் மக்கள் விட்ட தவ­று­களே கார­ண ­மென்­பது அப்­பட்­ட­மான உண்­மை தான். 

கறையான் புற்­றெ­டுக்க கரு ­நாகம் குடி கொண்ட கதை போல் ஆகி­விட்­டது. 

தமிழ் மக்­களின் இன்­றைய பரி­தாப நிலை. தமி­ழர்­களின் தலை­மைத்­துவம் எப்­பொ­ழுதும் உணர்ச்சிபூர்­வ­மாக காணப்­ப­டு­வதன் கார­ண­மா­கவே அது தனது இலக்கில் இது வரை வெற்­றி­பெற்­ற­தாகத் தெரி­ய­வில்­லை­யென்ற ஆக்கபூர்­வ­மான கருத்­தொன்று தெளிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. அறிவு பூர்­வ­மற்ற நிதான பூர்­வ­மற்ற அதே­வேளை தீர்க்­க­த­ரி­சன மற்ற தலை­மைத்­து­வத்­தையே தமிழ் மக்கள் இது வரை கொண்­டி­ருக்­கி­றார்கள். இன்னும் வைத்­தி­ருக்­கி­றார்கள் என்ற விமர்­சன பூர்­வ­மான கருத்­தொன்று சொல்­லப்­பட்­டி­ருக்­கி­றது. 

சுதந்­தி­ரத்­துக்குப் பின் இலங்கைத் தமி­ழர்­க­ளுக்கு தலைமை தாங்­கிய தலை­மைத்­து­வ­மென்ற வகையில் ஜி.ஜி. பொன்­னம்­பலம் தந்தை எஸ்.ஜே.வி. செல்­வ­நா­யகம் இதன் பின் ஆயுதப் போர் தொடங்­கிய காலத்தில் பல தலை­மை­களை வட­கி­ழக்கு மக்கள் கண்­டி­ருக்­கி­றார்கள். அகிம்சை வழிப் போராட்டம், அற­வழிப் போராட்டம் அர­சியல் வழிப் போராட்டம் என்ற இரு­கைங்­க­ரி­யங்­களில் சுதந்­தி­ரத்­துக்­குப்பின் தலைமை தாங்­கி­ய­வர்கள் என்ற வகையில் தந்தை செல்­வ­நா­யகம் ஜி.ஜி. பொன்­னம்­பலம் ஆகிய இரு­வரும் முதன்மை பெற்­ற­வர்­க­ளாக காணப்­ப­டு­கின்­றார்கள். 

இவ்­வி­ரு­வ­ரது அர­சியல் ஞானம் கல்விப் புலம் சமூ­கத்­தளம் தலை­மைத்­துவ ஆளுமை என்­ப­வை­யெல்லாம் யாருக்­கா­வது எடுத்துக் கூறு­வ­தாக இருந்தால் அது கொல்லன் தெருவில் ஊசி­விக்­கிற கதை­யா­கி­விடும். இவர்கள் உணர்ச்சிச் செருக்கு மிக்­க­வர்­க­ளாக தமது சமூ­கத்தை வழி­ந­டத்­தி­னார்­களா என்­பது இங்கு எழுப்­பப்­ப­டு­கின்ற கேள்­வி­யாகும். மகாத்மா காந்­தியின் அகிம்சை வாதத்தை பூர­ண­மாக ஏற்றுக் கொண்டு காந்­தியை விட ஒரு படி மேலாக உள்­நாட்டு பேரி­ன­வா­தி­க­ளுடன் போரா­டி­யவர் தந்தை செல்­வ­நா­யகம். 

ஆங்­கில ஏகா­தி­பத்­தி­யத்­துடன் முரண்­பட்ட மகாத்மா காந்­திக்­கி­ருந்த சவால்­க­ளை­ விட உள்ளூர் பேரி­ன­வா­தி­க­ளுடன் அகிம்சை போரை மிக நிதா­ன­மா­கவும் கவ­ன­மா­கவும் காத்­தி­ர­மா­கவும் செய்து காட்­டிய தந்தை செல்­வ­நா­யகம் உணர்ச்­சியை எந்த இடத்­தி­லா­வது கொட்­டி­ய­தாக வர­லாற்றில் எந்த இடத்­திலும் பதி­யப்­ப­ட­வில்லை. இவ­ரு­டைய தலை­மைத்­து­வத்தின் உன்­னத நிலையால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டதன் கார­ண­மா­கவே முஸ்லிம் காங்­கி­ரஸின் பிதா­மகர் அஷ்ரப் அவரை குரு­வாக ஏற்றுக் கொண்டார். 

1960 களில் பொத்­துவில் தொகு­தியில் போட்­டி­யிட்டு தோற்­க­டிக்­கப்­பட்ட சேர் ராசிக் பரீத் மட்­டக்­க­ளப்பில் போட்­டி­யிட்டு (1965) தோற்றுப் போன மக் கான் மரைக்கார் மற்றும் அல் ஹாஜ் காரி­யப்பர் அல்ஹாஜ் முக­மது அலி (மூதூர்), ஏ.எல்.அப்­துல் ­மஜீத், ஜனாப் முஸ்­தப்பா, எம்.அப்துல், மஜீது ஜனாப் எம்.சி.அக­மது ஆகியோர் தந்தை செல்வா தலை­மை­ தாங்கிய தமி­ழ­ரசுக் கட்­சியில் சேர்ந்து கொண்­டதும் காலப்­போக்கில் அர­சாங்­கங்­க­ளுடன் இணைந்து கொண்­ட­மையும் மறுக்க முடி­யாத வர­லாற்று ஆதா­ரங்கள். 

தந்தை செல்வா தேசிய உடன்­பாட்­டு­டைய அர­சியல் போக்கை அனு­ச­ரித் துப்போக வேண்­டு­மென்­ப­தற்­கா­கவே பண்டா – செல்வா உடன்­ப­டிக்­கை­யையும் (27.07.1957) பண்டாரநாயக்கா – டட்லி செல்வா ஒப்­பந்­தத்தை (24.03.1965) ஐக்­கிய தேசிய கட்சி அர­சாங்­கத்­து­டனும் செய்து கொண்­டது மட்­டு­மன்றி 1965 ஆம் ஆண்டு டட்லி தலை­மை­யி­லான ஐக்­கிய தேசியக் கட்சி அர­சாங்­கத்தில் தந்­தை­ய­வர்கள் தமிழரசுக்கட்சி சார்பில் திருச்­செல்வத்தை உள்­ளூ­ராட்சி அமைச்­ச­ராக்க உடன்­பாடு காண முனைந்தார். 

கேவலம் நடந்த­தென்ன? கோணேஷர் கோவிலை புனித நக­ராக ஆக்­கு­வதை நான் எதிர்க்­கின்றேன் என ஒரு பௌத்த விகா­ரா­தி­பதி தனது எதிர்ப்பைக் காட்­டி­யதன் கார­ண­மாக ஒட்­டி­யி­ருந்த அர­சாங்­கத்­தி­லி­ருந்­து­வெ­ளி­யேற வேண்டி­யி­ருந்­தது. இங்கு தமிழ்த் தலை­மைத்­து­வங்கள் உணர்ச்சி வசப்­பட்­டன தமிழ்த் தலை­மைத்­து­வத்தின் மாபெ­ரிய தவறு தான். தமி­ழர்­க­ளுக்கு தலைமை தாங்­கிய இன்­னு­ மொரு தலை­வ­ராக விளங்­கி­யவர் ஜி.ஜி.பொன்­னம்­பலம் அவ­ரது அர­சியல் புலமை மொழி ஞானம் தல­மைத்­துவ செருக்கு எல்லாம் அறி­யப்­பட்ட ஒரு விட­யமே. 

1952 ஆம் ஆண்டு டட்லி சேன­நா­யக்­கா வின் தலை­மை­யி­லான ஐக்­கிய தேசிய கட்சி அர­சாங்­கத்தில் ஜி.ஜி.பொன்­னம்­பலமும் கே.கன­க­ரத்­தினமும் அமைச்சர் பத­வி­களை ஏற்றுக் கொண்­டார்கள். டட்லி சேன­நா­யக்­காவின் பதவி வில­க லைத் தொடர்ந்து சேர் ஜோன் கொத்­த­லா­வலை ( 12.10.1953) பிர­த­ம­ராகப் பத­வி­யேற்­றதைத் தொடர்ந்து தமிழ் மக்­க­ளுக்கு என்ன நடந்­தது? தமி­ழர்­களை அர­சாங்­கத்தில் இணைப்­ப­தனை ஆரம்­ப­காலம் முதல் உள்­ளேயும் வெளி­யேயும் விரும்­பாது எதிர்ப்புக் காட்டிக் கொண்­டி­ருந்த ஜோன் கொத்­த­லா­வலை அர­சாங்­கத்­தி­லி­ருந்து பொன்­னம்­பலம் கன­க­ரத்­தினம் ஆகியோர் 1954 ஆம் ஆண்டு அர ­சாங்­கத்தை விட்டு வெளி­யே­றி­னார்கள் என் பதை விட வெளி­யேற்­றப்­பட்­டார்கள். 

1965 ஆம் ஆண்டு மீண்டும் டட்லி சேன­நா­யக்­காவின் தலை­மை­யி­லான ஐக்­கிய தேசி யக் கட்சி அர­சாங்கம் ஆறா­வது பாரா­ளு ­மன்றத்தை அமைத்துக் கொண்­டது. ஜி.ஜி.பொன்­னம்­ப­லத்தின் தலை­மை­யிலான தமிழ்க்­காங்­கிரஸ் மீண்டும் இணைந்து கொண்­டது உடுப்­பிட்டி தேர்தல் தொகு­தி யில் போட்­டி­யிட்டு அமோக வெற்றி கொண்ட மு.சிவ­சி­தம்­பரம் இப்­பா­ரா­ளு­மன்­ற த்தில் உப சபா­நா­யகர் பத­வியை ஏற்றுக் கொண்­டதுடன் உள்ளும் புறமும் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு நிறை­வான ஆத­ரவை வழங்­கி­யி­ருந்­தது. 

மறு­புறம் தந்தை செல்­வ­நா­ய­கத்தின் தலை­மை­யி­லான இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்சி 14 இடங்­களில் வட கிழக்கில் வெற்றி பெற்­ற­துடன் மறை­மு­க­மான உடன்­பாட்­டுடன் டட்லி – செல்வா உடன்­ப­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டது. இந்த உடன்­ப­டிக்­கையில் கூறப்­பட்­ட­தெல்லாம் வட கிழக்கு மாகா­ணத்தில் பிராந்­திய சபைகள் அமைக்க இணக்கம் காணப்­பட்­டது. அத்­துடன் வட கிழக்கில் தமிழ் மொழியை அமு­லாக்­கு­வது சிங்­கள குடி­யேற்­றங்கள் இனிமேல் செய்­யப்­ப­டு­வ­தில்­லை­யென்ற உடன்­பாட்­டுடன் செய்­யப்­பட்ட டட்லி – -செல்வா ஒப்­பந்தம் தமிழ் மொழி விசேட ஏற்­பா­டுகள் பாரா­ளு­மன்­றத்தில் (08.01.1966) கொண்­டு­வ­ரப்­பட்ட போது நாட்டில் வன்­செ­யல்கள் ஆரம்­பித்து வைக்­கப்­பட்­டன. 

நாட்டில் அவ­ச­ர­கால நிலை பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டதும் இதனைத் தொடர்ந்து 1968 ஆம் ஆண்­டுடன் டட்­லி– ­செல்வா உடன்­ப­டிக்கை கிழித்­தெ­றி­யப்­பட்­டது. இவ்­வாறு தமிழ்த் தலை­வர்­களின் உணர்ச்­சி­ம­ய­மான போக்­குகள் கார­ண­மா­கவே அவர்கள் இந்த நாட்டில் அந்­நி­ய­ம­யப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றார்கள். தங்­க­ளது கௌர­வத்­தையும் சுயா­தீ­னத்­தையும் இனத்­து­வக்­க­லாசா­ரத்­தையும் பிர­தேச வாண்­மை­யையும் அடகு வைக்கத் தவ­றி­யதன் கார­ண­மா­கவே இன்று தமிழ்ச் சமூகம் தோற்­றுப் ­போன சமூ­க­மாக அடை­யா ளப்படுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது. தமிழ் மக்கள் தமது உரி­மைக்­காகப் போரா­டு­கின்ற போது பெரும்­பான்மை இனத்­தையும் அர­வ­ணைத்துப் போராடி இருந்தால் தோற்­றுப்­போ­யி­ருக்­க­மாட்­டார்கள் என்ற புதிய கண்­டு­பி­டிப்­பொன்று சிபார்சு செய்­யப்­பட்­டி­ருக்­கி­றது. 

1947 ஆம் ஆண்டு அல்­லது அதற்கு முதல் வட­கி­ழக்கு தமிழர்கள் இலங்கை தேசிய காங்கிரஸ் நிறுவப்பட்ட காலத்திலிருந்து மாவட்ட சபை அமைப்பு வரை இன்னும் சொல்லப் போனால் வடக்கு மாகாண சபை அமைக்கப்பட்டது வரை ஜனநாயகப் பாரம்பரியங்கள் மீது நம்பிக்கை கொண்டவர்களாக இன்னுமொரு வகையில் ஜனநாயக மரபு முறைகளை சொல்லிக்கொடுத்த வர்களாக இருந்தும் கூட ஏமாற்றப்பட்டவர்களாகவே இருந்து விட்டார்கள். இணைந்தும் அனுசரித்தும் போக வேண்டு மென்றததத்துவம் ஒரு உன்னத மான உயர்ந்த தத்துவமென்பது மறுப்பதற்கில்லை. 

புத்தளம் ஜும்மா பள்ளி வாசலுக்குள் நுழைந்து (02.10.1976) மேற்கொள்ளப்பட்ட அடாவடித்தனம் தம்புள்ளை பள்ளிவாசல் பாணந்துறை வியாபார நிலையம் குருநாகல் பள்ளிவாசல் தாக்குதல்கள் கண்டி காலி மாத்தறை பள்ளிவாசல் கெடுபிடிகள் பர்தா முஸ்லிம் பெண்கள் அணியக்கூடாது ஹிஜாப் அணிந்து வரக்கூடாது ஹலால் உணவு இலங்கைக்கு வேண்டற்பாலது. 

முஸ்லிம் மக்களுக்கெதிரான கேகாலை மாவட்ட ஒன்று கூடல் (25.02.2013) முஸ்லிம் மக்களுக்கெதிராக ஒட்டப்பட்டுக் கொண்டிருக்கின்ற சுவரொட்டிகள், காணிப்பறிப்புக்கள், விகாரை அமைப்புக்கள், தொல் பொருள் ஆய்வுகள் என்ற இன்னோரன்ன விடயங்கள் உணர்ச்சிமயமான அரசியல் ஆக்கப்படக்கூடாது என்பதில் முஸ்லிம் மக்கள் பொறுமையையும் நிதானத்தையும் அமைதியையும் நிறையப் பேணுவதன் மூலம் எல்லா சலுகைகளையும் உரிமைக ளையும் வசதி களையும் பெற்று வாழ முடி யுமென்பதை தீர்மானிக்க வேண்டியவர்கள் முஸ்லிம் மக்கள் என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.


யாழ். பல்கலையால் தடைசெய்யப்பட்ட ‘‘எங்கள் கதை" காணொளி


யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களின்
உருவாக்கத்தில் 'எங்கள் கதை' எனும் தலைப்பில் அமைந்த நாடக ஆற்றுகை யாழ்.பல்கலை நிர்வாகத்தினால் தடை விதிதக்கப்பட்ட நிலையிலும் ஏனைய பீட மாணவர்களது ஒத்துழைப்புடன் அரங்கேற்றப்பட்டது.

குறித்த நாடக ஆற்றுகை ஏற்பாட்டுக் குழுவினால் யாழ்.பல்கலை நிர்வாகத்திடம் முன்னர் அனுமதி பெறப்பட்டு 26.06.2014 அன்று பல்கலை வளாக திறந்த வெளி அரங்கில் காண்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

   

எனினும் குறித்த நாடகத்தில் அரசியல், தனிப்பட்டவர்களை குத்திக் காட்டுவதாக அமைவதால் இதனைத் தடை செய்வதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

அன்றைய தினமே குறித்த நாடகத்தை ஆற்றுகை செய்ய வேண்டும் எனவும் இந்த நாடகத்தில் குறிப்பிடப்படவுள்ள விடயங்கள் மாணவர் நலன் சார் விடயங்கள் எனவும் கண்டிப்பாக இவ்வாறான நாடக ஆற்றுகை மூலமே எமது பிரச்சினைகள் வெளிக்காட்ட முடியும் என அங்கு குழுமியிருந்த ஏனைய மாணவர்கள் தமது ஆதரவை தெரிவித்தனர்.

இவற்றுடன் கலைப்பீடம் மற்றும் முகாமைத்துவ பீட மாணவ ஒன்றியங்களும் மற்றும் ஏனைய மாணவர்களின் ஒத்துழைப்புடன் அன்றைய தினமே மதியம் 12.30 மணியளவில் அரங்கேற்றப்பட்டது. இந்த ஆற்றுகையன் போது நாடக குழுவினருடம் பார்ப்பதற்காக குழுமி நின்ற மாணவர்களும் ஒன்றாக இணைந்து ஆடிப் பாடி தமது உள்ளக் கிடக்கைகளை வெளிக் காட்டினர்.

இதேவேளை, முன்னர் காண்பிக்கப்படாத நாடக ஆற்றுகையினை பார்வையிடாது அதில் வரும் விடயங்கள் பற்றி விமர்சிப்பதுடன் அதனை தடை செய்வது எந்த வகையில் நியாயம் என நாடகத்தை பார்க்க வந்த மாணவர்கள் உட்பட ஏனையவர்கள் விசனம் தெரிவித்தனர்.

நாடக ஆற்றுகை குறித்து நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் கருத்து தெரிவிக்கையில், குறித்த நாடகம் எங்களுடைய கதைகளை சொல்வனவாகவே உள்ளது. இது எந்த அரசியல் சம்பந்தமாகவோ அல்லது யாரையும் குத்திக் காட்டுவதாக அமையவில்லை. பள்ளி தொடக்கம் பல்கலை வரை எம்மைப் போன்ற மாணவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் சமூக பிரச்சனைகளை வெளிக்கொண்டு வருவதாகவே அமைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
















நன்றி-உதயன் ,புகைப்பட உதவி -மயூரப்பிரியன்

இன்றைய நாள் எப்படி 01.07.2014

இன்றைய நாள் எப்படி

தின பலன்
இன்றைய தினம் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். நட்பு வட்டாரம் விரியும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். உடல் நிலை சீராக அமையும். உறவினர்களின் வருகையுண்டு. கனவுத்தொல்லை, தூக்கமின்மை விலகும். பணவரவு திருப்தி தரும். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். பிரபலங்களைச் சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் மகிழ்ச்சியுண்டு. அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்
இரண்டு மூன்று நாட்களாக தடைபட்டுவந்த காரியங்களெல்லாம் இன்று சுமுகமாக முடியும். கணவன்-மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவீர்கள். சொந்தம்-பந்தங்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சகோதர வகையில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் மறைமுக போட்டிகளை வெல்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். சக ஊழியர்களின் ஆதரவு உண்டு. அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு
வீண் செலவுகளை தவிர்ப்பீர்கள். பேச்சில் தன்னம்பிக்கை பிறக்கும். குடும்ப வருமானத்தை உயர்த்த ஆலோசனை செய்வீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவை பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களின் தேவையறிந்து உதவுவீர்கள். முன் கோபம் குறையும். தந்தையின் உடல் நிலை சீராகும். வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சி தரும். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்
மதியம் 2.00 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். யோகா, தியானம் என மனம் செல்லும். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்தியோகத்தில் ஓரளவு வேலைச்சுமை குறையும். மாலையிலிருந்து மகிழ்ச்சி தொடங்கும். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்துப் போகும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. சகோதர வகையில் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மதியம் 2. 00 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் முன்யோசனையுடன் செயல்படப்பாருங்கள். அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்
இன்றைய தினம் திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க வேண்டும் என எண்ணுவீர்கள். உடல் ஆரோக்யம் திருப்திகரமாக இருக்கும். கையில் காசு பணம் தேவையான அளவு இருக்கும். சகோதரவகையில் மகிழ்ச்சி தங்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே
எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். வாகனத்தை சீர்செய்வீர்கள். வியாபரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். தாய்வழி உறவினர்களால் நன்மையுண்டு. வெளிவட்டாத்தில் மதிக்கப்படுவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

 விருச்சிகம்
திறமையுடன் செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். மனக்குழப்பங்கள் நீங்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வேற்று மதத்தினரால் நன்மைக் கிட்டும். முன்கோபம், வீண் அலைச்சல் விலகும். தாயாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு
மதியம் 2.00 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் வருந்துவீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களின் அணுகு முறையை மாற்றுங்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். மாலைப் பொழுதிலிருந்து எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்
குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். பணவரவு திருப்தி தரும். தாய்வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். புதுப் பொருள் சேரும். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி மதிப்பார். மதியம் 2. 00 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் நிதானித்து செயல்படப்பாருங்கள். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை
வெளியூரிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். குடும்பத்தினருடன் கலந்துரையாடி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் வேலைசுமை குறையும். உடன்பிறந்தவர்களின் அதரவு கிட்டும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் குறையும். வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஆடம்பரச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். நட்பு வட்டாரம் விரியும். அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களால் இருந்துவந்த தொல்லைகள் அகலும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உறவினர்கள், நண்பர்களின் சந்திப்பு நிகழும். எதிர்காலத்திற்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்

இங்கிலாந்து ரசிகரின் காதை கடித்து துப்பிய உருகுவே ரசிகர்... வீடியோ


பிரேசில் நாட்டில் நடந்து வரும் உலகக்கோப்பை
போட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த ஒரு போட்டியில் இங்கிலாந்து அணி உருகுவே அணியுடன் மோதியது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 1-2 என்ற கோல்கணக்கில் உருகுவே அணியிடம் தோல்வி அடைந்தது.

இந்த போட்டியை ரசித்துக்கொண்டிருந்த இங்கிலாந்து ரசிகர் ஒருவர் உருகுவே அணியின் வெற்றியை பொறுத்துக்கொள்ள முடியாமல் உருகுவே அணி வீரர்களை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உருகுவே ரசிகர் ஒருவர் இந்த நபரின் காதை கடித்து துப்பியுள்ளார். இதனால் கடும் வலியால் அவதிப்பட்ட இங்கிலாந்து நபர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

காதின் ஒரு பகுதியை இழந்த இங்கிலாந்து நபரின் பெயர் Robert Farquharson என விசாரணையில் தெரிய வந்துள்ளது. காதை கடித்த நபர் தலைமறைவாகிவிட்டதால் அவரை தேடும் பணியில் பிரேசில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தை பார்த்துக்கொண்டிருந்த ஒரு நபர் வீடியோ எடுத்து அதை ஆதாரமாக நேற்று காவல்நிலையத்தில் இந்த வீடியோவை சமர்ப்பித்துள்ளார்.

இங்கிலாந்து ரசிகர் Robert Farquharson அவர்களின் காதை கடித்த நபர் குறித்த தகவல் தெரிந்தால் உடனடியாக 0800 282 591 என்ற எண்ணுக்கு தகவல் கொடுக்குமாறு பிரேசில் போலீஸார் அறிவிப்பு செய்துள்ளனர்.


குற்றவாழிகளை தெரியேல்லையாம் மக்களிடம் உதவி கேட்கும் பொலீஸ்


கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சுக்குள்
அத்துமீறி நுளழந்த பௌத்த துறவிகளை அடையாளம் காணமுடியவில்லை என்றும் அதற்கு பொதுமக்களின் உதவியை பொலிசார் நாடியுள்ளனர். கடந்த ஏப்பிரல் 23 ஆம் திகதி அமைச்சு அலுவலகத்திற்குள் வட்டரக்க விஜித தேரர் இருப்பதாக கூறி அவரை தேடிவந்த சிங்கள துறவிகள் தாம் பொது பல சேனா அமைப்பினர் எனப்பிரஸ்தாபித்திருந்தனர். இருந்தும் தற்போது பொலிஸார் அவர்களை அடையாளம் காண முடியவில்லை என தெரிவித்துள்ளமை வியப்பளித்துள்ளது. 
முன்னர் விசாரணைகளில் அமைச்சின் சி.சி.ரி.வி கமராக்களும் செயற்படவில்லை எனப் பொலிஸார் பொய்கூறியிருந்தனர். இருந்தும் இந்த சம்பவத்தில் எடுக்கப்பட்ட காணொளிகள் வெளியாகியிருப்பதனால் அதில் தோன்றும் முகங்களையும் அடையாளம் காணமுடியாதா? என பொதுமக்கள் விசனமடைந்துள்ளனர்.

அண்மையில் தாக்கப்பட்ட விஜித தேரரும் தானே விழுந்து படுத்திருந்ததாக கூறிய் பொலிஸார் தேரரை மிரட்டி பொய் வாக்குமூலம் பெற்றதாக அவரது சட்டத்தரணி தெரிவித்திருந்தார். இதே போற்று அண்மையில் வத்தளையில் சமூர்த்தி உத்தியோகத்தர் ஒருவரை மரத்தில் கட்டி வைத்திருந்த மேவின் சில்வா பின்னர் விசாரணையில் அவரே மரத்தில் கட்டபட்டு கிடந்தார் என பொலிசாரால் விசாரணை திசை திருப்பபட்டது என்ாது குறிப்பிடத்தக்கது.
அமைச்சுக்குள் நுழைந்த பொதுபல சேனாவின் காணொளி

முன்னைய செய்தி (23.04.2014)
அமைச்சர் ரிசாத் பதியுதீனின் அமைச்சுக்குள் பொது பல சேனா அமைப்பின் பிக்குமார் இன்று புதன்கிழமை (2014-04-23) காலை 11.30 மணியளவில் அத்துமீறி உள்நுழைந்து தேடுதல் நடத்தியுள்ளனர்.
அமைச்சுக்குள் அத்துமீறி உள்நுழைந்த பொதுபலசேனா அமைப்பின் பிக்குமார் இவ்வமைச்சில் வட்டரக விஜித தேரரை மறைத்து வைப்பதாகவும் அவரை உடனடியாக எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டனர்.
அமைச்சின் முற்றத்தில் ஊடகவியலாளரை சந்தித்த பொதுபலசேனாவின் பிக்குமார் பின்னர் அமைச்சுக்குள் நுழைந்து வட்டரக தேரருக்கு அமைச்சர் ரிசாத் ஆதரவு வழங்குவதாகவும் அவரை இங்கு ஒழித்து வைத்துள்ளார் எனவும் அதிகார தொணியில் பேசினர்.
அமைச்சின் ஒவ்வொரு அறையாக தேடுதல் நடத்திய இவர்கள். இதன் போது கருத்து தெரிவிக்கையில் முஸ்லிம்களின் பிரச்சினையை முஸ்லிம்களிடம் வைத்துக்கொள்ளுங்கள் பௌத்த பிக்குகளிடம் இதனை குறிப்பிட வேண்டாம் என தெரிவித்தனர்.
பொதுபல சேனா இறுதியாக கைத்தொழில் வனிகத்துறை அமைச்சின் செயலாளரை சந்தித்து பேசியுள்ளனர். இதன் போது அமைச்சின் செயலாளர் வந்த பிக்குமாரை இருந்து ஆகாரம் அருந்தி செல்லுமாறு கூறிய போது வரும்நாட்களில் ஒரு மரணம் விழும் அப்பொழுது வந்து சாப்பிடுகிறோம் என கூறி இவ்விடத்தை விட்டு அகன்று சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
bodu balasena visit to risad office1bodu balasena visit to risad office1.jpg2bodu balasena visit to risad office1.jpg3  bodu balasena visit to risad office1.jpg5bodu balasena visit to risad office1.jpg6bodu balasena visit to risad office1.jpg7    bodu balasena visit to risad office1.jpg11bodu balasena visit to risad office1.jpg12